Wednesday, 17 October 2018

சிகப்பு நாடா பற்றி தெரியுமா?


    இந்தியாவின் சுதந்திரத்திற்கு முந்தைய ஆங்கிலேயர் ஆட்சியில்தான் அரசு நிர்வாகத்தில் சிவப்பு நாடா என்ற முறை கொண்டு வரப்பட்டது. தனக்கு கீழே அடிமைப்பட்டு கிடக்கும் நாட்டின் மக்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக கொண்டு வந்தார்கள்.

    அப்போது இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு கீழே இந்தியர்கள் எழுத்தர் பணிகளை செய்து வந்தார்கள். இவர்கள் எந்த முடிவையும் சுயமாக எடுத்துவிடக்கூடாது என்பதற்காக பிரிடிஷார் சிவப்பு நாடா என்ற திட்டத்தை ஏற்படுத்தினார்கள்.

    சிவப்பு நாடா கட்டப்பட்டு அதிகாரிக்கு அனுப்பப்படும் ஆவணத்தில் என்ன உள்ளது என்பது கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு தெரியாது. அரசாணை ரகசியத்தை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த நடைமுறை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி 65 ஆண்டுகள் ஆன பின்பும் தொடர்கிறது. இன்று நாட்டில் நிலவும் பல்வேறு அதிகாரச் சிக்கல்களுக்கு இந்த சிவப்பு நாடா முறைதான் காரணமாக உள்ளது என்கிறார்கள்.

    சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் ஆய்வு மையம் உலக நாடுகளில் உள்ள அதிகாரமுறை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி இந்தியாவின் அதிகாரமுறை மிகவும் மோசமாக உள்ளது என்று முடிவை வெளியிட்டு உள்ளது. வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அதிகாரமுறை, இந்தியாவை விட நான்றாக உள்ளது. அதிகாரமுறை சிறப்பாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து ஹாங்காங், தாய்லாந்து, தைவான், ஜப்பான், மலேசியா என உள்ளன.

    இந்தியாவில் உள்ள அதிக அதிகாரம் குவிந்துள்ள இந்திய அதிகாரிகளிடம் தனி நபர்களை விட வெளிநாட்டு நிறுவனங்கள்தான் அதிகம் பயப்படுகின்றன என்று மேலும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment