Monday, 23 March 2020

சர்க்கரை நோயாளிகளுக்கும் சக்தி தரும் பேரிச்சை



    ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து என்கிற அளவில்தானே பேரிச்சை பற்றி உங்களுக்குத் தெரியும். பேரிச்சையில் இரும்புச் சத்து மட்டுமல்ல. வைட்டமின்-A மற்றும் சுன்னாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்த பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

  1. தினமும் ஒரு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இதயம் வலுபெறும்.
  2. தினமும் இரண்டு பேரிச்சம் பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால், ரத்தம் விருத்தியடையும்.
  3. இனிப்பு உணவுகளை தவிர்க்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரிச்சம்பழம் சாப்பிடலாம். பேரிச்சம்பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு டம்ளர் பாலுடன் 1 அல்லது 2 பேரிச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர, உடல் வலிமை பெறும்.
  4. காச நோயாளிகள் தினமும் 4 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வர, எலும்புகள் பலம் பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.
  5. எதிபாராத சில சம்பவங்களால் அதிகமான ரத்தத்தை இழந்தவர்கள், தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த இழப்பை விரைவில் ஈடு செய்யலாம்.
  6. வெண் குஷ்டம் இருப்பவர்கள் பேரிச்சம்பழ சிரப் குடிக்கலாம். இது ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
  7. பேரிச்சம்பழத்தை பிற பழங்களுடன் கலந்து 'சாலட்' ஆக செய்து சாப்பிட, வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

No comments:

Post a Comment