Monday, 4 February 2019

பீனிக்ஸ் பறவை நெருப்பின் சாம்பலில் இருந்து உருவாகிறதா ?


   சாம்பலில் இருந்து புகை, தூசி, துகள்கள் தான் எழும் என நாம் நினைத்து கொண்டிருந்தால், ஒரு சிலர் பீனிக்ஸ் பறவையும் சாம்பலில் இருந்து தான் எழுகிறது என்கிறார்கள். பீனிக்ஸ் என்றால் என்ன, பீனிக்ஸ் பறவை என்பது நிஜமான பறவையா, பீனிக்ஸ் பறவை எப்படி இருக்கும். பீனிக்ஸ் பறவை சாம்பலுடன் எவ்வாறு சம்பந்தம் கொண்டுள்ளது. என்பன போன்ற தகவல்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.

   பீனிக்ஸ் பறவை என்பது பண்டைய எகிப்தியர்களின் காலம் தொட்டே புராண கதைகளில் கூறப்படும் ஒரு உயிரினம் ஆகும். பண்டைய கிரேக்க, ரோமானிய, அரேபிய, கிருஸ்துவ மற்றும் சீன புராண கதைகளிலும் கூட பீனிக்ஸ் பறவைகளின் பற்றிய குறிப்புகள் உள்ளன. பீனிக்ஸ் பறவைக்கு அழிவே இல்லை என கூறபடுவது போலவே. பீனிக்ஸ் பறவை பற்றிய புராண கதைகளும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இன்னுமும் அழியாமல் உள்ளது.

   பீனிக்ஸ் பறவையின் தோற்றம் பற்றிய தகவல்கள், காலத்திற்கு ஏற்ப மாறுபடுபவையாக உள்ளன. ஒரு தரப்பினர் பீனிக்ஸ் பறவையானது, கழுகை போன்ற இருக்கும் என்கிறார்கள். வேறு தரப்பினர் பீனிக்ஸ் பறவையின் தோற்றத்தை பருந்து, கொக்கு, மற்றும் நெருப்பு கோழி ஆகியவற்றுடன் ஒப்பிடுகிறார்கள். எனினும் பீனிக்ஸ் பறவையானது நெருப்புடன் தொடர்பு படுத்துவதால், அது சென்தீநிறம் கொண்ட ஓர் கம்பீரமான பறவையாக பெரும்பாலான ஓவியங்களிலும், சித்திரங்களிலும் வடிக்கப்பட்டுள்ளது.

   பீனிக்ஸ் பறவையின் தோற்றம் எப்படி பட்டது என்பதின் பல்வேறு கருத்துகள் நிலவினாலும், எல்லா குறிப்புகளும் ஒரே ஒரு விசயத்தில் ஒத்து போகிறது. அது பீனிக்ஸ் பறவையை சுற்றி இருக்கும் ஒழி வட்டம் ஆகும். பீனிக்ஸ் பறவையானது சூரியனின் ஒழி கதிர்களை எதிரொலிப்பதால், அதனை சுற்றி ஒரு ஒளிவட்டம் காணப்படும் என பெரும்பாலான குறிப்புகள் தெரிவின்கின்றனர். இதற்க்கு சூரிய வழிபாட்டுடன் பீனிக்ஸ் பறவை எப்பொழும் இணைந்து இருப்பதே காரணம் ஆகும்.

   புராணங்களின் படி ஒரு சமயத்தில் ஒரே ஒரு பீனிக்ஸ் பறவை தான் உயிர் வாழும். அதுவும் 5௦௦ ஆண்டுகள் வரை உயிர் வாழும் என்றும் கூறுகின்றனர். பீனிக்ஸ் பறவை தனக்கு மரணம் வருவதை உணரும் போது, நறுமணம் மிக்க மர சுல்லிகளை சேகரித்து அவற்றை கொண்டு ஒரு கூடு அமைத்து, அதில் தன்னை இருத்தி கொண்டு, பின்னர் அக்கூட்டுக்கு நெருப்பிட்டு அளித்து, கூண்டோடு எரிந்து சாம்பலாகும். பின்னர் எறிந்த சாம்பலில் இருந்து பிறக்கும் சின்னஞ்சிரிய பறவையானது தனது தந்தையின் சாம்பலை ஒரு பந்தை போல உருட்டி எடுத்துகொண்டு, பண்டைய எகிப்திய நகரமான ஹீலியோ போலிசுக்கு எடுத்து சென்று, அங்குள்ள எகிப்திய சூரிய கடவுளின் பலி பீடத்தில் சேமித்து வைக்கும். பின்னர், புதிய பறவை அடுத்த 5௦௦ ஆண்டுகள் உயிர் வாழும்.

   இவ்வாறு இறப்பு, சாம்பலில் இருந்து மறு பிறப்பு, தொடர்ந்து 5௦௦ ஆண்டு உயிர்ப்பு என பீனிக்ஸ் பறவைகள் கொண்டுள்ளதாக, புராணங்கள் கூறுகின்றன. வரலாறு முழுவதும் பீனிக்சின் ஒத்த பறவைவைகளை சீனர்கள், ஜப்பானியர்கள், ரஷ்யர்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்களின் புராணங்களிலும் காணமுடியும். பீனிக்ஸ் பறவை என்பது ஒரு புராண கதை இருப்பினும். அது கவிஞர்களாலும், கலைங்கர்களாலும், இறந்து, எரிந்து, சாம்பலில் இருந்து எழுந்து மீண்டும் மீண்டும் உயிர்த்து எழும் பீனிக்ஸ் பறவை போல என தாங்கு சக்த்தியை, மறுபிறப்பை வர்ணிக்கப்படும் ஒரு கற்பனை பறவையாக வாழ்ந்துகொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment