Tuesday, 19 March 2019

விமானத்தில் WIFI எப்படி செயல்படுகிறது தெரியுமா ?



   இன்றைய நவீன யுகத்தில், இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இடங்களில் WIFI தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் வசதியை பெற்று நாம் இணையத்தோடு இந்து இருக்க முடிகிறது. இந்த இடங்களில் இணைக்கப்பட்டு இருக்கும் ரொவ்டர் ஆனது INTERNET SERVICE PROVIDER எனப்படும், இணைய சேவை வழங்குனரோடு WIRE மூலமாக நேரடியாக தொடர்பு கொண்டு இன்டர்நெட் வசதியை பெறுகிறது. பின்னர் ரொவ்டரில் இருக்கும் ஆண்டனா மூலமாக எலெக்ட்ரோ மேக்னடிக் கதிர்களை உமிழ்ந்து கம்பி இல்லா தொடர்பு மூலமாக நாம் இணையத்தோடு இணைந்து இருக்க முடிகிறது.


   ஆனால் பறக்கும் ஒரு விமானத்தில் WIFI எப்படி வேலை செய்கிறது. 35,000 அடி உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்தை இணைய சேவை வழங்குனரோடு நேரடி கம்பி தொடர்பு மூலமாக இணைப்பது சாத்தியம் இல்லை. எனவே கம்பி இல்லா தொடர்பு மூலம் இணைக்கபட வேண்டும். அதனை எவ்வாறு சாத்தியம் செய்து, விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்டர்நெட் சேவையை பெற்று தருகிறார்கள் என்று தெரியுமா?


   35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் ஓர் விமானத்திற்குள் உங்கள் சாதனத்திற்கு இணைய சமிக்கைகளை அளிக்க இரண்டு வழிகள் உள்ளது. அவற்றில் ஒரு வழி, சுருக்கமாக ATG எனப்படும் AIR TO GROUND தொழில்நுட்பம் ஆகும். அதாவது விமானம், தரையில் நிறுவப்பட்டு இருக்கும் செல்போன் டவர்களுடன் கம்பி இல்ல தொடர்பு மூலம் இணைந்து இருக்குமாறு செய்யபடுகிறது. செல்போன் டவரானது விமானத்தின் வயிற்று  பகுதியில் நிறுவப்பட்டு இருக்கும் ஓர் ரிசிவர் ஆண்டனாவை தொடர்பு கொண்டு ரேடியோ சமிக்கைகளை அனுப்புகிறது.


   விமானம் வான்வெளியில் பல்வேறு பகுதிகளில் பயணம் செய்யும் போது விமானத்தின் ரிசிவர் ஆண்டனா அதன் அருகாமையில் இருக்கும் செல்போன் டவர் எதுவோ அதனுடன் இணைந்து கொள்ளும். இதனால் இணைய இணைப்பில் தடை ஏதும் இருப்பது இல்லை. ஆனால் செல்போன் டவர்கள் இல்லாத பகுதிகளிலும், மற்றும் நீண்ட கடல் பரப்பிலும் விமானம் பறக்கும் போது இணைய இணைப்பை பெருவதில் சிக்கல் ஏற்படும். விமானத்திற்குள் இணைய இணைப்பை பெற மற்றொரு வழி, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகும்.


   தரையில் நிறுவப்பட்டு இருக்கும் ட்ரான்ஸ் மீட்டர் டவர்கள் அனுப்பும் ரேடியோ சமிக்கைகளை, விண்வெளியில் சுமார் 35,786 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வரும் ஜயோ ஸ்டேஷனரி செயற்கைக்கோள் பெற்று பின் அவற்றை விமான உடற்பகுதியான மேல் பகுதில் பொருத்தப்பட்டு இருக்கும் ரிசிவர் ஆண்டனாவுக்கு அனுப்புகிறது. ரிசிவரை வந்து அடையும் சிக்னல்கள் விமானத்திற்குள் இருக்கும் ரொவ்டருக்கு அனுப்பப்பட்டு, ரொவ்டர் மூலமாக WIFI சிக்னல்கள் பயணிகளின் சாதனங்களை வந்தடைகிறது. செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் இணையத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும் மேலும் விமானம் உலகின் எப்பகுதியில் பறந்தாலும் செயற்கைகோள்கள் மூலமாக இணையம் தடங்கல் இன்றி கிடைக்கும்.


   பெரும்பாலான விமான நிறுவங்கள் தங்கள் விமானகளில் WIFI சேவையை அளிப்பதில்லையே அது ஏன் என்பதற்கு காரணம். என்னவென்றால், விமானத்திற்குள் WIFI வசதியை ஏற்படுத்துவது கூடுதல் செலவு ஆகும் வேலை என்பதால் பல விமான நிறுவங்கள் இதனை தவிர்த்து விடுகின்றன. ஏனெனில் ATG மூலமாகவோ அல்லது செயற்கைக்கோள் மூலமாகவோ சிக்னல்களை பெறுவதற்கு குவிமானமான பெரிய ஆண்டனா விமானத்தின் மேல்புறமும் கீழ்புறமும் பொருத்தப்பட வேண்டும். இந்த ஆண்டனாவானது, விமானத்தின் பின்னோக்கி இழுக்கும் விசையை அதிகபடுத்துவதால் கூடுதல் எரிபொருள் செலவாகிறது. மேலும் செயற்கைக்கோள் மூலமாக இன்டர்நெட் சிக்னல்களை பெற கூடுதல் செலவு பிடிக்கும்.

   எனவே, இந்த செலவீனத்தை சரி செய்ய வேண்டுமானால், விமான பயண கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். பயண கட்டணம் அதிகரித்தால், அந்த விமான நிறுவனத்தின் விமானங்களில் பயணிக்க மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே, அதிக லாபம் ஈட்டும் விமான நிறுவங்களை தவிர்த்து பிற விமான நிறுவங்களில் WIFI வசதி இருபதில்லை.

No comments:

Post a Comment