Tuesday, 26 March 2019

ரோமானிய பெண்களின் வியக்க வைக்கும் பண்டைய கால வாழ்க்கை முறை


   பண்டைய கால ரோமர்கள், வீரம், கலை, அழகு என அனைத்து வகையிலும் சிறந்து காணப்பட்டனர். இன்று வரையிலும் அவர்களது பண்டைய காலத்து கட்டிட கலை உலகம் மெட்சும் வகையில் வரலாற்றில் சிறப்பு மிக்க கம்பிரத்துடன் திகழ்ந்து வருகின்றது ஆனால், இவர்கள் தங்கள் மகள், மனைவியரை எப்படி நடத்தி வந்தனர் என்று பெரிதும் யாரும் அறியாத ஓன்று பண்டைய காலத்து ரோமாபுரி பெண்கள் மிகவும் அழகாக இருந்தனர். வசதியுடன் இருந்தனர். என்பதை எல்லாம் வரலாற்று குறிப்புகள் மூலம் அறிய முடியும். ஆனால் அவர்களும் கூண்டு கிளியாக தான் தங்கள் வாழ்நாளை கழித்துள்ளனர்.

    பண்டைய காலத்து ரோமாபுரி பெண்கள் உடற் பயிற்சியில் ஈடுபடும் போது மார்பக பகுதியில் பிளாஸ்திரி போன்ற ஒன்றை சுற்றி கொள்வார்கள். அந்த காலத்தில் Bra கண்டுபிடிக்க வில்லை என்ற காரணத்தால், இப்படி ஒரு முறையை கடைப்பிடித்து வந்ததாக அறியபடுகிறது. பண்டைய கால ரோமா புரியில் வாழ்ந்து வந்த பணக்கார பெண்கள் தங்கள் சொந்த குழந்தைகளுக்கே தாய்பால் கொடுக்க மாட்டார்கள். அதற்கு மாறாக வெட்நெஸ் எனப்படும், பாலுட்டும் தாதி பெண்களிடம் கொடுத்து விடுவார்கள் அல்லது இதற்காகவே பணியமர்த்தப்பட்ட பெண்கள், அல்லது தங்களிடம் அடிமையாக வரும் பெண்களை தாய்பால் ஊட்ட வைத்துள்ளனர். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த எழுத்தாளர் SORANUS, குழந்தை பிறந்த மறுநாளில் இருந்தே தாதி பெண்களிடம் கொடுத்து விடுவார்கள் என்று தனது புத்தகத்தில் குறிபிட்டுள்ளார்.

    ரோமனில் இருந்த மருத்துவர்கள் அப்போதே தாய்பாலின் ஆரோக்கியம் குறித்தும், அதன் படி குழந்தையிடம் காணப்படும் அறநெறி குறித்தும் கூறியுள்ளனர். வேறு பெண்கள் தாய்பால் ஊட்டுவதால், அந்த குழந்தைகளிடம் அறநெறி பண்புகளில் மாற்றம் தென் படலாம் என்றும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் அந்த காலத்தில் ரோம பணக்கார பெண்கள் தாய்பால் ஊட்ட முன் வராமல் இருந்ததற்கு காரணம், அழகு கெட்டு விடும் என்பதற்காக தான் இதற்கு ஆண்களும் உடந்தையாக இருந்து வந்துள்ளனர். ரோம பெண்களின் குழந்தை பருவம் மிக விரைவாக முடிந்து விடும்.

    இவர்களுக்கு 12 வயதிலேயே திருமணம் முடிந்து விடும். பெருபாலும் வயதுக்கு வந்த உடனே திருமணம் செய்து வைக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. அந்த நேரத்தில் இளம் வயதில் திருமணம் செய்து கரு வுற்ற காரணத்தால், பிறந்த சில நாட்களில் குழந்தைகள் இறந்து விடும் மேலும் இறந்தே பிறந்த சிசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்றும் கூறபடுகிறது.

