Wednesday, 24 October 2018

தமிழன் அறியாத தமிழகத்தின் ரகசியங்கள்.

 

   தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுகள், பலவரலாற்று சிறப்புகளையும், புராண கூறுகளையும், விளக்குகின்றனர். தஞ்சாவூரில் உள்ள இந்த பிரகதீஸ்வரர் கோவிலின் கல்வெட்டுகளில் ஏராளமான கடவுகளின் உருவங்களும், முனிவர்கள், மற்றும் மகான்கள் போன்ற உருவங்களும் செதுக்கப்பட்டு உள்ளன.

   கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கி.பி. 1010ல் கட்டப்பட்ட இந்த கோவிலில் இருக்கும் ஒரு கல்வெட்டில், ஐரோப்பாவைப் போன்று காட்சி அளிக்கும் ஒரு வெளிநாட்டு மனிதரின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த உருவம் பிரஞ்சு நாட்டை சேர்ந்த ஒரு அரசரான இரண்டாம் ராபர்ட்டின் உருவம் என்றும் நம்பப்படுகிறது. இதே போன்று இந்த கோவிலில் சீனாவை சேர்ந்த ஒரு மனிதரின் உருவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வரலாற்று ஆய்வாலர்கள் கூறும்போது 1500ம் ஆண்டுகள் வரை உலகத்தில் உள்ள நாடுகள் இணைக்கப்பட வில்லை என என்று கூறுகின்றனர்.

   வரலாற்று சான்றுகளின்படி, இந்த மண்ணில் கால் பதித்த முதல் ஐரோப்பியர் வாஸ்கோடகாமா தான். அதுவும் 1498, அதாவது, இந்த கோவிலை கட்டி, 500 வருடங்கள் கழித்து தான். இதனால் இந்த கோவிலை கட்டிய மன்னர், திரு.ராஜராஜ சோழன் அவர்கள், பிரஞ்சு மற்றும் சீன நாடுகளிடம் தொடர்பில் இருந்தாரா. அப்படியே இருந்து இருந்தாலும் அவர்கள் எப்படி தொடர்பில் இருந்து இருக்கமுடியும் என்று, இன்று வரை குழப்பத்தில் உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

    கும்பகோணத்தில் உள்ள நாட்சியார்கள் கோவிலில் இங்குள்ள ஒரு மிகப்பெரிய மர்மத்திற்கு மிகவும் பிரபலமானது. இந்த கோவிலில் உள்ள கல்கருடனின் சிலையும், மிகவும் பிரபலமானது. தமிழ் மாதங்களான மார்கழி, மற்றும் பங்குனியில் இந்த சிலை கோவிலை விட்டு வெளியே எடுத்து செல்லபடுகிறது. இந்த சிலை கோவிலை விட்டு செல்ல செல்ல இதன் எடை அதிகரிக்குமாம். இதனால் இந்த சிலையை தூக்கி செல்லும் நபர்களின் எண்ணிக்கை, 4,8,16,32,64, பெருகிக்கொண்டே போகிறது என்றும். அதே சிலையை திரும்ப கோவிலுக்கு எதுத்து செல்லும் போது இதன் எடை குறைவதால், சிலையை தூக்கி செல்பவரின் என்னை 64,32,16,8,4 என்று குறைந்துவிடும் என்றும். இதை சார்ந்தவர்கள் கூறுகின்றன. இது பழகாலமாக மிகப்பெரிய மர்மமாகவே உள்ளது.

No comments:

Post a Comment