Monday, 13 August 2018

STEPHEN HAWKING ன் எச்சரிக்கை


   நம்முடைய உலகத்தில் நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றத்தில் இருந்து தப்பித்து உயிர் வாழ வேண்டும் என்றால் அடுத்த நூறு ஆண்டுகளில் உலகத்தை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்று பிரிடிஷ் நாட்டை சேர்ந்த இயற்பியல் வல்லுனரான STEPHEN HAWKING எச்சரிக்கை விடுத்துள்ளார்.


   உலகின் மிக மூத்த விஞ்ஞானியாக இருப்பவர் தான் இங்கிலாந்தை சேர்ந்த MR. STEPHEN HAWKING அவர்கள். இவர் உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அதில் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் STEPHEN HAWKING அவர்கள் BBC க்கு Documentary என சொல்லப்படும் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கி உள்ளார். அதன் மூலம், STEPHEN HAWKINGகிடம் இருந்து உலகிற்கு ஒரு எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. அதில் உலகின் பருவநிலை மாற்றங்கள், மக்கள் தொகை அதிகரிப்பு, தோற்று நோய்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


   இதனால், மனிதர்கள் வாழ வேண்டும் என்றால் இன்னும் 1௦௦ ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வெளியேற வேண்டும் ஏற்றும், மனிதர்கள் வேறு கிரகத்திற்கு சென்று தான் வாழ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment