ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்புகாவும், நாட்டின்
வளர்ச்சிக்காகவும், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துகின்றன. மனிதனால்
உருவாக்கப்படும், ஒவ்வொரு எலெக்ட்ரானிக் பொருளுக்கும் குறிப்பிட்ட வாழ்நாள் உண்டு.
எலெக்ட்ரானிக் சாதனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பழுதாகி தானாகவே செயல்
இழந்துவிடும். மீண்டும் உபயோகிக்க முடியாத அவற்றை மறு சுழற்சி செய்வது தான்
சூழலுக்கு நல்லது. ஆனால் விண்வெளியில் பழமையான செயற்கை கோள்களை அப்படி செய்ய
முடியாது. அப்படி என்றால் அவற்றை என்ன செய்வார்கள்.
ஒரு பொருளை சுற்று பாதையில் சுற்றும், மற்றொரு
பொருள் கோள் என்று அழைக்கபடுகிறது. இவற்றில் இயற்கை கோள், மற்றும் செயற்கை கோள்
என இரண்டு வகை இருகின்றன. பூமியை தனது சுற்று பாதையில் சுற்றி வரும் வளிமண்டல
கோள்கள், இயற்கை கோள்கள் என்று அழைக்கபடுகின்றன. மனிதனால் உருவாக்கப்படும் கோள்
தனது சுற்று பாதையில் சுற்றி வருபவை செயற்கைக்கோள் என அழைக்கப்படுகின்றன. இதில்
இயற்கையான கோள்களை பற்றி கவலை கொள்ள தேவையில்லை. அவை தனது வேலையை சரியாக செய்து
கொண்டு இருக்கும். ஆனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கோளானது. விண்ணில் சில
ஆண்டுகள் மட்டுமே பயணத்தை தொடர முடியும்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்தை நீடிக்க செய்ய
முடியாது. அதனால் அவற்றை சுற்று பாதையை விட்டு இறக்கி, செயல் இழக்கப்படும் அல்லது
அளிக்கப்படும். மேலே அனுப்படும் பல செயற்கைகோள்கள் பல்வேறு காரணங்களுக்காக அனுபப்படுகின்றன.
அவற்றில் பொதுவாக புவியல் கண்காணிப்பு, தகவல் தொடர்பு, வானிலை கோள் ஆராய்ச்சி என
பொதுவான நோக்கங்களுக்கான பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடும், தனது
நாட்டின் பாதுகாப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துகின்றன.
ஒரு செயற்கைகோள் 25 ஆண்டு வரை தனது பணியை சிறப்பாக செய்யும். அதன்பின்னனர்.
அதன் செயல் திறன் குறைந்து பழுதாகி செயலற்றதாகி விடும். செயல் இழக்கும் செயற்கை
கோளானது. மற்ற செயற்கை கோள்களுடன் மோதி விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகளும்
இருகின்றன. அதனால், அந்த செயற்கை கோளை பாதுகாப்பாக செயல் இழக்க செய்ய வேண்டும்.
செயல் இழக்க வைக்கும் நேரங்களில் மனிதர்களுக்கு
எந்த பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக கையாள்வது அவசியம். இதில் இரண்டு
வழிகள் மட்டுமே இருகின்றன. இரண்டில் எந்த வழி என்பதை செயற்கை கோளின் தொலைவு தான்
தீர்மானிக்கிறது. முதல் வழி வெகு தொலைவில் இருக்கும் செயற்கை கோளாக இருந்தால்,
மேலும் தொலைவுக்கு அனுப்பிவிடுவார்கள். அதாவது கைவிடப்படும் செயற்கை கோளை
சுற்றுப்பாதையை விட்டு விளக்கி, 300கிலோமீட்டர்க்கு மேல் விளக்கி அதிக தொலைவுக்கு அனுப்பிவிடுவார்கள்.
அந்த பகுதியின் பெயர் கல்லைறை கோள பாதை என்று அழைக்கப்படுகிறது. கல்லறை கோளபாதைக்கு
அனுப்பப்படும் செயற்கை கோளானது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு அங்கேயே சுற்றி கொண்டு
இருக்கும். இவற்றிக்கு விண்வெளி குப்பைகள் என்று பெயர்.
இரண்டாம் வழி பூமிக்கு அருகில் சுற்றும் செயற்கை
கோளாக இருந்தால், அதன் எரிபொருளை காளி செய்து வேகத்தை மட்டுபடுத்தி, பூமியை நோக்கி
வரவழைத்து, வழி மண்டலத்தில் எரித்து விடுவார்கள். பூமிக்கு அருகில் சுற்றும் சிறய
செயற்கை கோளாக இருந்தால், பூமிக்கு வரவைத்தால் தானாகவே எறிந்துவிடும். ஆனால்
மிகப்பெரிய செயற்கை கோளாகவோ அல்லது விண்கலமாகவோ இருந்தால் பூமியை நோக்கி வரவைக்கும் போது முற்றிலுமாக எரியாது இதனால் பூமியை வந்தடையும் போது மக்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்தக்கூடும். எனவே இதை தவிர்க்க நியூசிலாந்து நாட்டின் விளிங்டன் நகரில்,
தென்கிழக்கில் சுமார் 3900 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் பசுபிக் பெருங்கடலில் விழ
செய்து அளித்து விடுவார்கள்.
செயற்கை கோள் எவ்வளவு பாதுகாப்பாக ஏவப்படுகிறதோ
அதைவிட, அதை பாதுகாப்பாக கையாள்வதும் முக்கியம்.
No comments:
Post a Comment