இது வரைக்கும் இருக்கிறது என்றும் இல்லை என்றும் உறுதியாக விஞ்ஞானிகளால் கூற முடியாத ஒரே விஷயம், ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகள் தான். பூமியை தவிர விண்வெளியில் சிதறி கிடக்கும் கிரகங்களில் வேற்றுகிரகவாசிகள் வாழ்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் இந்த நிலையை வெளிப்படையாக இன்னும் கொள்ளவில்லை.
ஆனால் இந்த பூமியில் வாழும் செல்வந்தர்களின் அளவை விட அதிக செலவு செய்து வேற்றுகிரகவாசிகளை தேடும் பணி தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. ஏனென்றால், 2004 ஆம் ஆண்டு வரை வேற்றுகிரகவாசிகளை நண்பர்களாக மட்டுமே பார்த்து வந்த விஞ்ஞானிகள் அதன்பிறகு அவர்களை எதிரிகளாக பார்க்க தொடங்கினர். காரணம் வேற்றுகிரகவாசிகளால் நமது பூமி தாக்கப்படலாம் என எண்ணினார்கள். இதனால் தான் அவர்களை முன்கூட்டியே தேடி கண்டுபிடித்துவிட்டால் பூமியை நம்மால் காத்துக்கொள்ள முடியும் என்று கருதினார்கள்.
2002 ஆம் ஆண்டுஇங்கிலாந்தில் ஒரு கதிர் வட்டம் உருவானது ஆனால் இது கண்டிப்பாக மனிதனால் உருவாகப்பட்டது அல்ல என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்பினார்கள். காரணம், பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. இந்த கதிர்வட்டம் வேற்றுகிரகவாசி ஒருவர் கோவமாக பார்ப்பது போல் உருவாக்கி இருந்தது. குறிப்பாக இது தகவல் ஒன்றினை வெளிபடுத்துவதாக அமைந்து இருந்தது என்றாலும்கூட அது கூறவரும் செய்தியை விஞ்ஞானிகளால் அவ்வளது சுலபமாக கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு இந்த கதிர் வட்டம் 8 BIT BINARY CODE, ASC 2 என்ற கணினி மொழியில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதன்பிறகு BEWARE THE BEARERS OF FALSE GIVES AND THERE BROKEN PROMISES MUCH PAIN BUT STILL TIME BELIEVE THERE IS GOOD OUT THERE WE ABUSE DISHPAN CONDUIT CLOSING என்ற செய்தி காணபட்டிருந்தது. அதாவது எங்களது எதிரிகள் ஏமாற்றுகாரர்கள் பொய்யான வாக்குறுதிகளையும், பொய்யான பரிசுகளையும் கண்டு ஏமாற வேண்டாம். அதிக வலி இருந்தாலும் அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவர்களிடம் இருந்து விலகி இருப்பது இன்னும் நன்மை தரும் என்று இதற்கு தமிழ் வடிவத்தில் அர்த்தம் கூற முடியும்.
இந்த செய்தி தான் விஞ்ஞானிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனபதற்கு சாத்திய கூறுகள் இல்லை. காரணம் இது முற்றிலும் அதிக உயர் அழுத்தம் கொண்ட லேசர் கதிர்களால் பயிர்களை அழித்து உருவாக்கபட்டு இருந்தது. ஆனால் இப்படி உருவாக்கி இருந்தாலும் எந்த பயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை. இதன் அடிப்படையில் பார்த்தால், வேற்றுகிரகவாசிகளில் இரு பிரிவினர் இருக்கலாம் என கருதுகிறார்கள், ஒரு பிரிவினர் பூமியை அளிக்கவும், மற்றொரு பிரிவினர் பூமியை காக்கவும் இருக்கலாம் என எண்ணுகிறார்கள்.
இதனால் எதிர்கள் யார் நண்பர்கள் யார் என்கிற வகையிலேயே தற்போது ஆய்வுகள் நடந்து கொண்டு வருகிறது. மேலும், பூமியில் வேற்றுகிரகவாசிகளுக்கு இடையே மோதல்கள் நடந்துள்ளன என்ற அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளும் கிடைத்துள்ளன. இந்த செய்திகள் மனிதர்களுக்கு தெரிய வந்தால், இதுவரைக்கும் மனிதர்கள் கொண்டிருந்த கடவுள் பக்தியில் மாறுதல்கள் ஏற்பட்டு நெறிதவறி விட வாய்ப்புள்ளதால், இந்த தகவல் இன்றுவரை மறைக்கப்பட்டு வருகிறது என்று கூறபடுகிறது.
இருந்தாலும் மேலைநாட்டு ஊடகங்களில் இதை பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக வருவதால், மக்கள் மத்தியிலும், விஞ்ஞானிகள் மத்தியிலும் ஒருவித அச்சம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வேற்றுகிரகவாசிகளில், பூமிக்கு நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
No comments:
Post a Comment