Monday, 25 March 2019

ATM ல் அட்டையில் பொருத்தப்பட்டுள்ள EMV CHIP பற்றி தெரியுமா?

   ஒரு சில மாதங்களுக்கு முன்பு வரை, துணி கடைகள், நகை கடைகள், மால்கள், சூப்பர் மார்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த வேண்டி நமது டெபிட் அல்லது க்ரிடிட் கார்ட்கள் கொடுக்கும்போது, அதனை அவர்கள் PAYMENT TERMINAL எனப்படும் ஒரு சாதனத்தின் பக்கவாட்டில் SWIP செய்து பணப்பரிமாற்றம் செய்து கொள்வார்கள். ஆனால் இன்று கார்டுகளை SWIP செய்வதற்கு பதிலாக PAYMENT TERMINAL முகப்பில் இருக்கும் ஒரு ஸ்லாட்டில் நுழைகிறார்கள். சில வினாடிகள் கார்டு பரிசோதனை செய்யப்பட்டு தேவையான பணம் நமது வங்கி கணக்கில் இருந்து அவர்களது வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யபடுகிறது. PAYMENT TERMINAL சாதனத்தில் முன்பு SWIP செய்யப்பட்ட டெபிட் மற்றும் க்ரிடிட் கார்ட்கள் இன்று உள்நுளைப்பதற்கு என்ன காரணம் என்பதற்கு கார்களில் பொருத்தப்பட்டுள்ள EMV சிப் தொழில்நுட்பம் ஆகும். SBI உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் தங்கள் வாடிகையளர்களுக்கு EMV சிப் பதிக்கப்பட்ட ATM கார்டுகளை அறிமுகம் படுத்திவருகின்றன.

   EMV சிப் தொழில்நுட்பம் என்பது EUROPAY, MASTERCARD மற்றும் VISA ஆகிய வங்கி அட்டை உற்பத்தி நிறுவங்களால் இணைத்து உருவாக்கப்பட்ட ஓர் தொழிநுட்பம் ஆகும். எனவே இந்நிறுவன பெயர்களில் உள்ள முதல் எழுத்தை கொண்டு EMV சிப் தொழில்நுட்பம் என்று அழைக்கபடுகிறது. EMV அட்டைகளில் வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் ஒரு MICRO PROCESSOR CHIP இத்தொழில்நுட்பத்தின் சிறப்பம்சம் ஆகும். EMV CHIP தொழில்நுட்பம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் புதிது என்றாலும் கடந்த 2000 மாவது ஆண்டின் முற்பகுதியிலேயே ஐரோப்பிய நாடுகளில் அறிமுகபடுத்தபட்டுவிட்டது. தற்பொழுது உலக அளவில் அறிமுகபடுத்தபட்டு வரும் EMV CHIP தொழில்நுட்பம் ஆனது. 1970 அறிமுகமாகி தற்போது வரை நீடிக்கும் MAGNETIC SWIP கார்களுக்கு மாற்றாக உருவெடுத்துள்ளது.

   MAGNETIC SWIP கார்டுகள் பல ஆண்டுகள் புலகத்தில் இருந்தமையால் அவற்றுள் பதியப்பட்டு இருக்கும் வாடிக்கையாளர்களின் தகவல்களை எப்படி திருடலாம் என்பதை குற்றுவாளிகள் தெரிந்து வைத்துள்ளனர். இதன் மூலம் போலியான ஒரு அட்டையை உருவாக்கி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். ஆனால் EMV கார்டுகளில் சிப் பதிக்கபட்டுள்ளதால் பரிவர்த்தனையில் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குவதோடு க்ரிடிட் கார்டு குற்றங்களையும் குறைகிறது.

   MAGNETIC SWIP கார்களை காட்டிலும் EMV சிப் கார்கள் எப்படி பாதுகாப்பானது என்றால் ஒரு MAGNETIC SWIP அட்டையில், அந்த அட்டைக்கு சொந்தமானவரை பற்றிய அனைத்து தகவல்களும் MAGNETIC SWIP மாறாத வடிவத்தில் பதியப்பட்டு இருக்கும். எனவே இதனை பிரதி எடுத்து போலியாக தயாரிக்கப்பட்ட மற்றொரு கார்டின் MAGNETIC SWIP ல் எளிதாக பதிந்து கொண்டு பயன்படுத்தலாம். ஆனால் EMV ஆட்டைகளில் இவ்வாறு செய்ய முடியாது.

   ஒரு பரிவர்த்தனையின் போது பயன்படுத்தப்படும் அட்டை அசலானதா என்பதை அட்டை வழங்குனரால் DYNAMIC CRYPTOGRAM தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ONLINE மூலமாகவோ அல்லது PAYMENT TERMINAL சாதனத்தில் OFFLINE STATIC DATA AUTHENTICATION மூலமாக சரிபார்க்கப்பட்ட பின்னரே அந்த பரிவர்த்தனை அனுமதிக்கபடுகிறது. எனவே EMV அட்டைகளை போலியாக தயாரித்து பயன்படுத்துவது என்பது முடியாத காரியம். மேலும் EMV அட்டையை பரிவர்த்தனைகாக ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் அதில் பதியப்பட்டு இருக்கும் MICRO PROCESSOR CHIP மீண்டும் பயன்படுத்த முடியாத ஒரு தனித்தன்மையான பரிவர்த்தனை தரவுகளை உருவாக்குகிறது. இதனால் திருடர்கள், ஓர் இடத்தில் இருக்கும் பரிவர்த்தனைகளின் தரவுகளை திருடி, அடுத்தடுத்து பரிவர்த்தனை செய்து மோசடி செய்ய முடியாது.

   மேலும் பரிவர்த்தனை செய்ய முயற்சிக்கும் ஒருவர் அட்டையின் உரிமையாளர் தானா என்பது OFFLINE PIN அல்லது ONLINE PIN அல்லது கையெழுத்து சரிபார்க்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அந்த பரிவர்த்தனை அனுமதிக்கபடுகிறது. இதனால் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட அட்டைகள் பிறரால் பயன்படுத்தபடுவது தடுக்கபடுகிறது. மேலும் EMV சிப் பதிக்கப்பட்ட அட்டைகளை உலக அளவிலும் பயன்படுத்தலாம். EMV சிப்களை ஏற்று கொள்ளும் எந்த ஒரு PAYMENT TERMINAL சாதனத்திலும் பயன்படுத்தி பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

   EMV சிப்கள் பதிக்கப்பட்ட அட்டைகளில் பின் பகுதிகளில் இன்னமும் MAGNETIC SWIP இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் தற்போது தான் EMV சிப்கள் பதிக்கப்பட்ட பற்று அட்டைகள் அல்லது கடன் அட்டைகள் பரவலாக அறிமுகபடுத்தபட்டு இன்னமும் பல்வேறு வர்த்தக நிறுவங்களும் ATM இயந்திரங்களும் CHIP ல் இருக்கும் தகவல்களை படிக்க கூடிய PAYMENT TERMINAL களை கொண்டிருக்கவில்லை. எனவே பொது மக்கள் வசதிக்காக EMV சிப் அட்டைகளில் MAGNETIC SWIP ம் இடம் பெறுகிறது. ஆனால் அடுத்தடுத்து வரும் EMV சிப் அட்டைகளில் MAGNETIC SWIP நீக்கப்பட்டுவிடும்.

No comments:

Post a Comment