Saturday, 28 March 2020

பாம்பு கடித்தவுடன் "அ" என்று கத்தினால் மரணம் உறுதியா ?

     பாம்பு கடி ஏற்பட்ட நபர் 'அ' என்ற ஓசையில் தொடங்கும் சொற்களைக் கூறினால் உறுதியாக மரணம் வந்து சேரும் என்று நம்பியிருந்தனர் நம் முன்னோர்கள்.

    பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவரை விஷ வைத்தியரிடம் கொண்டு சென்றவுடன், பாம்பு சீண்டியதும் அவர் என்ன கூறினார் என்று விசாரிக்கும் வழக்கமுண்டு. 'அ' என்று தொடங்கும் சொற்களை பயன்படுத்தி இருந்தால், சிகிட்சையளித்து பயனில்லை என்று கை விட்டு விடும் வழக்கம் இருந்து வந்தது. அவ்வாறு போதிய சிகிட்சையும் கவனமும் செலுத்தாததினால் மரணமடைந்த நிகழ்வுகளும் கேள்விப்பட்டதுண்டு.


    பாம்புக் கடி ஏற்பட்டதும் முதலுதவியாக காயத்துக்கு மேலே மிக இருக்கமாகக் கட்டி வைக்க வேண்டும் என்று நம் முனோர்கள் அறிந்திருந்தனர். விஷம் உடலில் வேறு பாகங்களுக்கு செல்லாமளிருக்கவே இந்த கட்டு போட்டனர். பாம்புக் கடி கொண்டவர் 'அ' என்று தொடங்கிப் பேசியிருந்தால் அவர் எப்படியும் பிழைக்கமாட்டார் என்று முடிவு செய்து இந்த கட்டையும் அவிழ்த்து விடுவதும் உண்டு. இது படிப்படியாக அவரை மரணத்துக்குள் கொண்டு சேர்க்கும் என்பது நிச்சயம்.

    பாம்பின் விஷம் மனித உடலில் பரவுவது, இதயம் எவ்வளவு வேகம் துடிக்கிறதோ அவ்வளவு வேகத்தில் பரவும். கடிபட்டவர் மிகப் பயத்துடன் இருந்தால் இதயத்துடிப்பின் வேகம் அதிகரித்து விஷம் எளிதில் எல்லா உறுப்புகளுக்கும் சென்று சேர்ந்து ஆபத்து நிலைக்குள்ளாவர்.

    கடி ஏற்பட்ட நபரின் பயப்பட்ட நிலைக்கும், அவர் கூறும் முதல் சொற்களும் சம்பந்தமுண்டு. அவர் மிகவும் பயந்திருந்தால் 'அம்மா' என்றோ 'அய்யோ' என்றோ கூறி கத்துவது வழக்கம். பாம்புக் கடியைத் தொடர்ந்து பயம் குடிகொள்ளுமானால் மரணத்துக்கான சந்தர்ப்பம் தொண்ணூறு சதவீதம் அதிகரிக்கிறது. வைத்தியர்கள் பாம்பு கடி கொண்ட நபர் முதலாக என்ன கூறினார் என்று விசாரிப்பதும் இதை அறிவதற்காகவே.

No comments:

Post a Comment