Wednesday, 6 February 2019

எலும்பை வைத்து பாலினம் கண்டறிவது எப்படி


   போலிசாரால் மீட்கப்படும் ஓர் எழுப்பு கூட்டின் பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்பதை எழுப்பு கூட்டின் மண்டை ஓடு மற்றும் இடுப்பு எலும்பை ஆய்வு செய்வதன் மூலமாக தடையவியல் வல்லுனர்கள் தீர்மானிக்கிறார்கள்.

   குறிப்பாக வெறும் மண்டை ஓட்டை மட்டுமே கொண்டு இறந்தவரின் பாலினத்தை கண்டறிய முடியம். இதற்கு மண்டை ஓட்டில் காணப்படும் பல்வேறு முக்கிய அம்சங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளபடுகின்றன. அதன் பிறகே மண்டை ஓட்டின் பாலினத்தை தடயவியல் வல்லுனர்கள் தீர்மானிகின்றார்கள்.

   பொதுவாக பெண்ணின் மண்டை ஓட்டை ஒப்பிடுகையில் ஆணின் மண்டை ஓட்டில் பல மாறுபட்ட அம்சங்கள் காணபடுகின்றன. இவையே இறந்த ஒருவரின் மண்டை மட்டுமே வைத்து அவரின் பாலினத்தை கண்டுபிடிக்க தடயவியல் வல்லுனர்களுக்கு உதவுகின்றன. பொதுவாக பெண்ணின் மண்ணை ஓட்டை காட்டிலும். ஆணின் மண்டை ஓடு கனமானதாக இருக்கும். மற்றும் எலும்பு மிகவும் அடர்த்தியானதாக இருக்கும். பெண்ணின் மண்டை ஓட்டை காட்டிலும். ஆணின் மண்டை ஓட்டில் தசை இணைப்பு பகுதிகள் அதிகமாக இருக்கும்.

   மேலும் நெற்றி, கண்கள், தாடை ஆகியவற்றிலும் ஆண் மற்றும் பெண் மண்டை ஓட்டிற்கு இடையே சில முக்கிய வேறுபாடுகள் இருக்கின்றன. முதலில் ப்ராண்டல் போன் எனப்படும் நெற்றி எலும்பு ஆண் மண்டை ஓட்டில் குறைந்த வட்டத்துடனும், பின் நோக்கிய சாய்ந்த கோணத்திலும் இருக்கும். அனால் இந்த ப்ராண்டல் போன் பெண் மண்டையோட்டில் அதிக வட்டத்துடனும், பின்னோக்கியும் குறைவாக சாய்ந்து இருக்கும். ஆண் மண்டையோட்டில் கண்களுக்கு மேல் அதாவது புருவத்தில் ஓர் புடைப்பு இருப்பதை தெளிவாக காண முடியும். அனால் இந்த புடைப்பை பெண் மண்டையோட்டில் தெளிவாக காணமுடியாது. இந்த புடைப்பை SUPRA ORBITAL RIDGE என்று அழைகின்றார்கள்.

   அடுத்ததாக கண் துளைகளை வைத்தும் மண்டையோட்டின் நபர் ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறிய முடியும். ஆண் மண்டையோட்டில் கண் துளைகள் ஓர் அளவுக்கு சதுர வடிவத்தில் இருக்கும். மேலும் துளைகளின் மேல்புற விளும்பு மலிங்கு இருக்கும். ஆனால் பெண் மண்டையோட்டின் துளைகள் கிட்டத்தட்ட வட்ட வடிவத்திலும் துளைகளின் மேல்புற விளும்பு கூர்மையாகவும் இருக்கும். அடுத்து தாடை எலும்பிலும் சில வேறுபாடுகள் இருகின்றன. ஆண் மண்டையோட்டின் தாடை எலும்பு ACUTE ANGLE எனப்படும் குருங்கோணத்தில் இருக்கும். அதாவது கிட்டத்தட்ட 90 டிகிரி கோணத்தில் இருக்கும். அனால் பெண் மண்டையோட்டின் தாடை எலும்பு OBTUSE ANGLE எனப்படும் விரி கோணத்திலும், அதாவது 90 டிகிரி கோணத்திற்கும் அதிகமாக இருக்கும்.

   மேலும் ஆண் மண்டையோட்டின் நாடி பகுதி சதுரமாகவும், பெண் மண்டையோட்டின் நாடி பகுதி கூர்மையாகவும் இருக்கும். இதோடு MASTOID PROCESSES, எனப்படும் ஒரு கூம்பு வடிவ எலும்பு காதுக்கு பின்புறமாக இருக்கும். இது பெண் மண்டையோட்டை காட்டிலும், ஆண் மண்டையோட்டில் கூடுதல் நீளத்துடன் இருக்கும். இப்படி போலிசாரால் மீட்கப்படும் ஒரு மண்டையோட்டில் காணப்படும் அனைத்து முக்கிய பகுப்பாய்வு செய்த பின்னரே தடயவியல் வல்லுனர்கள் மண்டையோட்டின் பாலினம் எதுவாக இருக்கும் என்பதை தீர்மானிகிறார்கள்.

No comments:

Post a Comment