ஒவ்வொரு நாடும் அதன் போலிஸ் படையை நவீனமாக்க
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு காலத்தில் போலிசாரிடம் ஒரே ஒரு கை
துப்பாக்கி மட்டுமே அதிகபட்ச ஆயுதமாக இருந்து வந்த நிலையில். இன்று நவீன ஆயுதங்கள்,
உபகரணங்கள், வாகனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்துதரபட்டு
போலீஸ் படையினர் தங்கள் பணியினை சிறப்பாக செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும் பல நாடுகள், அது வளரும் நாடுகளாக
இருந்தாலும் சரி அல்லது வளர்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும் சரி, சட்ட
அமலாக்கத்தின் மிக பழமையான முறைகளில் ஒன்றை இன்றும் நடைமுறை படுத்தி வருகின்றனர்.
அது தான் குதிரை மீது சவாரி செய்து போலிஸார் செய்யும் ரோந்து பணியாகும். சென்னை, மும்பை,
பெங்களூர் உள்ளிட்ட இந்திய மாநகரங்களிலும், நியுயார்க், பெர்லின், லண்டன் உள்ளிட்ட
அயல் நாடுகளின் பெரு நகரங்களிலும் போலிஸார் குதிரை மீது அமர்ந்து ரோந்து பணியில்
ஈடுபடுவதை நாம் செய்திகளில் பலமுறை பார்த்திருக்கிறோம்.
இன்று பலவித நவீன வாகனங்கள் வந்துவிட்ட
போதிலும், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் ரோந்து செல்ல, போலிஸார் ஏன் குதிரையை
பயன்படுத்துகின்றனர் என்பதற்கு பின்னணியாக சில முக்கிய நோக்கங்கள் இருகின்றன. பெரு
நகரங்களில் குதிரையின் மீது அமர்ந்து போலிஸார் ரோந்து செல்வதன் முக்கிய நோக்கம்.
கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதே ஆகும். குதிரைகள் ஒரு குறிப்பிடதக்க உயர ஆதாரத்தை
வழங்குகிறது. மேலும் கூட்ட நெரிசலுக்கு சுலபமாக நுழைந்து செல்ல கூடியவை எனவே
குதிரை மீது அமர்ந்திருக்கும் காவல் அதிகாரிக்கு கூட்ட நெரிசலை முழுமையாக
காணக்கூடிய நிலையையும் சூழ்நிலை விளிபுணர்வையும் அழிகின்றது.
இதனால் கட்டுபாடற்ற கூட்ட நெரிசலை ஒழுங்கமைக்க
காவல்துறை அதிகாரிக்கு வசதியாக இருகின்றது. குறிப்பாக அடிக்கடி கால்பந்து
போட்டிகளுக்கு பின்னர் நிகழும் இரு தரப்பு ரசிகர்களுக்கு இடையேயான ஆங்கங்கே
நிகழும் மோதலை குதிரை மீது அமர்ந்து வரும் காவல் அதிகாரிகள் எளிதாக கண்டுபிடித்து
கட்டுபடுத்தி விடுவார்கள். குதிரைகள் ஓர் மிகப்பெரிய உயிரினமாக இருப்பதால், கூட்ட
நெரிசலை கட்டுபடுத்துவதற்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். கூட்டத்துக்குள் நுழைந்து
நடந்து வரும் குதிரைக்கு முன்பாக யார் நின்றாலும் முட்டி மோதி தள்ளிவிட்டு
முன்னேறி நடந்து கொண்டே இருக்கும்.
மேலும் பெரிய விலங்குகள் தங்களை மிதித்து விடும்
என்று மனிதர்களுக்கு இருக்கும் பொதுவான ஓர் உள்ளார்ந்த அச்சம் காரணமாக பலர்
கூட்டத்தில் இருந்து களைந்து ஓடி விடுவார்கள். மேலும் கலகக்கார கூட்டத்தினர் அங்கு
வரும் போலீஸ் வாகனங்களை உடைப்பதற்கும் அல்லது சேதபடுத்துவற்கும் சிறிதும் தயங்க
மாட்டார்கள். ஆனால் குதிரையை போன்ற ஓர் பெரிய உயிரினத்தை தாக்க முன்னிப்போருக்கு,
அவை பதிலுக்கு திரும்ப தாக்ககூடும் என்ற ஓர் அச்சம் உள்ளதால் குதிரையிடம் இருந்து
விலகி இருக்கவே முயற்சிபார்கள்.
மக்கள் நெரிசல் நிறைந்த கடை தெருக்கள்,
நடைபாதைகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை செய்ய
வாகனங்களை காட்டிலும் குதிரைகளே போலீஸாருக்கு பெரிதும் துணை புரிகின்றன.
அவ்விடங்களில் போலிசார். வாகனங்களில் செல்வதால் நெரிசல் மேலும் அதிகமாவதோடு,
கூட்டத்தின் ஊடாக போலிஸார் வாகனம் நகர்ந்து செல்வதும் சாத்தியமற்றதாகிவிடும். ஆனால்
குதிரைகள் எவ்வளவு பெரிய நெரிசல் மிகுந்த பகுதியானாலும் சுலபமாக வழி
ஏற்படுத்திக்கொண்டு சாதரணமாக நகர்ந்து கொண்டே இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை
கண்காணிப்பதும், கட்டுபடுத்துவதும் காவல் அதிகாரிக்கு எளிதாக இருக்கிறது.
மேலும் வாகனம் செல்ல முடியாத குறுகிய தெருக்கள்,
வழித்தடங்கள் உள்ளிட்டவைகளில் குதிரையின் மூலம் எளிதாக செல்ல முடியும்.
தெருக்களில் சட்ட ஒழுங்கை பராமரிப்பது என்பது ஒரு போலீஸ் அதிகாரிக்கு பிரதான
கடமையாகும். குதிரை மீது அமர்ந்து ரோந்து செய்யும் போலீஸாரால் இந்த கடமையை
சிறப்பாக செய்ய முடிகிறது. தெருக்களில் தகராறில் ஈடுபடும் நபர்களை தொலைவிலேயே
கண்டுகொண்டு , பிரச்சனை பெரிய அளவில் உருவெடுக்கும் முன்பே கட்டுபடுத்தி,
கூட்டத்தை கலைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குதிரையின் உயரம்
காவல் அதிகாரிக்கு சாதகாமாக இருகின்றது.
பொது மக்களுக்கும் கூட கூட்ட நெரிசலில் காவல்
அதிகாரியை எளிதாக கண்டுபிடித்து தேவையான நேரங்களில் தொடர்புகொள்வதற்கு குதிரையின்
உயரம் உதவியாக இருகின்றது. மேலும் பல நாடுகளில் வரலாறு, பாரம்பரியம்,
கலாச்சாரத்தில் குதிரைகள் கணிசமாக ஒருங்கினைக்கபட்டுள்ளன. குறிப்பாக ஸ்வீடன்,
ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் குதிரை படைகள் காவல் பணியில் ஆற்றுவதோடு மட்டும்
இல்லாமல் தங்கள் கலாசாரம் மற்றும் மரபுகளில் குதிரைகள் என்றுமே நிலைத்திரிருப்பவை
என்பதனை அறிவிக்கும் ஓர் கலாச்சார சின்னமாக இருகின்றது.
No comments:
Post a Comment