Tuesday, 5 February 2019

3 ஆக பிரிக்கப்பட்ட உலக நாடுகள்


   தொலைக்காட்சி, செய்தி தாள், உள்ளிட்ட ஊடகங்களில் மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லபடுவதை நாம் கேட்டு இருப்போம். அப்படி என்றால் முதலாம் உலக நாடுகள் மற்றும் இரண்டாம் உலக நாடுகள் என்பவை யாவை, ஏன் அவ்வாறு கூறுகின்றனர். உலக நாடுகள் ஏன் ஓன்று இரண்டு மூன்று என பிரிக்கப்பட்டுள்ளது என்று தெர்யுமா?

   முதலாம் நாடுகள் என்பவை அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காலகட்டத்தில் 1949 ம் ஆண்டில் ஏப்ரல் 4ம் நாள் அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் இணைந்து உருவாக்கிய North Atlantic Treaty  Organization எனபடும் வட அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் உறுபினராக இருக்கும் நாடுகளாகும். இவை சுருக்கமாக NATO நாடுகள் எனவும் அழைக்கபடுகின்றனர்.

   NATO அமைப்பில் வட அமேரிக்கா தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்பட 29 நாடுகள் உறுபினர்களாக உள்ளனர். போர் என வந்தால் இவை அனைத்து நாடுகளும் ஓன்று இணைந்து எதிரியை துவம்சம் செய்ய தயாராகிவிடும். இவையே முதலாம் உலக நாடுகள் என அழைக்கப்படுகின்றனர்.

   இரண்டாம் உலக நாடுகள் என்பவை WARSAW PACT  COUNTRY  அதாவது WARSAW ஒப்பந்த நாடுகள் ஆகும். அமெரிக்க உருவாக்கிய NATO அமைப்பிற்கு போட்டியாக சோவித் ஒன்றியத்தால் 1955ம் ஆண்டு மே 15ம் நாள் போலந்தில் WARSAW ஒப்பந்த அமைப்பு உருவாக்கப்பட்டது இதில் உறுபினராக சோவித் ஒன்றியம், பல்கேரியா, கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, ரோமானியா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருந்தனர்.. இவையே இரண்டாம் உலக நாடுகள் என அழைக்கபடுகின்றனர்.

   போர் கூட்டணிக்காக உருவாக்கப்பட்ட WARSAW ஒப்பந்த அமைப்பு கடந்த 1991ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் நாள் கலைக்கப்பட்டுவிட்டது என்பது குறிபிடத்தக்கது.

   NATO அமைப்பிலும், WARSAW அமைப்பிலும் பங்கேற்காத நாடுகளே மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இவை முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போரில் பங்கேற்காத நாடுகள். மேலும் வரலாற்று ரீதில் காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்டு இருந்ததால், அதன் வளங்கள் ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, பசி பஞ்சந்த்தால் பாதிக்கப்பட்டவை, தற்போது வறுமை நிலையிலோ, வளரும் நிலையிலோ இருக்கும், ஆசிய, ஆப்ரிக்க, தென் அமெரிக்க கண்டங்களில் அமைந்துள்ள இந்நாடுகளை மூன்றாம் உலக நாடுகள் எனவும், ஏழை நாடுகள் எனவும் அழைகின்றார்கள்.

   பணக்கார நாடான சுவிட்சர்லாந்தும் மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் உள்ளது. இதற்கு காரணம் இந்நாடு அணி சேரா கொள்கையை கொண்டுள்ளதாள், மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment