வியட்னாமிலும், ஈராக்கிலும் குண்டு போட்டு அலுத்துப் போன அமெரிக்காவுக்கு தனது அடுத்த குண்டை எங்கு போடப்போகிறது என்று தெரியுமா? சந்திர மண்டலத்தில்.
இது அறிவியல் கண்காட்சியும் இல்லை, வேடிக்கை
விளையாட்டும் இல்லை, உண்மை தான். சதாமை எதிர்த்து அவர் பதுங்கி இருந்த பங்கர்
எனப்படும் பாதாள அறைகளை தூள் தூளாக வீசிய அதே குண்டுகளைத்தான் நிலவிலும் அமெரிக்கா
போடத் திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு “ஆபரேஷன் போலார் நைட்” என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளது. ஆனால் நிலவையே குண்டு போட்டு அமெரிக்கா அழித்து விடுமோ என்று யாரும்
பயப்படத் தேவையில்லை. சந்திரனில் துருவப்பகுதிகளில் உள்ள எரிமலை போன்ற பகுதிகளின்
அடியில் உறைந்து இருப்பதாகக் கருதப்படும் ஐஸ் கட்டியை சோதனை செய்வதே திட்டத்தின்
நோக்கம்.
பலகோடி வருடங்களுக்கு முன்னர் சந்திரனில் மோதி
உறைந்த விண்கற்களின் பகுதிகளில் ஐஸ் உறைந்திருப்பதை முதன் முதலாக 1998ல் கண்டுபிடிக்கப்பட்டது. யாருமே போக முடியாத இருள்
சூழ்ந்த சூரியனின் கிரணங்களால் கூட அண்டப்படாத இந்தப் பகுதிகளில் பல கோடி வருடங்களுக்கு
முன்னாள் சிக்கிய ஐஸை விஞ்ஞானிகளால் ஆராய்ச்சி செய்ய முடிந்தால், அது நமது சூரிய
மண்டலத்தில் இதர இடங்களில் உள்ள தண்ணீரின் ரசாயன தன்மை பற்றி அறிந்து கொள்ள
உதவும். அதோடு இந்த நவீன உபகரணம் நிலவில் நைட்ரஜன் இருக்கிறதா? என்பதையும்
ஆராய்ச்சி செய்யும்.
பல்கலைக் கழக ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த
பேராசிரியர் “பால் ல்யூசி”, 2௦௦ கோடி வருட சூரிய மண்டல வரலாற்றை தெரிவித்துவிடும்.
இந்த சந்திர க்ரேட்டர்கள். விஞ்ஞானிகளுக்கு ஒரு அறிவியல் சவால் மற்றும் பரிசு
என்று சொல்லலாம். மிசைல் குண்டு மூலம் ஏவப்படும் அதிநவீன உபகரணங்கள் குண்டினால் முதலில்
அழியாமல் இருக்குமா? என்பதை அறிய நியு மெக்சிகோவில் சோதனை நடத்தப்பட்டு, குண்டு
மோதுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்து கொண்டனர்.
அதிவேகமாக ஆறு அடி கனமுள்ள பிளைவுட்டைத்
துளைக்குமாறு வீசப்பட்ட குண்டு, 1200 மடங்கு அதிகமாக புவிஈர்ப்பு விசையைக் விட மிஞ்சியது என்றாலும்,
உபகரணங்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் பார்வையிலிருந்து
பூமியில் உள்ள நாடுகள் பிழைத்து கொண்டது என்று சந்தோஷபடுவதா? இல்லை சந்திரன்
போகிறதே என்று வருத்தபடுவதா? நாம் எப்படி உணர்ந்தாலும் சரிதான், அமெரிக்காவின்
அடுத்த குண்டு நிலவை நோக்கி வீசப்படும்.
No comments:
Post a Comment