சூரிய வெப்பம் அதிகரித்து வரும் நிலையை கண்டு மிகவும் கவலைக்கு உள்ளான விஞ்ஞானிகள், இதற்கு ஒரு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள். எப்போது சூரியன் நாம் தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்தை வெளிபடுத்த போகிறது என்று யாருக்கும் தெரியாது. இன்னும் குறைந்தது ஒரு கோடி வருடங்களுக்கு இல்லை என்றாலும் இப்போதே ஒரு திட்டத்தை உருவாக்கி வைப்பது நல்லது தானே என்கிறார்கள் அமெரிக்க நாசாவில் பணி புரியும் விஞ்ஞானிகள்.
கலிபோர்னியோ பல்கலைகழகம் மற்றும் மிச்சிகன்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு "கிராவிடேஷனல் ஸ்லின்ஷாட்" என்ற
உத்தியில் ஒரு விண்கல் உதவியுடன் பூமியை நகர்த்த முயற்சித்து வருகிறது.
ஆஷ்ட்ராய்ட் எனப்படும் விண் கல்லை வானில் ஏவி, அதன் புவிஈர்ப்பு விசை மூலம் பூமியை
நகர்த்தி புதிய இடத்தில் அமர்த்திவிட்டால் காலம் முழுக்க மனித குலம் குளுமையாக
இருக்க முடியுமாம்.
ஒரு பெரிய விண்கல்லை கண்டுபிடித்து அது பூமியைக்
கவர்ந்து இழுக்கும் வல்லமை உடையது தானா? என்று பரிசோதித்து நமது திட்டத்தை
செயல்படுத்த வேண்டும். இந்த விண்கல் பிறகு வியாழன் கிரகத்தை நோக்கிச் சென்று மேலும் அதிக வலிமை பெற்று, இன்னும் பூமியை சூரியனிடமிருந்து தள்ளி இருக்க
வைக்குமாம்.
பூமியின் சுற்றுப் பாதையைச் சீரமைக்க ஆறாயிரம்
ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆஷ்ட்ராய்ட் நமது பூமிக்கு அருகே செல்ல வேண்டும். இதன்
மூலம் அதிகமாகும் சூரிய உஷ்ணம் நம்மை ஒன்றும் செய்யாது.
கடைசியாக ஒரு வார்த்தை, இந்த திட்டத்தில் ஒரு
சிறு கோளாறும் இருக்கிறது. நாம் போட்ட கணக்கு தப்பாகி விண்கலம் பூமியைச் சற்றே
நகர்த்துவதற்கு பதிலாக பூமியுடன் மோதிவிட்டால், உயிரினமே இருக்காது. அவ்வளவுதான்... பூமி நகர்த்தலில்
ஆபத்தும் வரலாம். “குளு குளு” பூமியாகவும் மாறலாம்.
No comments:
Post a Comment