Wednesday, 25 March 2020

யானைகள் ஓய்வு நேரத்தில் என்ன செய்யும் தெரியுமா?

     போர்களங்களில் எதிரிகளை மிரளவைத்த பண்டைய தமிழர்கள். படைகள் மிரள முக்கிய காரணமாகவும், பக்க பலமாகவும் இருந்தது இந்த யானைகள் தான். முன்னொரு காலத்தில் யானையின் பலம் அறிந்து, அதை சரியான முறையில் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்து பயன்படுத்தியவன் தான் தமிழன். யானைகளும் அதை கொண்ட படைகளும், பாண்டியர், சேரர், சோழர் போன்ற பல சாம்ராஜ்யங்கள் போர்களில் வெற்றி பெற காரணமாக இருந்திருக்கிறது இந்த யானைகள்.
    இன்றைய நாட்கள் வரை யானைகள் தான் உலகின் பெரிய பாலுட்டி வகையாக இருக்கின்றது. உலகத்தில் இரண்டு வகையான யானைகள் இருகின்றது. ஒன்று ஆப்பிரிக்கா வகை யானைகள், இரண்டாவது ஆசிய வகை யானைகள். ஆப்பிரிக்க வகை யானைகள் சராசரியாக 4,000 கிலோ முதல் 7,000 கிலோ வரை இருக்கும். ஆசிய வகை யானைகள் 3,000 கிலோ முதல் 6,000 கிலோ வரையிலான எடை இருக்கும். ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை உணவு உண்ண மட்டுமே செலவு செய்கிற இந்த யானைகள் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே தூக்கும்.

    இந்த யானைகள் ஒரே இடத்தில் தங்காது. ஒவ்வொரு இடமாக மாறிக்கொண்டே இருக்கும். அப்படி யானைகென்று வழக்கமான பாதைகள் ஒரு குறிப்பிட்ட சுற்றளவில் இருக்கும். யானைக்கு மெமொரீஸ் என்று சொல்லகூடிய நினைவடுக்கு அலைகள் ரொம்பவே அதிகம். 20 வருடங்களுக்கு முன்பு பார்த்ததை கூட ஞாபக படுத்துற அளவுக்கு அதிகமானது. ஒவ்வொரு இடமாக மாரி பயணம் செய்யும் குணாதிசயம் கொண்ட இந்த யானைகள், அதனுடைய பாதைகளையும் நினைவடுக்குகள் மூலமாக ஞாபகம் வைத்துக்கொள்ளும்.
    சில காட்டு பகுதிகளில் யானைகள் செல்வதற்காக ஒரு குறிப்பிட்ட பாதைகள் இருக்கும். சில இடங்களில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். அப்படி யானைகளுடைய பாதையை ஆக்கிரமிப்பு செய்தது, கரும்பு தோட்டமாக இருந்தாலும், கட்டிடமாக இருந்தாலும், அது கொஞ்சம் கூட கவலை படாமல் சேதபடுத்திவிட்டு கடந்து போய்கொண்டே இருக்கும். ஊருக்குள்ள யானை வந்துருஞ்சுன்னு நாம் பார்க்கும் செய்திகளுக்கு காரணமும் இது தான். Intelligence ஆன சில விலங்குகளில் யானைகென்று தனி இடம் உண்டு. 

    இப்படிப்பட்ட Intelligence ஆன இந்த விலங்கை, இன்று கோவில்கள் மற்றும் சரணாலயங்களில் பாதுகாக்கபடுகிறது. சில இடங்களில் பிச்சை எடுக்கவைப்பது வருந்தத்தக்க விஷயம் தான். இப்படி முக்கியமான கோவில்களில் வளர்க்கபடுகின்ற யானைகள், ஒவ்வொரு வருடமும் புத்துணர்ச்சி முகாம் அமைத்து பராமரிப்பு செய்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம் வெவ்வேறு இடங்களில் நடக்கும். இந்த வருடம் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தான் கோயம்புத்தூர் மாநகராட்சியில் இருக்கும் காரமடை பகுதில் உள்ள தேக்கம்பட்டி என்னும் பகுதி.

     5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் மொத்தம் 28 யானைகள் புத்துணர்ச்சிகாக வருகின்றது. காலையில் 6.30 மணிக்கு கண் விளிக்கும் யானைகளை முதல் வேலையாக அந்த முகாமை சுற்றி நடைபயிற்சிக்கு அழைத்து செல்வார்கள். யானைகள் இயற்கையாகவே உஷ்ணமான உடல்வாகு கொண்டது. அதனாலேயே யானைகளுக்கு தண்ணீர் என்றாலே கொண்டாட்டம் தான். அதற்கேற்றார் போல், காலையில் 7 மணிக்கு ஆரம்பித்து, 10 மணி வரை அதாவது மொத்தம் 3 மணி நேரம், யானைகளுக்கா பெரிய அளவில் சவர் அமைத்து குளிக்க வைப்பார்கள். இதே போல் மாலை வேலையும் 4.30ல் இருந்து 6.30 மணி வரை குளிக்க வைக்கிறார்கள்.
    ஒரு நாளைக்கு எல்லா யானைகளுக்கும் சேர்த்து 54 கிலோ உணவு தயாரிக்கபடுகிறது. காலையில் 8 மணிக்கு ஒரு முறை, மாலை 4 மணிக்கு ஒரு முறை சாபாடு கொடுகிறார்கள். வெள்ளை சாதம், கொள்ளு, பச்சை பயறு, கேப்பை என, யானைக்கு சத்தான மற்றும் குளுர்ச்சியான உணவு கொடுக்கபடுகிறது. மூன்று முறை தண்ணீர் வைக்கபடுகிறது. ஒவ்வொரு முறையும் 80 லிட்டர் தண்ணீர் வைப்பார்கள். இது போக ஒரு நாளைக்கு பசுந்தீவனம் 160 கிலோ கொடுக்கபடுகிறது. இதில் பசும்புல், சோளத்தட்டை, கரும்பு சக்கை எல்லாமே கலந்து கொடுக்கபடுகிறது. 

    யானைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான பிரச்சனைகளை தீர்பதற்கு முறையானமருத்துவ குழுவும் இருக்கிறது. தந்தங்கள், தும்பிக்கை, நிலத்தில் வாழும் உயிரினங்களில் பெரியது என, இது போன்ற பிரமாண்டம், பாகன்ங்கள் வைத்திருக்கும் அங்குசம் என்று சொல்ல கூடிய 3 அடி குச்சிக்கும், 6 அடியில் கட்டி இருக்கும் செயினையும் தாண்டாத அளவுக்கு இந்த யானைகள் தன்னுடைய பலம் தெரியாமலும், பாகங்களின் பாசம் தெரிஞ்சும் கட்டுப்பட்டு இருக்கிறது என்பது பெரிய ஆச்சரியம் தான்.

No comments:

Post a Comment