Sunday, 9 December 2018

2030 ல் இந்தியா DAY ZERO ஆக அதிக வாய்ப்பு உள்ளது


    பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரானது, நம் வாழ்க்கையில் மிக முக்கிய அங்கமாகிவிட்டது என்றால் அது மிகையாகாது. இந்த நீரின் சுழற்சியானது, நம் அன்றாட தேவையான குடி நீரை மலையாக பொலிந்து நம் தேவையை பூர்த்தி செய்கிறது. விலை மதிப்பற்ற இந்த நீரின் தேவை, அவை நம்மை விட்டு பிரிந்து செல்லும் பொது தான் தெரியும். உண்மை தான் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

    தென் ஆப்ரிக்கா மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்த பகுதி தான் கேப்டவுன், ஆனால் இப்பொழுது Day Zero என்று சொல்லகூடிய கடைசி சொட்டு நீரும் வற்றிய நிலையை அடைந்துள்ளது கேப்டவுன் நகரம். தண்ணீர் இல்லாத கொடூரமான நிலை எப்படி இருக்கும் என்று ஒரு Hollywood படத்தில் கூட விளக்கி இருப்பார்கள். அத்தகைய நிலையை தற்பொழுது கேப்டவுன் நகரம் எட்டியுள்ளது. இது எதோ ஒரு அயல்நாட்டில் நிகழ்ந்த நிகழ்வு என்று நினைக்க வேண்டாம். இது நமக்காக ஒழிக்கப்பட்ட ஒரு அபாய எச்சரிக்கை மணி.

    கடந்த மாதம் இந்தியாவின் சிம்லா நகரம் கேப்டவுன் போன்ற ஒரு அபாய நிலையை சந்தித்தது. ஆனால் சமிபத்திய ஆய்வு அறிக்கையின்படி, இது ஒரு தொடக்கமே ஆகும். இன்னும் 75 சதவீத குடி மக்கள், அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்து குடிநீர் பெறுவதற்கான சாத்திய கூறுகள் இல்லாமல் இருகின்றன என்பது அதிர்ச்சியான விஷயம். மாசற்ற நீர் வளம் மிகுந்த 122 நாடுகளில் நமது இந்தியா 120 வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் 600 மில்லியன் மக்கள் மிக கடினமான குடி நீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர். அதாவது அவர்கள் ஒரு சராசரி மனிதனின் தேவையை, பூர்த்தி செய்ய தேவையான அளவு கூட நீர் இன்றி வாழ்கின்றனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் உணவு தேவையை நிறைவேற்றும் பொருட்கள் 20 முதல் 30 சதவீதம் இந்த 6௦௦ மில்லியன் மக்கள் வாழும் பகுதியில் இருந்து தான், விளைவிக்கப்படுகின்றன. இது நம் நாட்டின் உணவு தேவையை கடுமையாக பாதிகின்றன என்பதை மட்டும் மறுக்க முடியாத உண்மை.

    இது மட்டும் அல்லாது இந்தியாவின் நிலத்தடி நீரின் மட்டமும் நாளுக்கு நாள் அதலபாதளத்தில் சென்று கொன்று இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் மொத்த நிலத்தடி நீர் மட்டம் 54 சதவீதமாக குறைந்துள்ளதும் குறிபிடத்தக்கது. இந்த நீரிலும் 70 சதவீதம் மாசு அடைந்துள்ளது என்பது மற்றும் ஒரு அதிர்ச்சியான விஷயம் இதன் விளைவாக தினமும் புதிய குடி நீர் இல்லாத காரனத்தால் இறந்து கொண்டு இருக்கின்றனர். 2௦௦௦ ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் தினசரி தேவைக்கான நீரினை, பெற்று வந்துள்ளனர். ஆனால் இந்நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

     2020ல் இந்தியாவின் பெரிய நகரங்களான டெல்லி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் நகரங்கள் தங்களது பெருமளவு நிலத்தடி நீரை இழந்துவிடும் எனவும் இதனால், 1௦௦ மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள் என்றும் சமிபத்திய கருத்து கணிப்பு கூறுகின்றது. இந்த நிலை மேலும் தொடர்ந்து, 2030ல் இரண்டு மடங்கு அடையும் எனவும் நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment