அமெரிக்க புவியியலாளர்கள் வருடாந்திர கூட்டம்
தற்சமயம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியர் திரு.
ரோஜர் பெல்ஹாம் மற்றும் பென்றிக் பல்கலைக்கழக பேராசிரியை திரு.ரெபேக்கா ஆகியோர்
ஆய்வறிக்கை ஒன்றை சமர்பித்து, விவாதம் செய்துள்ளனர். அப்பொழுது 1900ம் ஆண்டு முதல் இப்பொழுது வரை, ரிக்டர் அளவில் 7
புள்ளிகளுக்கு மேல் பதிவாகியுள்ள நிலநடுக்கங்களை ஆய்வு செய்ததில், குறுப்பிட்ட 5
கால கட்டங்களில், ஆண்டுக்கு 25 முதல் 30 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு இருபதையும், இதர காலகட்டங்களில்
ஆண்டுக்கு 15 நிலநடுகங்கள் ஏற்பட்டு இருபதையும் கண்டுபிடித்துள்ளனர்.
எப்பொழுதெல்லாம் பூமியின் சுழற்சி குறைந்ததோ,
அப்பொழுது அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எங்களது ஆய்வின்படி பூமியின்
சுழற்சிக்கும், நிலநடுகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று குறிபிட்டுள்ள
அவர்கள், தற்பொழுது பூமியின் சுழற்சி வேகம் சிறிது குறைந்து உள்ளது என்றும், இதன்
காரணமாக ஒரு நாளின் கால அளவு, ஒரு மில்லி நொடி அளவுக்கு குறைந்து இருக்கிறது
என்றும் தெரிவித்துள்ளனர். புவி சுழற்சியின் இந்த வேக குறைவை, அணு கடிகாரங்களை
கொண்டு மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று கூறியுள்ள அவர்கள், சுழற்சி வேகம்
குறைந்து இருப்பதால், பூமிக்கு அடியில் மிகப்பெரிய அளவில் சக்தி வெளிப்படும்.
இதனால், இந்த ஆண்டான 2020ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை
அதிகரிக்கும் என்று கணிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். கடந்த ஆண்டில் இதுவரை
ரிக்டர் அளவில் 7 புள்ளிகளுக்கு மேல் 6 நிலநடுக்கங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஆண்டில், 20 நிலநடுக்கங்கள் வரை ஏற்படலாம் என்று கூறுகின்றனர். இந்த நிலநடுக்கங்கள், பூமியின்
எந்த பகுதியில் ஏற்படும் என்பதை கணிக்க முடியாது. எனினும் இந்த நிலநடுக்கங்கள்,
பூமத்திய ரேகை பகுதியில் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.
No comments:
Post a Comment