இன்றைய காலகட்டத்தில் உடலுறுப்புகளை தானம் செய்வதும், அதற்குண்டான விழிப்புணர்வும் மிகவும் குறைவு. அப்படி தானம் செய்யப்பட்ட உடலுறுப்புகளை பெறுவதற்கும் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நாடுவதுதான் கள்ள சந்தை. இன்றைய காலகட்டத்தில் கள்ள சந்தையில் எந்தந்த உறுப்புகள் என்ன விலைக்கு போகிறது என்று உங்களுக்கு தெரியுமா.
ஒருத்தரின் உடலில் இருக்கும் இதயம், கண்கள், மற்றும் ரத்தத்தையும் தானமாக வழங்குகின்றனர். சில சமயம் சிறுநீரகத்தை பணப்பற்றாக்குறைக்காக விற்கப்படுவதையோ அல்லது திருடப்படுவதையோ நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புக்கும் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத விலை நிர்ணயிக்கப்படுகிறது. என்ன என்ன உறுப்புகள் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்று இப்பொழுது பார்க்கலாம்.
இங்கு கொடுக்கப்படும் விலை பட்டியல் அமெரிக்க டாலர் மதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக பார்க்க உள்ளது சிறுநீரகம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் செயல்பட்டு வரும் ஒரு சிறுநீரகத்தின் விலை 2 லட்சம் டாலர் வரை கள்ளச்சந்தையில் விலை போகிறது. அடுத்தது கல்லிரல் ஒரு மனிதனின் கல்லிரல் ஒரு லட்சத்து 57 ஆயிரம் டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அதே போல் ஒருத்தரின் இதயம் 1 லட்சத்தி 19 ஆயிரம் டாலருக்கு விற்கப்படுகிறது. இதுவரைக்கும் குறிப்பிடப்பட்டுள்ள, சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உறுப்புகள் தான் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
இதை தவிர மற்ற உறுப்புகளும் விற்கப்படுகிறது. ஆனால் இதை விட குறைந்த விலைக்கு தான் விற்கப்படுகிறது. கண்ணில் இருக்கும் கார்னியா னு அழைக்கப்படும் வெளிவெண்படலங்கள் 24 ஆயிரத்து 400 டாலருக்கும், 1 கிராம் எலும்பு மச்சை 23 ஆயிரம் டாலருக்கும், ஒரு பெண்ணின் கருமுட்டை 12 ஆயிரத்து 400 டாலருக்கும், சிறுகுடல் 2 ஆயிரத்து 500 டாலருக்கும், தோள்பட்டைகள் 500 டாலருக்கும், பித்தப்பை ஆயிரத்து 200 டாலருக்கும், ஒரு யூனிட் ரத்தம் 337 டாலருக்கும் கள்ள சந்தையில் விற்கப்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாமல் பெருங்குடல் வயிற்றுப்பகுதியும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை மதிப்பை எல்லாம் ஒன்றாக சேர்த்து பார்த்தால் ஒரு ஆரோக்கியமான மனிதனின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியில் இருந்து 4 கோடி வரை விலை மதிக்கப்பட்டுள்ளது.
இந்த கள்ள சந்தைக்கு உடல் உறுப்புகள் கிடைப்பதற்கு முக்கிய காரணம் HUMAN TRAFFICKING அதாவது ஆள் கடத்தல். இந்த HUMAN TRAFFICKING க்கு பலியாகுபவர்கள் யார் என்றால் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளான சீனா, இந்தியா ஆகிய ஆண்டுகளில் இருந்தும் மற்றும் அதை சுற்றியுள்ள சின்ன சின்ன நாடுகளில் இருந்து ஆட்களை கடத்தி வந்து உறுப்புகள் திருடப்படுகிறது. இந்த HUMAN TRAFFICKING குறைப்பதற்கும், கள்ள சந்தையில் விற்கப்படும் உடலுறுப்புகளை கட்டுப்படுத்தவும், பல நாடுகள் பல வழிகளில் முயற்சி செய்து கொண்டுதான் வருகிறது. ஆனால் பல மில்லியன் டாலர் புழங்கும் இந்த தொழிலை நிறுத்துவது சற்று கடினம் தான்.
No comments:
Post a Comment