Sunday, 24 March 2019

உடலில் ஏற்படும் கட்டிகளுக்கான காரணம் மற்றும் தீர்வு


   சர்க்கரை நோயாளிகள், சுகாதாரமற்ற இடத்தில் வசிப்பவர்கள், உணவு கட்டுப்பாடு இல்லாதவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், அடிக்கடி தொற்றுநோய்க்கு ஆளாகுபவர்கள் மற்றும் புகைப் பிடிப்பவர்களுக்கு அடிக்கடி கட்டிகள் உண்டாகின்றன. லேசான விக்கமாக ஆரம்பித்து அதில் தடிப்பு, வலி, எரிச்சசல் ஆகியன தோன்றி பின் கட்டியாக மாறுகிறது.

   இது போன்று தோலில் சதை கட்டிகள் வளர்ந்து அது உடைவதற்கு பல நாட்களாகிறது. அது வரை வலி காய்ச்சல், நெறிகட்டுதல் போன்ற பல தொல்லைகளால் பாதிப்பு ஏற்படுவதால், கட்டிகளை உடனே உடைத்து குணமடைய நோய் எதிர்ப்பு தன்மையுள்ள மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கட்டியில் தோன்றும் சீழ் பிற இடங்களில் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.


   இவ்வாறு தோலில் தோன்றும் கட்டிகள் நாளுக்கு நாள் பெரியாகி கடும் வேதனையை உண்டாக்குவதுடன் குறிப்பிட்ட அளவு வளர்ந்ததும், சீழ் கோர்த்து உடைகின்றன. கட்டிகள் முற்ற ஆரம்பித்ததும் அவற்றை மருத்துவரின் மேற்பார்வையில் கீறி, புண்களை ஆற்ற வேண்டும், இல்லாவிட்டால் உறுப்புகள் அழுகிப் போக ஆரம்பித்துவிடும். சாதாரன கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே பலுக்கச் செய்து உடைக்கும் அற்புத ஆற்றலுடைய எளிய மூலிகை தான் சப்பாத்திக்கள்ளி.


   “ஒபன்சியா டிலேனி” என்ற தாரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளில் ஏராளமான நீர்ச்சத்தும், சில வேதிப் பொருட்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து ரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மை உடையவை.


   முட்கள் உள்ள சப்பத்திக்கள்ளியின் இளைத்தண்டை பிளந்து, வெளிப்புரமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வித்துவர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் குணம் உண்டாகும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.


   ஹார்மோன்களின் மாறுபாட்டினால் பருக்கள் உண்டாகின்றன. இவற்றை மேப்பரு எனவும் கூறுவார்கள். பழங்கள், பச்சை காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் உண்பதுடன், மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது 8 முதல் 10 முறை முகம் கழுவ வேண்டும். சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி பருவுள்ள இடங்களில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி வர தலும்புகளின்றி பரு மறையும் என்று சித்த மருத்துவத்தில் குறிப்புகள் உள்ளன.

No comments:

Post a Comment