கொள்ளை நோய்கள் ஏற்படும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நாம் மற்ற நாடுகளில் இருந்து கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நமது கிராமங்களில் உள்ள மாரியமமன் கோவில் திருவிழாக்களில் என்ன என்ன விதிமுறைகள் பின்பற்றினார்கள் என்பதை கூர்ந்து கவனித்து அதை நாம் பின் தொடர்தாலே போதும்.
- ஊர் எல்லை கட்டுதல். தம் ஊரில் உள்ளவர்கள் அடுத்த ஊருக்கு செல்லக் கூடாது. அடுத்த ஊரில் உள்ளவர்கள் தம் ஊருக்குள் வரகூடாது.
- வீட்டிலுள் கிருமிகள் நுழையாமல் தடுத்தல். வீதி மற்றும் வாசல்கள் தோறும் வேப்பிலை மற்றும் மாவிலை கட்டி சாணி மொழுகுதல்.
- வீட்டு வாசலில் மஞ்சள் பொடி கலந்த நீரை அண்டாவில் கரைத்து வைத்தல். வீட்டிற்குள் வருபவர்கள் இந்த மஞ்சள் நீரால் மட்டும் தான் கை கால்களை சுத்தம் செய்து வர வேண்டும்.
- அசைவ உணவை முழுவதுமாக தவிர்த்து ஒரு வேலை அல்லது இரண்டு வேலை மட்டும் உட்கொண்டு விரதம் மேற்கொள்ளுதல்.
- கையில் மஞ்சளுடன் கூடிய காப்பு கயிறு கட்டுதல். கணவன் மனைவி உறவு கொள்ளாமல் இருத்தல்.
- எளிய உணவான கூழ் கரைத்து உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துதல்.
- தினமும் இரண்டு வேலை குளித்து மஞ்சள் கலந்த ஆடைகளை உடுத்தி கொள்ளுதல்.
- சுக்கு பனைவெல்லம் கலந்த பாணகம் மற்றும் மாவிலக்கு, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்ற உணவை சமைத்து படையல் இடுதல். இவற்றை நாமும் உண்ணும் போது உடல் சுத்தி பெற்று வெப்பம் அதிகமாகி நோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகமாகிறது.
- வீடுகளில் காலையிலும், மாலையிலும், சாம்ப்ராணி புகையிடுதல் மற்றும் வாசலில் சிறு போகி கொளுத்துதல். இதனால் வைரஸ் கிருமிகள் பரவாமல் அழிந்து போகும்.
- எல்லாவற்றிகும் மேலாக விரதம் இருந்து கரகம் எடுத்தல், நெருப்பு மிதித்தல், போன்ற பக்தியோடு கூடிய செயல்களால் உடல் உஷ்ணம் அதிகமாகி, குண்டலினி சக்தி தூண்டப்பட்டு மேலேறி நமது எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பல மடங்கு அதிகமாக்கும்.
கொடிய கொள்ளை நோய்களை விரட்டுவதில் நம் தமிழர்கள் முன்னோடிகள் என்பதை இந்த பதிவின் மூலம் உலகுக்கு உணர்த்துவதோடு மட்டும் இல்லாமல் நாம் அனைவரும் தற்சமயம் மேற்கொண்ட அனைத்து செயல்களையும் முடிந்த அளவு கடைபிடிக்கவும். நமக்கு பிறக்கு இந்த உலகத்தில் பயணிக்க இருக்கும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து கூறவும்.
இந்த பதிவு மதம் சார்ந்தது அல்ல நமது நோய் தடுப்பு பாதுகாப்பு சார்ந்தது.
No comments:
Post a Comment