இந்தியாவின் மூத்த வானொலி ஒலிபரப்பு இரண்டு
தனியார் வானொலி நிலையங்களுடன் தொடங்கியது. மும்பையிலும், கொல்கத்தாவிலும் இந்த
சேவை 1927-ல் தொடங்கப்பட்டது. 1930 முதல் அதை அரசு ஏற்றது. இந்தியன் “பிராட்காஸ்டிங் சர்வீஸ்” என்ற பெயரில் ஒளிபரப்பை தொடங்கியது. அது தான் 1936-க்கு பின் “ஆள் இந்தியா ரேடியோ” என்று பெயர்
மாற்றம் செய்யப்பட்டது. இதையும் 1957-ல் “ஆகாசவாணி” என்று பெயர் மாற்றி விட்டனர்.
இந்தியாவின் முதல் செய்தி ஒலிபரப்பு 1927-ல் ஜூலை 23-ல் மும்பை தனியார் நிலையத்தில் இருந்து
ஒளிபரப்பானது. ஆள் இந்திய ரேடியோவின் முதல் செய்தி ஒலிபரப்பு 1937 ஆகஸ்டில் தொடங்கியது. “ஆள் இந்தியா ரேடியோ”
அயல் நாட்டுகளுக்கான ஒளிபரப்பையும் செய்து வருகிறது. மொத்தம் 24 மொழிகளில் ஒலிபரப்பு செய்யபடுகிறது. அவற்றில் 8 இந்திய மொழிகள். இதுபோக ஆங்கிலம் மற்றும் 15 அயல் நாட்டு மொழிகளில் நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பப்படுகின்றன.
இதேபோல் இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி
ஒளிபரப்பான தூர்தர்சன், உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு அமைப்புகளில் ஓன்று. இது
சுமார் 984 டெரிஸ்டரியல் டிரான்ஸ்மீட்டர்கள் வழியாக இந்தியாவின் மொத்த
மக்கள் தொகையில் 85 சதவீதம் பேரை சென்று சேர்க்கிறது. தூர்தர்ஷன் இந்தியாவின் 46 நகரங்களில் நிகழ்ச்சி தயாரிப்பு மையங்களை
பெற்றுள்ளது.
இந்தியன் தொலைக்காட்சி ஒலிபரப்பு வரலாறு
டெல்லியில் இருந்து ஆரம்பமாகிறது. 1959-ல் இதன் சோதனை ஒலிபரப்பு தொடங்கியது. இது வாரத்த்திற்கு
இரண்டு முறை மாலை 5 மணி மதல் இரவு 8 மணி வரை மூன்று மணி நேரம் ஒளிபரப்பப்பட்டது. இது 15 மெயில் சுற்றளவுக்கு மட்டும் தெரியும். 1965 முதல் தினமும் ஒரு மணி நேரம் தொலைகாட்சி
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
அகில இந்திய வானொலியின் ஒரு பகுதியாக இருந்த
டெலிவிஷன் சர்வீஸ் 1976 முதல் தூர்தர்ஷன் என்ற புதிய பெர்யரில் தனித்து இயங்கத்
தொடங்கியது. 1994, ஆகஸ்ட் 15 முதல் தூர்தர்ஷன் புதிதாக 13 சேனல்களை ஒளிபரப்பத் தொடங்கியது. இந்திய
ஒலிபரப்பு வரலாற்றில் 1976 முதல் தூர்தர்ஷன் என்ற புதிய பெயரில் தனித்து இயங்கத்
தொடங்கியது.
இந்திய ஒலிபரப்பு வரலாற்றில் 1997 ஜூலை 22 ஒரு முக்கியமான நாளாகும். அன்றுதான் “பிரசார்
பாரதி” குறித்து அரசின் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து 1997 செப்டம்பர் 15 முதல் “பிரசார் பாரதி” சட்டம் அமலுக்கு கொண்டு
வரப்பட்டது. இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடுகள்
நீக்கப்பட்டு தன்னாட்சி வழங்கப்பட்டது. இன்றைக்கும் தூர்தர்ஷன் வடஇந்திய
மாநிலங்களில் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
No comments:
Post a Comment