என்னை நீ எரித்தால், உன்னை நான் எரிப்பேன் என்று, எரிந்து கொண்டு இருக்கும் சிகெரெட்டை கூர்ந்து பார்க்கும் போதெல்லாம் இந்த கவிதை நினைவு கூறுவதை தவிர்க்க முடியவில்லை. சென்ற நூற்றாண்டில் சிகெரெட் புகைப்பது ஒருவித குற்ற செயலாகவே பார்க்கப்பட்டது. மக்கள் மறைந்தே சிகெரெட் புகைத்தார்கள். 21ஆம் நூற்றாண்டில் நாகரிக வளர்ச்சியின் காரணமாக சிகெரெட் தனிமனித Style ஆனது.
வானத்தை பார்த்து சிகெரெட் புகைத்தபடி வட்ட வட்டமான புகைக்குள் கனவு காண்பதை திரைப்படங்களில் பார்த்திருப்போம். திரைப்படங்களில் கதாநாயகர்கள் சிகெரெட்டோடு தோன்றி, சிகெரெட் குறித்த ஒரு ஈடுபாட்டை மக்களின் மீது தெரிந்தோ தெரியாமலோ விதைத்து விட்டார்கள்.
இந்த புகையிலை, எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எப்படி உலகம் முழுவதும் வந்தது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே புகையிலை பயன்பாடுகள் இருந்து வருவதாக வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் புகையிலையை கடவுளின் கொடை என கொண்டாடினர்கள். உலகில் முதன் முதலில் புகையிலையை கண்டறிந்தவர் கொலம்பஸ். 16ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் புகையிலை உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இந்தியாவில் புகையிலை 17ஆம் நூற்றாண்டில் போர்த்து கீசியர்களால் அறிமுகபடுத்தபட்டது.
பல நூற்றாண்டுகளாக நிகோடின் மருந்து பட்டியலில் இருந்து வந்தது. 1906 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் புகையிலை நிகோடின் மருந்துபட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இன்றைய தேதியில் உலக புகையிலை உற்பத்தியில் முதல் மூன்று இடத்தில் இருக்கும் நாடுகள் சீனா, பிரேசில், இந்தியா. உலகம் முழுவதிலும் புகை பிடிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான மக்களின் மரணங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கமும் ஒரு காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புகைபிடிக்கும் ஒருவர் ஒருமுறை புகைபிடிக்கும் போது தன்னுடைய வாழ் நாளில் 5 நிமிடத்தை இழக்கிறார். வாழ்நாள் முழுவதும் புகைபிடித்து கொண்டே இருப்பவர். தன்னுடைய ஆயுள் காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகளை இழந்து விடுகிறார் என்கிறது உலக சுகாதார அமைப்பு. உங்களுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கும் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும். ஒரே நேரத்தில் 30 மில்லி கிராம் முதல் 60 மில்லி கிராம் வரையிலான நிகோடின் ஒருவருடைய உடலுக்குள் சென்றால் அவருக்கு மரணம் கூட நேரலாம். ஒரு சிகெரெட்டில் 12 மில்லி கிராம் நிகோடின் உள்ளது.
HIV, காச நோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தை விட, புகையிலையினால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். ஒவ்வொரு புகை இழுப்புக்கும் 4,000 விதமான தீய பொருட்களை நாம் உள்ளே இழுக்கிறோம். இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தும் ரசாயன பொருட்களும் அடங்கும். சிகெரெட் எறி முனையின் வெப்ப நிலை 900 டிகிரி செல்சியஸ். இது நீரின் கொதி நிலையை விட 9 மடங்கு அதிகம். இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விசமுள்ள பொருட்களை விடுவிக்கின்றது. இதனால் இயற்கை மாசுபடுவதோடு மட்டுமே இல்லாமல் உங்கள் அருகில் இருக்கும் அப்பாவி மக்களுக்கும் நீங்கள் விடும் புகையால் பாதிக்கபடுகின்றன.
மனைவி கருவுற்றுக்கும் போது அவருடைய கணவர் அருகில் புகைபுடித்தால், குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும் மேலும் கருசிதைவு அபாயமும் எற்படும் சிசுவின் மரணத்திற்கும் வாய்ப்பு உண்டு. மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படுவதோடு மனவளர்ச்சியும் குன்றிப்போகும். குழந்தை பருவ ஆஸ்துமா, இந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை விட அதிகம் வரும்.
முயன்றால் முடியாது ஒன்றுமில்லை என்ற பழமொழியை நினைத்து சிகெரெட் பிடிக்கும் பழக்கத்தை தள்ளி போடுங்கள். புகைபிடிக்கும் நண்பர்களை தவிருங்கள். புகைபிடிக்கும் எண்ணம் தோன்றினால் காய்கறி சாலட் சாப்பிடுங்கள். காரட், வெள்ளரி, வெங்காயம் சாபிடலாம். சாப்பிட முடியாதவர்கள் நன்கு தண்ணீர் அருந்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக என்னால் சாதிக்க முடியும் என எண்ணி விட்டால், சிகரெட்டையா விடமுடியாது.
புண்பட்ட நெஞ்சை புகைபிடித்து ஆற்றுவது என விதண்டாவாதம் பேசி ஊதி தள்ளுவதால் ஏற்படும் ரணங்களுக்கு எந்த மருந்தும், மாத்திரைகளும் அந்த ரணங்களை ஆற்றாது. இது அறிவியல் கூறும் நிதர்சனமான உண்மை. புற்றுநோய் உயிரை கொள்ளும். புகை உங்களை சுற்றி உள்ளவர்களையும் கொள்ளும். இதையும் தாண்டி நான் புகை பிடித்தே தீருவேன் என்றால், புகை உங்களை குடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.
No comments:
Post a Comment