Friday, 14 December 2018

உங்கள் மூளை எந்த பக்கம் வேலை செய்கிறது தெரியுமா?

   ஆல்பர்ட் ஏய்ன்ஸ்டீன் மூளையை முழுவதுமாக பயன்படுத்தியதால் உலகம் போற்றும் விஞ்ஞானியானர். ஆனால் நாமோ மூலையில் 10 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதால் பன்றி மேய்க்கிறோம் என சிலர் கூற நாம் கேள்விபட்டிருப்போம். இது உண்மைதானா என்றால் நிச்சயம் உண்மை இல்லை. மதியை பயன்படுத்தாமல் விதியே என இருப்போரை சிந்திக்க தூண்டுவதற்காக இத்தகைய ஒரு கூற்று ஊக்கமூட்டம் பேச்சாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

   மனித மூளை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது மற்றும் இயங்குகிறது. ஆனால் மூளையின் எதோ ஒரு மூலையில் இருக்கும் கூர் மதியை சரியாக பயன்படுத்தி கொள்ளும் போது மட்டுமே சிலர் புத்திசாலிகள் எனவும், மற்றவர்களை மக்குகள் எனவும் வகைபடுத்தபடுகின்றன. எண்ணிலடங்கா தகவல்களையும், நினைவுகளையும் போதித்து வைக்க உதவும் மூளையானது நம் உணர்சிகளின் மையமாகவும், உடல் இயக்கங்களை கட்டுபடுத்தும், தலைக்குள் இருக்கும் தலைமை செயலகமாகவும் இருகின்றது. நமது மூளை இரு அரை கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூளையின் இரு அரை கோளங்களையும், ஒரு நரம்பு கற்றை இணைகிறது. அதனை CORPUS CALLOSUM என அழைகின்றனர்.

   மூளையின் ஓர் அரைகோளத்தில் நுழையும் எந்த ஒரு தகவலும், CARPUS CALLOSUM வழியாக மற்றொரு அறைகோலத்தை அடைகிறது. ஆக மூளையின் வலது மற்றும் இடது அரை கோளங்கள் ஒன்றை ஓன்று சார்ந்து இருக்கிறது. மற்றும் தகவல்களை இணைந்தே செயல்பத்துகின்றன. இருந்தாலும் இரு அரை கோளங்களும் சில பொதுவான விஷயங்களில் ஒன்றை ஓன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. மூளையின் இந்த இரு அரை கோளங்களும் வெவ்வேறு விதமான திறன்களில் ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்காவை சேர்ந்த Neurologist ரோஜெர் வால் கோஸ்ட் என்பவர் தனது ஆய்வுகள் மூலம் கண்டுபிடுத்துள்ளார்.

   அதாவது மூளையின் இடது அரை கோலத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ள மனிதர்கள் தர்க்கம், பகுத்தறிவு, பகுப்பாய்வு மற்றும் புறநிலை சிந்தனையாளர்களாக இருப்பார்கள். கணிதம், மொழி, அறிவியல், நியாய வாதம், விமர்சன சிந்தனை போன்றவற்றில் திறன்மிக்கவர்களாக இருப்பார்கள். மேலும் மூளையின் இடது அரை கோளம் உடலின் வலது பக்கத்தை கட்டுபடுத்தும் பொறுப்பையும் வகுக்கிறது. மூளையின் வலது அரை கோளத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ள மனிதர்கள் எந்த ஒரு விஷத்திலும் அதன் அடிமட்டம் வரை சென்று அலசுவார்கள். மற்றும் உணர்வுகள் படைப்பாற்றல் போன்றவற்றின் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள். மேலும் இவர்கள் இசை, கலைகள், உணர்வுகளை வெளிபடுத்துதளில் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். மூளையின் வலது அரை கோளம். உடலின் இடது பக்கத்தை கட்டுபடுத்துகிறது.

   எனவே, நீங்களும் உங்களது திறமைகள், குணநலன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களது மூளையின் எந்த பக்கம் அரை கோளம் அதிகம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment