மராட்டியர்கள் தந்த உணவு கொடை தான் சாம்பார்.
ஆனால் மராட்டியர்கள் புளி கொழம்பு வைப்பதில் திறமைசாலிகள். தஞ்சையை ஆண்ட முதல்
மராட்டிய மன்னரான வென்கொஜியின் மகன் சாஹூஜி காலத்தில் தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சி பொறுப்பை ஏற்றவர் சாஹூஜி.
மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹுஜிக்கு பிடித்த உணவுகளில் ஓன்று.
ஆனால் சாஹுஜிக்குப் பிடித்தமான குழம்பை
வைப்பதற்கு அடிப்படை தேவையான கோகம் புளி ஒரு நாள் வரவில்லை. இதை எப்படி சமாளிப்பது
என்று யோசித்த சாருவிலாச போஜன சாலை எனப்பட்ட தஞ்சை சமயலறையின் நிபுணர்கள், நாம்
பயன்படுத்தும் புளியம் பழத்தை கொண்டு முதன் முறையாக ஒரு குழம்பை வைத்தார்கள்.
அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருட்களையும் சேர்த்திருந்தார்கள், அதுவே
இன்றைய சாம்பாரின் மூல கர்த்தாவாகும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹுஜிக்கு
இந்த புதிய குழம்பு புடித்து போய்விட்டது. எந்த அளவுக்கு புடித்து விட்டது
என்றால், தனது ஒன்றுவிட்ட சகோதரான மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு
விருந்தில் சாம்பாரை படைத்துள்ளார். அதன் பிறகு சாம்போஜியை பெருமை படுத்தும்
விதமாக அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பெயர் வைத்தார். இந்த பெயர் தான்
காலப்போக்கில் சாம்பார் என்று மறுஉரு பெற்றது.
சாம்பார் தொடர்பாக, போஜன குதுகலம், சரபேந்திர
பாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதபட்டன. 17ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த இரண்டு
நூல்களும் உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு
பொதுவாகவே அனைத்தையும் ஆவணபடுத்தும் பண்பு இருந்திருக்கிறது அதன் வெளிபாடு தான்
இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுபிக்கப்பட்ட சரஸ்வதி மஹால் நூலகத்தில் இந்த
நூல்கள் பாதுகாக்கப்பட்டன.
ஆனால் சரபேந்திர பாஸ்திரத்தில், வேப்பம்பூ
சாம்பார் செய்முறை மட்டும் தான் கொடுகக்கபட்டுள்ளதாம். ஒருவேளை அதன் பிறகு மற்ற
சாம்பார்கள் புகழ்பெற்று இருக்கலாம். ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில்
இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ் பேரகராதி குறிபிடுகிறது.
சம்பாரம் என்பது மசாலா பொருட்களை அரைத்துச்
சேர்ப்பது என்றும், அதனால் தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்தது என்று
கூறுகின்றனர்.
No comments:
Post a Comment