Saturday, 2 March 2019

RED EYE EFFECT பற்றி தெரியுமா?



   நாம் வெளிச்சம் குறைந்த மாலை வேளைகளில் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தில், நமது கண்களில் கருவிழியில் சிவப்பு நிற ஒளி தோன்றி அப்புகை படத்திற்கு ஒருவித அமானுஷ்ய தன்மையை கொடுக்கும். அவ்வாறு கண்களில் தோன்றும் சிவப்பு ஒளியை, RED EYE EFFECT என்கிறார்கள். இந்த RED EYE EFFECT ஆனது கேமராவின் பிளாஷ் ஒளி காரணமாக தோன்றுகிறது என பலருக்கும் தெரிந்தாலும், அது ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று பலரும் அறிவதில்லை.

   பொதுவாக குறைவான வெளிச்ச சூழ்நிலையில் நமது கண்களின் பாவைகள் கூடுதல் வெளிச்சம் பெரும் பொருட்டு விரிவடைகின்றன. எனவே, குறைவான வெளிச்சத்தில் புகைப்படங்கள் எடுக்கும் போது கேமராவின் அதீத பிளாஷ் ஒளி நமது கண்களுக்குள் நுழைகிறது. அவ்வாறு நுழையும் அதீத ஒளியை கட்டுபடுத்த கண்களின் பாவைகள் சுருங்கி கொள்வதற்கு போதுமான அவகாசம் கிடைப்பது இல்லை. ஆகையால் கண்களுக்குள் நுழையும் அதிக ஒளியானது கண்களின் பின் பகுதியில் அமைந்திருக்கும் CHOROID LAYER எனப்படும் இணைப்பு திசுவின் அடுக்கில் மோதி பிரதிபலிகிறது. அப்படி பிரதிபலிக்கும் ஒளி சிவப்பாக தோன்ற COROID LAYER நிலவும் அதிக ரத்த ஓட்டமே காரணமாகிறது.

   பொதுவாக குறைந்த வெளிச்ச சூழலில் புகைப்படங்கள் எடுக்கும் போது கேமரா லென்சை உற்று பார்க்கும் போது தான் புகைப்படங்களில் இத்தைகைய சிவப்பு கண் விளைவு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க புகைப்படங்கள் எடுக்கபடுவதற்கு முன்பாக அருகில் உள்ள எரியும் ஒரு பல்பை பார்ப்பதன் மூலம் தவிர்க்கலாம். என்றாலும் கூட இன்றைய நவீன கேமராகளில் ANTI RED EYE FUNCTION என்ற வசதி நிறுவப்பட்டுள்ளது. இந்த வசதியை TURN ON செய்துவிட்டு புகைப்படங்கள் எடுக்கும் போது கேமரா இறுதி பிளாஷ் உமிழ்வதற்கு முன் சில FREE ப்ளாஷ்களை உமிழும் இதனால் நமது கண்களின் பாவிகள் சுருங்கி விரிந்து கேமராவின் இறுதி ப்ளாஷ் ஒளியை கட்டுபடுத்தும் விதமாக ஆயுத்தமாகி கொள்கிறது.

   இதனால் தான் சில கேமராக்கள் ஒரே ஒரு புகை படம் எடுக்க ஓன்று மேற்பட்ட ப்ளாஷ் ஒளிகளை உமிழும். ஒரு சிலரை குறைவான வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்தாலும் அவர்களது கண்களில் இந்த RED EYE EFFECT ஏற்படுவது இல்லை. ஏனென்றால் ப்ளாஷ் ஒளியின் பிரதிபலிப்பின் தீவிரம், ஒவ்வொருவருக்கும் அவர் தம் கண் பாவைகளின் அளவு, வயது மற்றும் கண்களின் நிறம் ஆகியவற்றை பொருத்து மாறுபடுகின்றன.

   குறிப்பாக மென்மையான தோழ் மற்றும் நீளம் அல்லது பச்சை நிற கண்களுடைய நபர்களின் புகைப்படங்களில் இந்த RED EYE EFFECT அடிக்கடி ஏற்படும். அதே போல் பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகளையும் குறைந்த வெளிச்சத்தில் புகைப்படம் பிடிக்கும் பொது அவற்றின் கண்களும் பிரகாசமாக ஒளிர்வதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இதற்கு காரணம். அவற்றின் கண்களில் இருக்கும் TAPETUM LUCIDUM எனப்படும் திசு அடுக்கு காரணமாகிறது. இந்த திசு அடுகானது. RED ROAD REFLECTOR எனப்படும் ஒளி பிரதிபளிபானாக செயல்படும் போது விலங்குகளுக்கு இரவு நேரங்களில் நன்றாக பார்க்கவும் உதவுகிறது.

No comments:

Post a Comment