Sunday, 5 January 2020

GAS CYLINDER வெடிக்க காரணம் தெரியுமா ?


    வீட்டில் பயன்படுத்தப்படும் GAS CYLINDERS சரியான முறையில் கையாளப்பட வில்லை என்றால், அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். எந்த ஒரு GAS CYLINDER ரும் தானாக வெடிப்பது கிடையாது. கையாளும் பொழுது ஏற்படும் அலட்சியம் அல்லது கவனக்குறைவு தான் GAS CYLINDERSகள் வெடிக்க காரணமாக அமைந்து விடுகின்றன. GAS CYLINDER ரில் அல்லது REGULATOR ல் வாயு கசிவு இருந்தால், வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்ற கூடிய கலவையாக மாறுகிறது. இந்த கலவை தீ பிழம்பாக மாற ஒரு தீ பொறி அல்லது பற்ற வைக்கும் மூலங்கள் தேவை படுகிறது. தீ பொறி வாயு கலவையுடன் இணைந்ததும் வாயு கலவையை எரியூட்டி வெடி விபத்தாக மாற வழி வகுக்கிறது.

     இத்தைகைய GAS CYLINDER வெடிப்புகள் பொதுவாக மக்கள் போதுமான விழிப்புணர்வுடன் இல்லாத நேரங்களில் தான் நிகழ்கிறது. குறிப்பாக காலை அல்லது மதியம் வேளைகளில், படுக்கையில் இருந்து எழுந்து வந்து GAS LIGHTER ரை அல்லது மின்சார சாதனங்களை பயன்படுத்தும் போது GAS CYLINDER வெடி விபத்துகள் நிகழ்கின்றன. ஓர் GAS CYLINDER ஆனது ஒரு சதுர செண்டி மீட்டருக்கு 25 கிலோ வரையிலான அழுத்தத்தை தாங்க கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இது உங்கள் விரல் நகம் அளவு உள்ள இடத்தில் 25 கிலோ எடையை வைப்பது போன்றது. என்றாலும் ஒரு GAS CYLINDERS க்குள் பொதுவாக எரிவாயுவானது ஒரு சதுர செண்டி மீட்டருக்கு 5 முதல் 7 கிலோ வரையிலானஅழுத்துடனே பராமரிக்க படுகிறது.  ஆனால் மக்கள் GAS CYLINDERS தூக்கி எறிவது, வெப்பப்படுத்துவது போன்ற பாதுகாப்பற்ற நடைமுறைகளை கையாளும் போது GAS CYLINDER ஒரு மினி அணு குண்டாக மாறுகிறது. ஆகையால் GAS CYLINDER களை கையாளும் போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

     GAS CYLINDER சூடான தண்ணீர் அல்லது வெயிலின் வெப்பம் அதிகம் தாக்கும் இடத்தில் வைக்க வேண்டாம். GAS மிகவும் குறைவாக இருந்தாலும் கூட வெப்பம் உண்டாகும் பகுதிகளில் GAS CYLINDER ரை வைக்க கூடாது. ஏனென்றால் GAS CYLINDER சூடாகும் போது  CYLINDER க்குள் இருக்கும் GAS ன் வெப்ப நிலையும் உயர்ந்து விரிவடைகிறது. இதன் விளைவாக CYLINDER ன் உள்ளே பெரிய அளவில் அழுத்தம் உண்டாகிறது. இந்த அழுத்தமானது, வரம்பை தாண்டும் போது GAS CYLINDER ன் உலோகம் உடைந்து வெடித்து சிதறும்.

    அடுத்ததாக GAS CYLINDER தூக்கி எறியவோ அல்லது இழுத்து செல்வது கூடாது. நாம் தூக்கி எரிவதில்லை என்றாலும் GAS CYLINDER ரை DELIVERY செய்வோர், வண்டியில் இருந்து எடுக்கும் போதும் வைக்கும் போதும் முரட்டு தனமாக தூக்கி எரிவதையும் இழுப்பதையும் நாம் பார்த்து இருகின்றோம். இவ்வாறு செய்வதால் CYLINDER ல் செய்யப்பட்டு இருக்கும் WELDING ல் பாதிப்பு ஏற்பட்டு வாயு வெளியேற வழி வகுக்கிறது. இதனால் கசிவுடன் இருக்கும் CYLINDER வெடி விபத்துக்கு வழிவகுக்கும்.

