இந்த கேள்விக்கு விடை காணவேண்டும் என்றால்,
முதலில் தாகம் என்னும் உடலியல் தேவையை புரிந்துகொள்ள வேண்டும். சிறுநீரகத்தில்
நீர் மற்றும் உப்பின் அளவைச் சமன்செய்ய சுரக்கும் சில வகை ஹார்மொன்களே தாகம்
என்னும் உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த உணர்வு ஏற்பட்டதும், உடனே தண்ணீர் குடிக்க
வேண்டும் என்று தோன்றும். ஆகவே நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நீரிழப்பு
ஏற்படும்போது, பரிணாமவியலின் படி இந்த உடலியக்கம் தன்னிச்சையான ஒன்றாக நடைபெறும்.
நன்னீரில் வாழும் மீன்களின் ரத்தத்தில் உப்புச்
செறிவு கூடுதலாக இருக்கும். அவற்றுள் நீர் புகுந்து உப்புச் செறிவை
குறைத்துவிட்டால், அந்த மீன்கள் மடிந்து விடும். எனவே, நன்னீரில் வாழும் மீன்கள் நீரை
குடிப்பதில்லை. குறிப்பாக அவற்றிற்கு தாகமும் எடுபதில்லை.
மாறாக, உப்பு நீரில் வாழும் மீன்களின்
ரத்தத்தில் கரைசலின் செறிவு, நீரின் உப்புச் செறிவை விட குறைவாக இருக்கும். எனவே
அவை, உடலின் உப்பின் செறிவை நிலைபடுத்த அவ்வப்போது நீரைப் பருகும். மீன்களின் முன்
பகுதி மூளை தான் நீரை பருக வேண்டும் எனும் உணர்வை ஏற்படுத்தும். உப்பு நீரில்
வாழும், நீரை பருகுகின்றன என்றாலும் கூட, தாகம் என்னும் உடலியல் இயக்கம் அவற்றுக்கு
கிடையாது.
No comments:
Post a Comment