Wednesday, 22 January 2020

செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு


     செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக மூளைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புற்றுநோய் அபாய பட்டியலில் 2பி என்ற இடத்தில் இப்போதுசெல்போன் இடம் பெற தொடங்கியுள்ளது.

   புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சிநோஜெனிக்(2பி) பட்டியலில் ஏற்கனவே வாகனப்புகை, குலோரோபார்ம், காரியம், பூச்சிகொல்லி மருந்துகள், சில ஊறுகாய் வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் தற்பொழுது செல்போனும் இடம் பெற்றுள்ளது.

     மொத்தம் 14 நாடுகளில் 31 அறிவியல் அறிஞர்களை கொண்டு ஆய்வு செய்ததில் செல்போனில் வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையின் நரம்பு செல்களை சுற்றியுள்ள கிளையல் என்ற செல்களை அளித்து புற்றுநோய் உண்டாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

     தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருநாளைக்கு சராசரியாக அரை மணி நேரம் செல்போனில் பேசுபவர்களில், 40 சதவீதத்தினருக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படலாம் என்கிறது, உலக சுகாதார அமைப்பு. நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறோம் என்பதை குறித்துக்கொண்டு அவரவரே தங்களது மூளையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

     இந்த தகவல்களை ஏற்காதவர்களும் இருக்கிறார்கள். எக்ஸ்ரேயில் உள்ள புறஊதாகதிர்கள் உடலில் உள்ள செல்களை தாக்கி பாதிப்படையச் செய்யும் அயோனைசிங் ரேடியேசன் உள்ளது. அதே நேரத்தில் செல்போனில் இருந்து வெளிவரும் கதிர்கள் நான்-அயோனைசிங் ரேடியேசன் என்கிற ரேடியோ அலைகளை சேர்ந்த மின் காந்த அலைகள் ஆகும். இது போன்ற மின் காந்த அலைகள் எந்த அளவிற்கு மூளையை பாதிக்கும் என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக நிருபிக்கப் படவில்லை என்பது அவர்கள் கருத்து. அதேசமயம், செல்போன் கதிர்வீச்சுகளால் பாதிப்பு இல்லை என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

பெரியவர்களைவிட குழைந்தைகளுக்கு மண்டையோடு மிகவும் லேசாகா இருப்பதால், செல்போன் கதிர்வீச்சு நேரடியாக மூளையை பாதிக்கும் என்பதால் 10 வயதுக்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்க வேண்டாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். செல்போனை குழந்தைகளிடம் கொடுத்து உங்களையும் அறியாமல் குழந்தைகளை நோயின் பிடியில் தள்ளுகிறீர்கள். பெரியவர்களும் செல்போனில் பேசுவதை குறைத்து கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்வது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment