ரகசியம் என்றாலே நம்ம எல்லாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிதம்பர ரகசியம் தான். இப்பொழுது கூட யாரவது ஒருவர், யாருக்கும் தெரியாமல் ஒரு செய்தியை மூடி மறைத்தால், ஆமா இது பெரிய சிதம்பர ரகசியம் பாரு என நாம சொல்ல கேள்வி பட்டிருப்போம். உண்மையில் சிதம்பர ரகசியம்னா என்ன.
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களால் ஆனது தான் இந்த உலகம். இதில் நிலத்துக்கு காரணமாக நீரும். நீருக்கு காரணமாக நெருப்பும், நெருப்புக்கு காரணமாக காற்றும், காற்றுக்கு காரணமாக ஆகாயமும் இருக்கிறது. சுவிட்சர்லாந்துல இருக்கிற ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனமான SCRN தான் உலகிலேயே மிகப்பெரிய இயற்பியல் ஆய்வகம். இந்த ஆய்வகத்தின் நுழைவாயிலில் சிதம்பர நடராஜர் சிலையை நிறுவியுள்ளது. பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் சுவிட்சர்லாந்தில் ஏன் ஒரு இந்து கடவுளின் சிலையை வைத்து இருக்க வேண்டும். அது தான் சிதம்பர ரகசியம்.
சிதம்பர நடராஜ சிலை, கோவில் அமைந்த விதம், அங்கு நடைபெறும் வழிபாடு என இந்த மூன்றும் தான், சிதம்பர ரகசியமாக காலம் காலமாக போற்றபடுகிறது. உலக காந்த ஈர்ப்பு விசையினுடைய மையத்தில் தான் இந்த சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்து இருக்கிறதாக கூறுகின்றனர். அதனால் தான் இந்த கோவிலுக்கு மேலே செல்லும் எந்த ஒரு செயற்கை கோள்களும் செயல் இழந்து விடுகின்றது என கூறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சைவ சமைய அன்பர்களான பஞ்சபூத சிவ ஸ்தலங்கள்ன்னு போற்றபடுகிற காயகஸ்தி, காஞ்சிபுரம், திருவானைக்கால், திருவண்ணாமலை, சிதம்பரம் இந்த 5 கோவில்களும் புவியியல் நிலையில் ஒரே நேர்கோட்டில் கட்டுப்பட்டுள்ளது. அறிவியல் சாதனங்கள் அதிகமாக பயன்படுத்தபடாமல் 5௦௦௦ வருடங்களுக்கு முன்னாள் இந்த 5 கோவில்களும் ஒரே நேர்கோட்டில் எப்படி கட்டினார்கள் என்று இன்றும் கூட விசித்திரமாக தான் உள்ளது.
துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால், மனித உடல் அமைப்பில் தான் சிதம்பர நடராஜர் கோவில் அமைந்திருகிறது. நம்ம உடம்பில் 9 துவாரங்கள் அமைந்து இருக்கிறது போல இந்த கோவிலிலும் 9 வாசல்கள் உள்ளது. நடராஜர் சன்னதி மனிதனோட இதையத்தை வெளிபடுதுற விதமாக அமைந்திருக்கும். உடலலில் இடது பக்கம் இதயம் அமைந்திருப்பது போல இந்த கோவில் கருவில் இடது பக்கத்தில் தான் நடராஜர் சிலை அமைந்து இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நடராஜர் இருக்கிற கருவறைக்கு மேல் கிட்டத்தட்ட 21600 தங்க ஓடுகள் இருகின்றன மற்றும் 65000 தங்க ஆணிகளால் பதிக்க பட்டுள்ளது. இந்த 21,600 தங்க ஓடுகள் சராசரியாக மனிதன் ஒரு நாளைக்கு விடுகின்ற மூச்சின் அளவை குறிக்கிறது. அதாவது 1 நிமிடத்துக்கு 15 என்றால் 15x60x24 என்ற விதத்தில் கணக்கிடப்பட்டு 21,600 தங்க ஓடுகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 65,000 ஆணிகள் என்னவென்றால் மனித உடம்பில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை.
பிரபஞ்சத்தோட வடிவமாக நடராஜர் சிலை உள்ளது. அவருடைய வலது கையில் இருந்து இடது கால் வரை இருக்கின்ற அமைப்பு MILKY WAY என்று சொல்லபடுகின்ற பால்வழி மண்டலத்தை ஒத்துள்ளது. நடராஜர் இதயம் அமைந்து இருக்கிற இடத்தில், நாம் வாழ்கின்ற சூரிய குடும்பம் அமைந்திருகிறது. அவருடைய இடுப்பை சுற்றிக்கொண்டு இருக்கிற பாம்பு, நிக்காமல் ஓடிக்கொண்டு இருக்கிற காலத்தை குறிக்கிறது. எல்லாத்துக்கும் மேல், அவரை சுத்தி இருக்கிற வட்டம், பிரபஞ்சம் போலவே மிகவும் பொருத்தமாக அமைந்து இருக்கிறது. அதனால் தான் சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் பிரஞ்சத்தோட குறியீடாக நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆகாயத்தை இந்த கோவிலில் நடராஜராக வழிபடுகிறார்கள். நடராஜருக்கு அபிஷேக ஆராதானைகள் நடப்பது போலவே, தங்கத்தால் ஆனா வில்வ இலைகளை செய்து, அதை வெறும் ஆகாயத்துக்கு அணிவித்து மூலவருக்கு பக்கத்தில் வைத்துள்ளார்கள்.
மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும் பொது அதையே இந்த ஆகாயத்துக்கும் காட்டுகிறாகள். ஆறுகால பூஜைகளின் போது மட்டுமே இந்த தங்க வில்வத்தினால் ஆராதிக்கப்படும் ஆகாயத்தை நாம் பார்க்க முடியும். ஒட்டு மொத்தத்தில் சிவஸ்தலம் மட்டும் இல்லை. அது பழங்கால விண்வெளி ஆராய்ச்சி கூடமாக இருந்து, உலகத்தோட தோற்றத்தை கூறி, உலகத்துக்கும் தனிப்பட்ட மனித உடலுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கி அறிவியலின் எல்லை ஆன்மிகம் என்று பலகோடி வருடங்களுக்கு பலரையும் அச்சிரியத்தில் ஆழ்த்த போகிறது.
No comments:
Post a Comment