செம்பு, செப்பு, எனவும் ஆங்கிலத்தில் காப்பர் எனவும் அழைக்கப்படும் ஒருவகை உலோகமே தாமிரம். அலுமினியம், அல்லது இரும்பு பாத்திரங்களை நெருப்பில் வைத்து சூடாக்கும் போது, உலோகம் செறிவாக உள்ள பகுதியில் கூடுதல் வெப்பமும் மற்ற இடங்களில் குறைவான வெப்பமும் ஏற்படும். இதன் காரணமாக சில சமயங்களில் உணவு தீய்ந்து போகும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், தாமிரம் நல்ல வெப்பக்கடத்தி. எனவே, தாமிரப் பாத்திரத்தில் வெப்பம் சீராக எல்லா இடங்களிலும் சமமாகப் பரவும் என்பதால், அதில் உணவு சமைப்பது எளிதாக இருக்கும். எனவேதான், அடிப்பாகம் தாமிரத்தால் ஆன பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்த விரும்புகின்றனர்.
செம்பு பாத்திரங்களை அனைத்து தட்பவெப்ப நிலையிலும் பயன்படுத்தலாம். அது மட்டுமல்லாது செம்புத் தாது, நமது உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுகிறது. மேலும் இயற்கையிலேயே அதிக வெப்பத்தை கிரகித்துக்கொள்ளும் தன்மை இதற்கு உண்டு. நீரை சுத்திகரிப்பதுடன், மக்கிப் போகாமல் இருக்க, தாமிரம் ஒரு மின்பகு பொருளாகவும் செயல்படும். அதனால் தாமிர பாத்திரத்தில் வைத்துள்ள தண்ணீர் நாட்கணக்கில் நல்ல பதத்துடன் இருக்கும்.
No comments:
Post a Comment