அலேசான்டரின் இறுதி ஊர்வலத்தில் என்ன நடந்தது என்று தெரியுமா, இன்றுவரை உலக அளவில் யாருக்கும் இம்மாதிரி ஒரு இறுதி ஊர்வலம் நடைபெறவில்லை. பேரரசன் அலெக்ஸ்சாண்டர் கிரேக்கத்தின் பகுதியான மேக்கடோனின் பேரரசர். மேக்கடோனின் மூன்றாம் அலெக்ஸ்சாண்டர் எனவும் இவர் அழைக்கபடுகிறார். உலக வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற ராணுவ தலைவர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
இவர் பங்கு பெற்ற எந்த போரிலும் தோல்வி
பெறவில்லை எனவும் சொல்லபடுகிறது. இவரது காலத்தில், பண்டைய கிரேக்கர்களுக்கு
தெரிந்த உலகின் பெரும் பகுதியை கைப்பற்றி ஆண்டு வந்தார். மரண தருவாயில்
இருக்கும்போது அலெக்ஸ்சாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று
விருப்பங்களை கூறுகிறார். 1. எனது சபபெட்டையை உலகின் தலை சிறந்த மருத்துவர்கள்
தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும், 2. நான் இதுவரை சேர்த்த பணம், தங்கம், விலை
உயர்ந்த கற்கள் போன்றவைகளை என் இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு
வரவேண்டும். 3. என் கைகளை சபபெட்டியின் வெளியே தெரியும் படி வைக்கவேண்டும் என்று
கூறுகிறார். தளபதிகளில் ஒருவர் அலெக்ஸ்சாண்டரின் இந்த அசாதாரண விருப்பத்தால்
மிகவும் ஆச்சரியபட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸ்சாண்டரின் பதில்கள்
தான் மிகவும் முக்கியமானவை.
தலை சிறந்த மருத்துவர்கள் கூட என்னை நோயில் இருந்து
காப்பாற்ற முடியாது. அதனால் சாவை தடுக்க முடியாது என்பதற்காக. நான் இந்த பூமியில்
சேகரித்த மற்றும் கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை
தெரியப்படுத்துவதற்காக, எனது கைகள் காற்றில் அசையும் பொழுது, மக்கள் அனைவரும் வெறும் கையுடன்
வந்த நான் வெறும் கையுடன் செல்வதை உணர்ந்து கொள்வார்கள் என்று அலெக்ஸ்சாண்டர்
அவர்கள் பதில் கூறினார். நாம் இந்த பூமியில் பிறக்கும் போது கொண்டு வருவது
எல்லாம், நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய நேரம் மட்டுமே. உங்கள்
உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு,
உங்களின் நேரம் மட்டுமே.
No comments:
Post a Comment