Friday, 19 October 2018

வியர்வை தடுப்பு ஊசி


   சினிமா உலகிலேயே மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. உலகம் முழுவதும் லைவ் வாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகைகள் தங்கள் உடம்பைப் பாதுகாக்க என்னனே பூச்சு வேலைகள் செய்து கொண்டார்கள் தெரியுமா?


   டென்ஷனான இந்த விழாவில் கலந்து கொள்ளும் போது வியர்வை வெள்ளமாகக் கொட்டுமே என்று கவலைப்பட்ட ஹாலிவுட் நடிகைகள் டாக்டர் ரிச்சர்டு ஜியோகாவிடம் சென்று விஷயத்தை சொன்னார்கள், நடிகைகளுக்கு எங்கு எங்கு வியக்க கூடாதோ அங்கே எல்லாம் சில ஊசிகளைச் செலுத்தினார் டாக்டர். பொடாக்ஸ் (botox) எனப்படும் இந்த ஊசி, நரம்பு நுனிகளைச் செயலிழக்கச் செய்து வியர்வை வருவதையே தடுத்து விடுமாம்.


   இதே மாதிரி நம்மூர் கே.ஆர்.விஜயா டைப்பில், வெள்ளைப் பற்கள் வேண்டுமா?, என விளம்பரம் செய்த டாக்டர் டெப்ரா கிலாச்மேனுக்கும் அடித்தது யோகம், லேசர் டெக்னிக் உபயோகித்து பற்களைப் பளிச்சிடச் செய்ய, இவரிடம் ஒரு சிட்டிங்குக்கு 96 ஆயிரம் ரூபாய் பீஸ்.


நம்மூர் நடிகைகளுக்கு இந்த விஷமெல்லாம் தெரியுமா?

No comments:

Post a Comment