கார் உரிமையாளர்கள் பெரும்பாலும் தண்ணீரை மட்டுமே ஊற்றி காரை இயக்குகிறார்கள், தண்ணீருடன் கூலன்ட் அல்லது ஆண்ட்டி பிரீஷேர் எனப்படும் அடிடீவை சேர்ப்பதில்லை. கூலன்ட் என்பது கார் ரெடியேட்டருக்குள் இருக்கும் தண்ணீர், உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் ரசாயன கலவை ஆகும். அதாவது கடும் குளிர் காலத்தில் குறிப்பாக 32 பாரன்ஹீட்க்கும் குறைவான வெப்ப நிலை நிலவும் போது, கார் ரெடியேட்டருக்குள் இருக்கும் தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகிவிடும். இதனால் ரெடியேட்டரின் பயன் என்கினுக்கு கிடைப்பதில்லை. எனவே தண்ணீரில் கூலண்டை கலந்து, அந்த கலவையை கார் ரேடியேட்டரில் ஊற்றுவதால், உறைபனி நிலவும் காலத்திலும் ரேடியேட்டரில் இருக்கும் தண்ணீர் உறையாமல் நீர்ம நிலையிலேயே இருந்து எஞ்சினை குளிர்விக்கும் பணியை சிறப்பாக செய்யும்.
ஆனால் நம் நாட்டில் எப்போதும் வெப்பம் நிலவுவதால், குளிர் காலத்திலும் கூட குளிரானது தண்ணீரை உரைய வவைக்கும் அளவில் இல்லை. எனவே கார் ரேடியேட்டரில் இருக்கும் தண்ணீர் உறைய வாய்ப்பே இல்லை என கருதும் கார் உரிமையாளர்கள் ரேடியேட்டரில் தண்ணீரோடு கூலண்டை சேர்க்க அவசியமில்லை என நினைகின்றார்கள். இப்படி எண்ணுவது தவறு இல்லை என்றாலும் ரேடியேட்டரில் கூலண்டை சேர்க்காமல் தண்ணீர் மட்டும் ஊற்றி காரை இயக்கி வந்தால், அது எஞ்சினின் செயல் திறனில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.
ரேடியேட்டர் என்பதன் விளக்கம்: கார் ரேடியேட்டர், ஹீட்எக்ஸ்சென்சேர் எனப்படும் வெப்ப மாற்றியாக செயல்படுகிறது. வெப்ப மாற்றி என்பது வெப்பம் மற்றும் குளிரூட்டும் நோக்கத்திற்காக ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு வெப்பத்தை பரிமாற்றம் செய்யும் ஒரு சாதனம் ஆகும். இன்டெர்னல் கம்ப்ரேசன் எஞ்சின்களை குளிர்விக்கும் மிக முக்கிய பணியை செய்யும் ரெடியேட்டர்கள் கார்களில்மட்டும் இல்லாமல் பிற ஆட்டோ மொபைல் வாகனங்கள் ரயில் எஞ்சின்கள் பிரிஸ்டன் எஞ்சின் விமானங்கள் உள்ளிட்டவைகளிலும் இருகின்றன. ஓர் கார் எஞ்சின் அதிக குளிர்ச்சியாகவோ அல்லது அதிக வெப்பம் ஆகமலோ பார்த்து கொள்வது மிகவும் அவசியம். இவற்றில் எதாவது ஓன்று ஏற்பட்டால் அது எஞ்சினின் செயல் திறனை தீவிரமாக பாதிக்கும் எனவே எஞ்சினின் உள்ளேயும், வெளியேயும் ஒரு சராசரி வெப்பம் பராமரிக்கப்பட வேண்டும். எனவே ரேடியேட்டர் ஆனது. தண்ணிரை எஞ்சின் ப்ளாக்குகளில் இருக்கும் பேசேசுகளின் ஊடாக செலுத்துகிறது. பேசேசுகளை கடந்து அதிக வெப்பத்துடன் வரும் தண்ணீர் ரெடியேட்டரின் மேல் பகுதியை சென்றடைகிறது. அவ்வாறு சென்றடையும் தண்ணீர் ரேடியேட்டரில் உள்ள சிறு துளைகளின் மூலம் கீழ் பகுதிக்கு செல்கிறது. அப்படி செல்லும் போது கூலிங் பான் தண்ணீரின் வெப்பத்தை தனித்து குளிர செய்கிறது.
