ஆவிகள் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு அச்சம்
வரும், ஒரு சிலர் அதெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறுவார்கள். ஆனால் இவர்கள் தங்கள்
முன்னோர்களை குல தெய்வமாக வணங்குவார்கள். பிறகு இறந்தவர்களின் நினைவு நாட்களில் அவர்களின்
சிலை அல்லது கல்லறைகளுக்கு மாலையிட்டு, அவர்களின் நினைவாக அன்னதானம் செய்து
வணங்குவார்கள். இதுவே நீத்தார் கடன் என்று தமிழில் கூறுவார்கள்.
கடவுள் இல்லை ஆவிகள் இல்லை என்று கூறும்
நபர்கள். சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும் நினைவு நாள் கொண்டாடுவதும். உருவ
வழிபாட்டை கொண்டது தான். வழிபாட்டின் அடிப்படையே நினைவை போற்றுவதும் நன்றி
உணர்வுடன் இருத்தலுமே பக்தி மான்களும் செய்கின்றனர். ஆவிகள் என்ன என்பது பற்றி உள்நாட்டிலும்
சரி வெளி நாட்டிலும் பல ஆராய்சிகள் செய்யப்பட்டு வருகின்றனர்.
மனிதன் இறந்த பின் அவன் அடையும் நிலையே ஆவி நிலை
என்கிறோம். இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவிகள் தேவைபடுவது இல்லை.
காலம் இடம் என இவை அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால், நினைத்த நேரத்தில்
நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களின் சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர்
மனதில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக
வாழ்கின்றன. பெரும்பாலும் ஒற்றை கருத்துடைய ஆவிகள் ஒன்றாக சேர்ந்து வசிகின்றன.
ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகின்றன.
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்பவும் ஆன்ம
வளர்த்ச்சியும், நற்கருமங்களுக்கு ஏற்பவும், பல்வேறு நிலைகளில் வசிகின்றன.
இவற்றில் பொதுவாக பாவலோக ஆவிகள், புண்ணியலோக
ஆவிகள், மத்தியலோக ஆவிகள் என மூன்று வகையாக ஆவிகலோக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது தவிர சொர்க்கம், நரகம், இந்திரலோகம், வருனலோகம், குபேரலோகம், கோலோகம், எமலோகம்,
என 7 வகை உலகங்கள் இருபதாக புராணங்கள் குறிகின்றன. அவரவர் பாவ புண்ணியங்களுக்கு
ஏற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலை பொருத்தும், மனிதன் இறந்த பிறகு இவ்வகை
உலகங்களை அடைகிறான்.
இந்த ஆவிகள் உலகம் பாவம் செய்பவர்களுக்கு
மிகவும் துன்பத்தை தரும் ஒன்றாக இருக்கும். பேராசைகொண்ட அவர்கள் உயிருடன் இருந்த
காலத்தில், தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீய செயல்களை செய்திருப்பர்.
தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால், அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே
அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பார்கள். அவற்றில் ஒரு சில ஆன்மாக்கள்
தாம் இறந்து விட்டோம் என்ற உண்மையை கூட உணராமல் இருப்பார்கள். சில ஆன்மாக்கள்
தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பலவீனமான மனம் கொண்டவர்களை
பயன்படுத்திக்கொள்வர். அவர்களை பிடித்து தங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வார்கள்
இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகின்றனர். ஒருவர் இறந்த பின்பு, அவர் உயிருடன்
இருக்கும் போது யாருடன் எல்லாம் பற்று வைத்து இருக்கிறாரோ, அவர்களை சுற்றியே வளம் வந்துகொண்டு இருப்பார்கள்.
நம்மோடு வாழ்ந்தவர்களில் சிலர் தங்களின் வினை
பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டு
இருப்பார்கள். உடல் இல்லை என்றாலும், மனதின் தாக்கத்தால், பசி, தூக்கம் என நாம்
அனுபவிக்கும் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு தான் இருப்பார்கள், அவர்களின்
வாரிசுகள் மற்றும் உறவினர்கள் அவர்களுடைய இந்த பசியை போக்க கடமைபட்டவர்களாகிய நாம்
அதை செய்யாமல் விடும் போது, அது நமக்கு சாபமாக வந்து சேர்க்கிறது. இதனையே பித்ரு
தோஷம் என்று கூறுகிறார்கள். இதனை நிவர்த்தி செய்ய இறந்தவர்களின் நினைவுநாள் அன்று
அன்னதானம் போன்ற நற்கருமங்கள் செய்வதுடன் அந்த புண்ணிய பலன் அனைத்தையும் இறந்த நம்
முன்னோர்களுக்கே செல்ல வேண்டும். என நாம் இறைவனை பிராத்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment