நிச்சயதார்த்த மாத்திரை என்று சொன்னதும் பலருக்கும், இது ஆண்மைக்கான சமாசாரம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் இது பெண்களுக்கான ஓன்று. பெண்களுக்கு மட்டும் அல்ல, வருங்களால சந்ததிகளுக்கு கூட என்று சொல்லலாம். நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீத குழந்தைகள் பிறவி குறைபாட்டுடன் பிறக்கிறது. மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூலையில் நீர் கோர்ப்பது. குடல் வெளியில் இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை கால் எலும்புகள் வளராமல் இருப்பது இப்படி பட்ட குழந்தைகள் நீண்ட நாட்கள் உயிருடன் வாழமுடியாது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதி நவீன மருத்துவ கருவிகள் கூட 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டுபிடிக்க முடியாது. காது கேளாமல் இருப்பது போன்ற பிறவி கோளாறுகள் வளர வளர தான் தெரியும். ஸ்கேன் மூலம் உயிரை பாதிக்கும் பிரச்சனைகள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.
பிறவி கோளாறு எப்படி வருகின்றது என்றால், மரபு ரீதியிலான மற்றும் சுற்று சூழல் என்ற ஏராளமான காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத்தண்டு பிரச்சனைகளுடன் பிறக்கும் குழந்தைகள் தான் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பிறவி கோளாரை பெண்கள் நினைத்தால், தங்களது குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்க, பெண்ணுக்கு போலிக் ஆசிட் குறைவாக இருப்பதே காரணம். மிக குறைவான விலையில் கிடைக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாபிட்டு வந்தாலே, பிறவி கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியா தவிர உலகம் முழுவதும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்தது கொள்கிறார்கள். நமது நாட்டில் கூட பருவம் அடைந்த இளம் பெண்களுக்கு அரசு பள்ளிகளில் இரும்பு சத்து மாத்திரையுடன் சேர்த்து போலிக் ஆசிட் மாத்திரையும் கொடுப்பார்கள். ஆனால் பெண்களுக்கு திருமணம் என்பது 20 வயதுக்கு பின்னர் தான் நடைபெறுகிறது. அதிலும், இப்போது உள்ள பெண்களுக்கு 25 என்ற உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டது. கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் கொடுப்பார்கள், ஆனால் அதற்கு முன்பு கரு வளர்ச்சி அடைய தொடக்கி இருக்கும். அதனால் கற்பத்திற்கு தயாராகும் போதே பெண்ணின் உடலில் போலிக் ஆசிட் போதுமான அளவு இருக்க வேண்டும். அப்போது தான் பிறவி கோளாறுடன் குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க முடியும்.
அதனால் தான் வெளிநாட்டு பெண்கள் திருமணத்திற்கு தாயாருக்கும் போதே போலிக் ஆசிட் மாத்திரையை எடுத்து கொள்கின்றனர். அதனால் தான் போலிக் ஆசிட் மாத்திரைக்கு ENGAGEMENT TABLET என்ற பெயரை மேலை நாடினர் வைத்துள்ளனர். நமது நாட்டிலும் பெண்களுக்கு திருமணம் நடத்த முடிவான நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிறவி கோளாறு இல்லாத ஆரோக்கியமான குழந்தையை உருவாக்க முடியும். கரு உருபெறும் போதே போதைய அளவு போலிக் ஆசிட் பெண்ணின் உடலில் இருக்க வேண்டும் என்பதை, அண்களும் தங்களது வருங்கால மனைவிக்கு அறிவுறுத்தி சாப்பிட வைப்பது, பின்னாளில் குழைந்தைகளுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.
No comments:
Post a Comment