குளிர்ந்த தண்ணீர் மீண்டும் எஞ்சின் ப்ளாக்குகளுக்குள் நுழைகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறும் இந்த சுழற்சியால், எஞ்சினின் வெப்பம் அதிகமாகாமல் சீராக பராமரிக்க ரேடியேட்டர் உதவுகிறது. ஆனால் நீண்ட தூரம் காரை இயக்கம் போது தண்ணீரானது ரெடியேட்டருக்கும் இன்சினுக்கும் மாறி மாறி பயணிகையில் அதிக வெப்பம் அடைந்து ஆவியாக துவங்குகிறது. ஒரு கட்டத்தில் ரேடியேட்டரில் இருக்கும் தண்ணீர் பெரும் பகுதி ஆவியாகி விட்டால் தண்ணீர் பற்றாக்குறையினால் இஞ்சினின் குளிர்விக்கும் பணியை செய்ய ரேடியேட்டர் தவறிவிடுகிறது. இதனால் எஞ்சின் அதிக வெப்பம் அடைந்து தீபற்ற கூடிய அல்லது செயலிழக்க கூடிய அபாயம் இருகின்றது. ஆனால் தண்ணீரில் கூலன்ட் அல்லது. ஆண்டி பிரீஸ் எனப்படும் அடிடீவை சேர்க்கும் போது தண்ணீர் ஆவியாகமால் தடுக்கபடுகிறது. ஏனெனில் கூலண்டானது, எதிலின் லைகால் என்னும் ரசாயனத்தை கொண்டு தயாரிக்கபடுகிறது. எதிலின் லைகால் ௦ மற்றும் -5 டிகிரி பாரன்ஹீட்க்கு இடைப்பட்ட வெப்பநிலையில் மட்டுமே உரையும் அதேபோல் 380 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் உள்ள வெப்பநிலையில் மட்டுமே ஆவியாகும்.
ஆனால் தண்ணீரானது, 32 டிகிரி பாரன்ஹீட்லேயே வெப்பநிலையிலேயே உறைந்துவிடும். 212 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் ஆவியாகிவிடும். எனவே தண்ணீருடன் கூலண்டை 1:1 என்ற விகிதத்தில் கலக்கும் போதே இந்த கலவையின் உரை நிலை -32 பாரன்ஹீட் ஆகவும், கொத்தி நிலை 223 டிகிரி பாரன்ஹீட்டாகவும் மாறுகிறது. இதனால் ரேடியேட்டரில் இருக்கும் தண்ணீர் மற்றும் கூலன்ட் கலவையானது, கடும் குளிரால் உறையாமலும், அதிக வெப்பத்தால் ஆவியாகமலும் இருந்து எஞ்சினை குளிர்விக்கும் பணியை சிறப்பாக செய்கிறது. மேலும் வெறும் தண்ணீர் எஞ்சின் ப்ளாக்குகளின் பேசேசுகளை நாளடைவில் துருபிடிக்க செய்துவிடும். ஆனால் கூலண்டில் துருபிடித்தலை தடுக்கும் பண்புகள் நிறைந்துள்ளதால், பேசேசுகளில் துருபிடிப்பது இல்லை. ஆகையால் காரை குளிர் பிரதேசத்தில் இயக்கினாலும் சரி, சுட்டெரிக்கும் வெயில் பிரதேசத்தில் இயக்கினாலும் சரி, தண்ணீருடன் 1:1 என்ற விகிதத்தில் கூலண்டோ அல்லது அடிடீவை கலந்து ஊற்றுவது மிகவும் அவசியம் ஆகும்.
No comments:
Post a Comment