Sunday, 14 October 2018

நீதி தேவதையின் கண்கள் ஏன் கட்டப்பட்டுள்ளது



       குற்றவாளிகள், சாட்சி சொல்வபர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் நாடகமாடி தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்படுமாறு செய்யலாம் என்று எகிப்திய பாரோக்கள் கருதினர். அதனால் வழக்கு விசாரணையை சிறிதும் வெளிச்சமில்லாத இருட்டறையில் நடத்தும் வழக்கத்தை மேற்கொண்டனர். அதன் காரணமாக, குற்றச்சட்டப்பட்டவர், வக்கீல்கள், நீதிபதி ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது. உண்மையைத் தவிர வேறு எதனாலும் நீதிபதியை அசைக்க முடியாது.


 

    இந்தக் கொள்கையின் விளைவாகத்தான் தற்போதைய நீதிமன்றங்களில் நாம் பார்க்கும் நீதி தேவதையின் சிலை ஏற்பட்டது. அதன் கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். கையில் தராசு ஏந்தியிருக்கும். யாரைப் பார்த்தும் நீதியை வளைக்கக் கூடாது, தராசுத் தட்டு போல நீதி அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட வேண்டும் என்பதை இவை குறிக்கின்றன.


No comments:

Post a Comment