     பலரும் காலையில் அடுப்பை பற்ற வைக்க GAS CYLINDER REGULATOR திறப்பானை திறப்பார்கள். அதன் பிறகு இரவு படுக்கும் போது தான் REGULATOR திறப்பானை மூடுவார்கள். இது முற்றிலும் தவறான செயல். REGULATOR அல்லது TUBE ல் வாயு கசிவு இருந்தால், எரிவாயுவானது தொடர்ந்து கசிந்து காற்றுடன் கலந்து அப்பகுதியில் எளிதில் தீ பற்ற கூடிய ஒரு ஆபத்தான கலவையை உருவாக்கி வைத்து இருக்கும். அடுப்பை பற்ற வைக்க நாம் தீ பொறியை தூண்டும் போது, அப்பகுதி தீ பிளம்புகளுக்கு உள்ளாகி அழிவை ஏற்படுத்தும், ஆகையால் ஒவ்வொரு முறையும் CYLINDER ன் பயன்பாடு முடிந்தவுடன் REGULATOR திறப்பானை அவசியம் மூடி விடவேண்டும். 

    அதிகமான வீடுகளில் CYLINDERக்கு பக்கத்தில் மன்னண்ணை போன்ற ஏறி பொருட்களை வைத்து இருப்பார்கள். இது மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும். GAS CYLINDER ல் வாயு கசிவு ஏதாவது இருக்கிறதா என்று தீ குச்சி, மெழுகுவர்த்தி, விளக்கு போன்றவற்றை கையில் வைத்துக்கொண்டு பார்வையிட கூடாது. CYLINDER ரை எப்போதும் செங்குத்து நிலையிலும் சமதளத்திலும் வைத்து பராமரிக்க வேண்டும். சிலர் அடுப்பை தரையில் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது தவறான நடைமுறை ஆகும். அடுப்பு எப்பொழுதும் CYLINDER ரைவிட சற்று உயரத்தில் வைத்தே பயன்படுத்த வேண்டும். 

GAS CYLINDER ரை, ELECTRIC STOVE, INDEXEN STOVE போன்ற வெப்ப மூலங்களின் அருகாமையில் வைத்திருக்க கூடாது. CYLINDER வால்வுக்குள் இருக்கும் ரப்பரை பழுது படாமல் இருக்கிறதா என்பதை உறுதி படுத்தி கொள்ள வேண்டும். எப்போதுமே ISI தர சான்றிதல் பெற்ற TUBE மற்றும் REGULATOR களைதான் பயன்படுத்த வேண்டும். சமையலறை மற்றும் சமைக்கும் பகுதியை நல்ல காற்றோட்டமாக இருக்குமாறு அமைத்து கொள்ளுங்கள். சமையலறை உபகரணங்களை கையாள சிந்தெடிக் துணிகளை பயன்படுத்த வேண்டாம். இவை தீகான வாய்ப்புகளை வழிவகுக்கும்.

    புதிய GAS CYLINDER ல் வரும் பாதுகாப்பு மூடியை தூக்கி எரிந்து விட வேண்டாம். அதனை எப்போதும் கைவசம் வைத்திருப்பது நல்லது. ஒருவேளை CYLINDER வால்வில் வாயு காசி இருந்தால், இந்த பாதுகாப்பு மூடியை கொண்டு அடைத்து விடலாம். 

    சரி ஒருவேளை GAS கசிவு ஏற்பட்டால் என்ன செய்வது. முதலில் பதற்றம் அடையாமல் மனஅமைதியுடன் செயல்பட வேண்டும். GAS கசிவு இருக்கலாம் என நீங்கள் சந்தேகபட்டால், அப்போது எந்தவிதமான மின்சார சாதனங்களையும் இயக்கவோ அணைக்கவோ கூடாது. விளக்கு மெழுகுவர்த்தி போன்ற எதாவது எரிந்து கொண்டு இருந்தால், அவற்றை உடனடியாக அனைத்து விட வேண்டும். பிறகு CYLINDER REGULATOR ரை மூடி விட்டு சமையலறையின் அனைத்து சன்னல் கதவுகளையும் திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும். ஆனால் ELECTRIC FAN அல்லது EXOS FAN னை கட்டாயமாக இயக்க கூடாது. பின்னர் GAS DEALER க்கு தகவல் தெரிவித்து ஊழியர்கள் வந்து கசிவை சரிசெய்யும் வரை பாதுகாப்பான இடத்தில் இருந்து கொள்வது நல்லது.

GAS CYLINDER கையாள்வது, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை போன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் அறிவுத்துவது மிகவும் அவசியம். இருபினும் GAS CYLINDER கள் உறுதியானவை என்பதால், அவை குறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.

No comments:

Post a Comment