    திருமணம் ஆனா நாட்களில் இருந்து 12 வயது சிறுமிகள் தங்களது பொம்மைகள் எல்லாம் ஓரம் கட்டிவிட்டு குழந்தை தனத்தை தள்ளி வைத்துவிட்டு பெரிய பெண்கள் போல நடந்து கொள்ள வேண்டும். ஒரு வேலை திருமணம் செய்து கொள்ளாமல் இறந்து விட்டால், அவர்களையும் அவர்கள் பயன்படுத்திய பொம்மைகளையும் சேர்த்து புதைத்து விடுவார்கள். இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோம பெண்களின் வாழக்கை இப்படியாக இருந்தது என்று கண்டறியப்பட்டது. மேலும் ஒவ்வொரு பெண்ணும் தனது சொந்த செலவில் பார்பி பொம்மை போல ஒன்றை வைத்துள்ளனர். என்றும் ஆவில் கண்டறிந்து உள்ளனர்.

    மேலும் ரோம பெண்களின் சாதனைகளுக்கு மதிப்பும் அளித்துள்ளனர். பொதுவாக கணவன் மனைவி விவாகரத்து பெற்றால் குழந்தை அம்மாவிடம் தான் வளர வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் பண்டைய காலத்து ரோமனில் இதற்கு நேர் மாறாக, விவாகரத்துக்கு பிறகு தந்தையின் அரவணைப்பில் தான் குழந்தை வளர வேண்டும் என்ற சட்டம் இருந்துள்ளது. மேலும் விவாகரத்து பெற்ற பிறகு கணவன் குடும்பத்திற்கு திருமணத்தின் போது கொடுத்த வரதட்சணை, பணம், நிலங்களை பெண் வீட்டார் திரும்ப பெற்று கொள்ளலாம் என்ற முறையும் பின்பற்றபட்டு வந்துள்ளது. இங்கயும் ஒரு சில சட்டங்களை தங்களுக்கு ஏற்றார் போல ரோம ஆண்கள் வைத்திருந்தனர். அதாவது விவாகரத்துக்கு காரணம் அந்த பெண்ணின் குணாதிசியங்கள் சரியில்லை என்றால் அவர் மோசமானவர் என்றால் அந்த வரதட்சணையை ஆண்களே வைத்து கொள்ளலாம். என்ற சட்டம் இருந்துள்ளது.

   அன்றைய சட்டம் விவாகரத்துக்கு பிறகு தங்கள் குழந்தை மீது பெண்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்று கூரியிருகிரார்கள். இதனால் உறவுகளில் பிரிவு ஏற்படாமல் முடிந்த வரை பார்த்து வந்துள்ளனர் அக்காலத்து ரோமாபுரி பெண்கள். பண்டைய காலத்து ரோமபுரி பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்து வந்துள்ளது. அலங்கரித்து கொள்வது, தலைக்கு டை அடிப்பது, வீட்டிலேயே அலங்கார பொருட்கள் தயார் செய்வது என பெண்களுக்கு நிறைய வேலைகள் இருந்துள்ளது. அந்த காலத்தில் பெண்களுக்கு கல்வி அவசியம் என்று கருதியுள்ளனர். 

   மேலும் அவர்கள் நிச்சயம் எழுத படிக்க கற்றிருக்க வேண்டும் என்றும் அதற்காக மேல் தட்டு மற்றும் நடு தட்டு வர்க்க மக்கள் ஆசிரியர்களை நியமனம் செய்து வீட்டிலேயே வைத்து பாடம் கற்பித்துள்ளனர். என்னதான்  படித்தாலும், வீட்டு வேலை செய்தல், குழந்தைகளை பார்த்து கொள்ளுதல், கணவனை மகிழ்வித்தல் தான் அவர்களது முழு நேர கடமையாக இருந்துள்ளது.

No comments:

Post a Comment