நம்மில் அதிகமானோர் பேய் கதைகளை கேட்டு
இருப்போம். இதில் சில கதைகளில், இந்த ஊருக்கு போனால் உயிரோடு யாரும் திரும்பி வர
முடியாது என்று கேள்வி பட்டிருப்போம். அது கேக்கும் போது நமக்கு வேடிக்கையாக
இருந்திருக்கலாம். ஆனால் அது உண்மை தான் என்று சொல்வது போல் ஒரு கிராமம் இப்போதும்
இருக்கிறது.
அந்த மர்ம கிராமம் ரஷ்யாவில் தான் உள்ளது. இந்த
கிராமத்தின் பெயர் டர்காவ்ஸ். இந்த கிராமம் பாறைகளுக்கு நடுவில் இருக்கும்
பள்ளத்தாக்கின் மலை சரிவில் அழகான தோற்றத்தில் இருக்கிறது. இங்கு இருக்கும்
வீடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக பிரமிட் போன்ற அமைப்பில், ஓன்று அல்லது இரண்டு
அடுக்குகளில் இருக்கும். பார்ப்பதற்கு அழகான கிராமமாக இருந்தாலும், அதன் அருகில்
சென்றால், உயிருள்ள மனிதர்களுக்கு பதிலாக, உயிரற்ற சடலங்கள் தான் உள்ளது.
இதில் உண்மை என்னவென்றால், இந்த கிராமத்திற்கு
சென்றவர்கள் இதுவரைக்கும் யாருமே உயிருடன் திரும்பியது இல்லை. அங்கு இருக்கும்
சடலங்கள் அனைத்தும் இந்த கிராமத்தில் வாழ்ந்தவர்கள் தான். இந்த கிராமத்தை THE
CITY OF THE DEATH அல்லது DEATH VILLAGE என்று அழைகிறார்கள். இந்த சடலங்கள் அனைத்தும்
வீட்டின் உள்ளேயே தான் புதைக்கபட்டுள்ளது. அந்த ஒவ்வொரு வீட்டின் தளத்திலும் இறந்த
சடலங்கள் உள்ளது. இங்கு இருக்கும் சில சடலங்கள் வித்தியாசமாக புதைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக சில சடலங்கள் படகுடன் வைத்து புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒரு
மூடநம்பிக்கை தான். அதாவது இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக
இப்படி செய்துள்ளனர்.
இங்கு மொத்தம் 99 வீடுகள் உள்ளது. இந்த இடம் அதிகமான மர்மங்களை
கொண்டது, இங்கு செல்வதே கொஞ்சம் திகிலாக தான் இருக்கும். இந்த கிராமவாசிகளை பற்றி,
பல ஆய்வுகள் நடந்தது, அதில் வெளியான தகவல் என்னவென்றால், இந்த கிராமத்தில் வாழ்ந்த
மக்கள் அனைவரும், நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம், அதனால் அவர்களின் உறவினர்களை
புதைக்க அவர்கள் வாழ்ந்த வீட்டையே தேர்ந்தெடுத்து உள்ளனர். பின்னர் புதைப்பதற்கு
ஆட்கள் இல்லாமல் இருந்த மக்கள், தனியாக இருந்ததால் தங்களின் இறுதி நாட்களை
கல்லறையிலேயே கழித்துள்ளனர். அதே போல், தொல்லியல் ஆய்வாளர்கள், ஒரு கிணற்றையும்
கண்டுபிடித்துள்ளனர். இறந்தவர்களை புதைக்கப்பட்ட பின்பு உறவினர்கள் நாணயங்களை
போடுவார்கள், அப்படி போடப்படும் நாணயங்கள், நாணயங்களின் அடி பகுதியும், மற்றொரு
நாணயத்தின் அடி பகுதியும், மோதி கொண்டால் இறந்தவர்களின் ஆன்மா சொர்க்கம் செல்லும் என்ற
நம்பிக்கை இருந்துள்ளது.
இதில் வேடிக்கையான கருத்து என்னவென்றால்,
புதைக்கப் பட்டவர்களின் ஆவி, இங்கு வளம் வருவதாகவும், அதனால் தான் இந்த கிராமத்திற்கு
செல்லும் அனைவரும் திரும்பி உயிருடன் வர முடியவில்லை என்று கூறுகின்றனர்.
No comments:
Post a Comment