Saturday, 13 October 2018

முகம் மாற்று அறுவை சிகிச்சை


   அமெரிக்காவின் மாநிலத்தில் ப்ளோரிடா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர் கேட்டி. படிப்பிலும் விளையாட்டிலும் மிகுந்த திறமை சாலை, இவருக்கு 16 வயது இருக்கும் போது இவரது குடும்பம் கெண்டகிக்கு குடியேறியது. அப்பகுதியில் உள்ள புதிய பள்ளியில் சேர்ந்தார், பின்னர் தன்னுடன் பயின்ற மாணவர் ஒருவரை பிடித்துவிடவே இருவரும் மனதார காதலித்தனர். 2014 ம் ஆண்டு கேட்டிக்கு தொடர்ச்சியாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தான் இந்த விபரீதம் நடந்தது. தனது காதலரின் போனில் இன்னொரு பெண்ணின் குறுஞ்செய்தி படித்துவிட்டார். இதனால் மனம் உடைந்த கேட்டின் வீட்டில் உள்ள துப்பாகியை எடுத்து, குளியலைறை சென்று தனது முகவாயில் வைத்து தன்னை தானே சுட்டுகொண்டார்.

    துப்பாக்கியின் சத்தம் கேட்டு வந்த கேட்டியின் பெற்றோர்கள், தனது மகளின் நிலைமையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் உடனே மருத்துவமனையில் சேர்த்து கேட்டியின் உயிரை காப்பற்றி விட்டனர். ஆனால் அவரது முகம் முற்றிலும் சிதைந்து இருந்தது. இதனால் மூச்சு விடுவது, உணவு உட்கொள்வது எல்லாம் சிரமமாக இருந்ததால் கேட்டி நீண்ட நாட்கள் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டு இருந்தார். சில மாதங்களுக்கு பிறகு கேட்டியின் பெற்றோர்கள், அவரின் மனதை மாற்றி முகம் மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தனர்.

    சில முன்னணி மருத்துவமனைகள் தங்களால் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். இறுதியில் க்ளிவ்லாண்ட் மருத்துவமனையில் முயற்சி செய்ய சொன்னார்கள். அங்கே முகம் மாற்று அறுவை சிகிச்சைக்காக பெயரை கொடுத்துவிட்டு காத்திருந்தார் கேட்டி.

    2017 ம் ஆண்டு ஆண்ட்ரியா என்ற 31 வயது பெண் இறந்து போனார். அவருடைய முகத்தை கேட்டிக்கு பொருத்தும் முயர்ச்சில் இறங்கினர் மருத்துவர்கள். உரு குலைந்த முகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு முகம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதன் மூலம் அமெரிக்காவிலேயே மிக இளம் வயதில் முகம் மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

   இதன் பிறகு கேட்டி இயல்பாக சுவாசிப்பது மட்டும் இல்லாமல் உணவும் உட்கொள்ள தொடங்கினார். பார்வை பறிபோனதால், பிரெய்லி முறையில் படிக்கவும் ஆரம்பித்தார். “இது எனக்கு கிடைத்த இரண்டாவது வாழ்கை, துப்பாக்கியில் சுட்ட பிறகான வாழ்கையில் என் பெற்றோர் ஒரு நிமிடம் கூட என்னை பிரிந்து இருந்தது இல்லை. நான் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டனர். எப்போதும் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருந்தனர். இவ்வளவு நல்ல பெற்றோர்களை விட்டு இறந்து போக துணிந்ததை நினைத்து வருத்தமாக இருந்தது. என்னுடைய பழைய முகம் கிடைக்க வாய்ப்பு இல்லை. 

    ஆனால் விபத்துக்கு பிறகான என் முகத்தை நினைக்கும் போது இந்த புதிய முகம் மிகவும் அழகாக இருக்கிறது. படிப்பை முடித்த பிறகு என்னை போல் தற்கொலையில் இருந்து தப்பியவர்களுக்காக வேலை செய்ய போகிறேன். தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க போகிறேன்.” என்று தனது விருப்பத்தை தெரிவித்தார் கேட்டி.

No comments:

Post a Comment