பேஷன் உலகில் நடக்கும் விநோதங்களுக்கு அளவே
இல்லை. சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சாக்லேட் விற்பயையை அதிகரிப்பதற்காக
சாக்லேட் திருவிழா நடத்தப்பட்டது. 17-வது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆரம்ப
நிகழ்ச்சியாக பேஷன் ஷோ நடந்தது. இதில் அழகான பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு மாடல்
அழகியான 29 வயது கேரின் பெரி அழைக்கப்பட்டிருந்தார். இவரது ஆடைகள்
வெள்ளை, பிரவுன் நிற சாக்லேட் பார்கள், முந்திரி, பாதாம் மற்றும் பிலம் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
முதலில் சாக்லேட் பார்களால் செய்யப்பட்டிருந்த
ஸ்கர்ட் அணிந்து கேரின் பெரி மேடையில் தோன்றினார். பார்வையாளர்கள் மத்தியில் அவர்
ஸ்டைலாக நடந்து வந்தார். அப்போது ஸ்கர்ட்டின் முன்பகுதியில் இருந்த 2 சாக்லெட்
பார்கள் திடீரென கழன்று விழுந்தன. சற்றும் எதிர்பாராத கேரின் வெட்கத்தில் விலகிய
பகுதியை கைகளால் மறைத்துக் கொண்டார்.
ஆனாலும் சாக்லேட் பார்களுக்கு கேரின் மீது என்ன
கோபமோ தெரியவில்லை. தொடர்ந்து உடைந்து நொறுங்கிக் கொண்டே இருந்தன. சில நொடிகளில்
அனைத்தும் விழுந்து பார் பொருத்துவதற்காக
பயன்படுத்தப்பட்ட வளையம் மட்டுமே கேரின் பேரியின் உடலில் இருந்தது.
சாக்லெட் ஆடை உடுத்தி அடுத்தடுத்து வளம் வர
இருந்த அழகிகளின் உடைகள் விழாமல் நன்கு பொருத்தப்பட்டுள்ளதா என்று உடனடியாக
சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment