மொபைல் போனை இரவு முழுவதும் சார்ஜில்
போடக்கூடாது என்றும், அவ்வாறு செய்தால் பேட்டரி ஓவர் சார்ஜ் ஆன பிறகு அதன்
வாழ்நாள் குறையும் அல்லது அதிக சூடாகி வெடித்துவிடும் எனவும் பலரும் கூறுவார்கள்.
குறிப்பாக புது மொபைல் போன்களை வாங்கும் போது கடைகாரர்களும் நண்பர்களும் இது
போன்று கூறுவார்கள். சரி இதில் உண்மை இருக்கிறதா என்றால், ஒரு காலத்தில் ஒரு
அளவுக்கு உண்மையாக தான் இருந்தது. அக்கால மொபைல் போன் பேட்டரிகள் பெரும்பாலும்
நிக்கல் கேட்மியம் அல்லது நிக்கல் மெட்டல் ஹைட்ரேட் ஆகிய தனிமங்களை கொண்டு தான்
தயாரிக்கபட்டன.
1. இம்மாதிரியான பேட்டரிகளை கொண்ட மொபைல் போன்களை
ஓவர் சார்ஜ் செய்தால், அதாவது பேட்டரி சார்ஜ் 1௦௦ சதவிதத்தை தொட்டுவிட்ட பிறகும்
தொடர்ந்து சார்ஜ் செய்யும் போது அதிக வெப்பம் அடைய துவங்கும். இதனால் பேட்டரியின்
வாழ்நாள் குறைந்ததோடு மொபைல் போன் செயல் திறனிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனால்
இன்றைய நவீன ஸ்மார்ட் போன்களில் லித்தியம் அயன் பேட்டரிகள் பொருத்தபடுகின்றன. இவை
பழைய நிக்கல் அடிப்படையிலான பேட்டரிகளை காட்டிலும் செயல் திறனில் சிறப்பானவை.
மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் உருவான
கண்டுபிடிப்புகளால், இன்றைய ஸ்மார்ட் போன் பேட்டரிகள் மின் சக்தியை நிர்வகிப்பதில்
நுணுக்கமாக செயல்படகூடியவையாக இருகின்றன. அதாவது போதுமான மின் சக்தியை பெற்ற உடன்,
மின்னோட்டத்தின் அளவை படிப்படியாக குறைத்து விடுகின்றன. இதனால் பேட்டரி ஓவர் சார்ஜ்
ஆகி அதீத வெப்பம் அடைவது தடுக்கபடுவதால் பேட்டரியானது நீண்ட நாள் உழைப்பதோடு, ஸ்மார்ட்
போனில் ஏற்படும் பாதிப்புகளும் தடுக்க படுகின்றன.
2. பேட்டரி முழுமையாக டிஷ் சார்ஜ் ஆன பிறகே அதனை
சார்ஜ் செய்ய வேண்டும் எனவும் அப்போது தான் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகி நீடித்த
பயனை அளிக்கும் என சிலர் சொல்வார்கள். இது உண்மை தானா என்றால், நிச்சயம் இல்லை. பேட்டரி
இரண்டு சந்தர்பங்களில் மிகுந்த சிரமத்தை சந்திகின்றன. ஓன்று அவை முழுமையாக சார்ஜ்
ஆகும் போது, மற்றொன்று அவை முழுமையாக் டிஷ் சார்ஜ் ஆகும் போது. உண்மையில் ஒரு
பேட்டரியின் மின் சக்தி 5௦ சதவீதம் என்ற அளவில் இருக்கும் பொது தான் அதன் செயல்
திறன் அருமையாக இருக்கும். ஏனென்றால் அப்போது தான் பேட்டரிகளில் நகரும் லித்தியம்
அயனிகளில் ஒரு பாதி லித்தியம் கோபால் ஆக்சைடு லேயரிலும், மறு பாதி கிராபைட்
லேயரிலும் இருக்கும்.
இந்த சமநிலையால் பேட்டரியில் குறைந்த அழுத்தமே ஏற்படுகிறது.
இதன் விளைவாக சார்ஜிங் சுழற்சி கூடுவதோடு பேட்டரியின் வாழ்நாளும் செயல் திறனும்
அதிகரிக்கிறது. எனவே உங்கள் ஸ்மார்ட் போன் பேட்டரியின் நீண்ட ஆயுளையும்
ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய பேட்டரியை அதிகபட்சமாக 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யுங்கள். மற்றும் 2௦ சதவீதத்திற்கு
கீழ் டிஷ் சார்ஜ் ஆகமாலும் பார்த்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால், பேட்டரியின்
லித்தியம் அயனிகள் நெருக்கி அடித்துக்கொள்ளாமல் இலகுவாக நகரும்.
3. நாம் ஒரு புதிய ஸ்மார்ட் போன் வாங்கினால் அதன் USERS MANUAL ல் ALWAYS USE
OFFICIAL CHARGER என்ற எச்சரிக்கை கட்டாயமாக இடம் பிடித்து
இருக்கும். அதாவது அந்த ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனத்தின் சார்ஜரை மட்டுமே
வாங்கி பயன்படுத்துமாறு நம்மை அறிவுருத்துவாகள் இது அவர்களின் தயாரிப்பை மட்டுமே
வாங்க வேண்டும் என்ற வியாபாரத் தந்திரமே தவிர வேறு ஒன்றும் இல்லை. உங்கள் ஸ்மார்ட்
போனை சார்ஜ் செய்ய, பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் சார்ஜர்கள்
பயன்படுத்தினாலும் கூட பாதிப்புகள் ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால் சில
விதிவிலக்குகளும் இருக்கின்றன. அதாவது உங்கள் ஸ்மார்ட் போன் FAST CHARGING
வசதியுடைய USB டைப் C கேபிளை கொண்டதாக இருந்தால் பிற நிறுவங்களின் சார்ஜர்களை
பயன்படுத்தும் பொது FAST CHARGING அனுமதிக்காது. ஏனென்றால், FAST CHARGING
செய்யபடுவதற்கு ஏற்ப தரத்துடனும் விசேஷ வன் பொருளுடனும் சார்ஜர் இருக்க வேண்டும்.
இது ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சார்ஜெர்களில் மட்டுமே
இருக்கும்.
இறுதியாக ஸ்மார்ட் போன்களின் பேட்டரி விரைவாக
டிஷ் சார்ஜ் ஆவதை தடுப்பதற்காக, பேட்டரி சேவர் செயலிகளை பயன்படுத்துமாறு
சொல்வார்கள். ஆனால் இது ஒரு மிகப்பெரிய கட்டுக்கதை ஆகும். பேட்டரி சேவர் செயலிகள்,
பேட்டரியின் சக்தியை சிக்கனம் செய்வதை விட விரையம் ஆக்கவே வழி செய்கின்றன. இன்றைய
நவீன ஆண்ட்ராய்ட் இயங்கு தளமானது. பேட்டரி சக்தி விரயம் ஆகக்கூடிய சாத்தியமான
வழிகளை அடைத்து சிக்கனம் செய்யும் விதமாகவே வடிவமைக்கபட்டுள்ளது. எனவே இதற்காக THIRD PARTY APP கள் எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
No comments:
Post a Comment