காற்று மாசு, இறக்கமற்ற பேரண்டத்தில் இரக்கமும், ஜீவா ராசிகள் வாழ்வதற்கு ஏற்ப ஆக்சிஜனும் இருக்கும் ஒரே கிரகம் பூமி. இங்கு தான் நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கென ஒரு விதி முறை அமைத்து வாழ்ந்து வருகிறோம். பரிமாற்றம் வளர்ச்சியில் ஓர் மாபெரும் மைல்கல்லாக, அறிவியல் மூலம் இந்த உலகத்தில் பல மாற்றங்கள் செய்துள்ளோம். நமக்கான இருப்பிடம், உடை, உணவு என அனைத்தையும் நவீனபடுத்தி உற்பத்தி செய்கின்றோம்.
ஆனால் இந்த பூமி நமக்கு மட்டும் தானா?, இந்த பூமியில் சக உரிமையாளர்களிடம் இதையெல்லாம் கேட்டு தான் செய்கிறோமா. நமது பல தேவைகளுக்காக, தெரிந்தே நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், நமது சுற்றுசூழல் என அனைத்தையும் மாசுபடுத்துகின்றோம். இதற்கான பின்விளைவுகளை நாம் மட்டும் அல்ல அனைத்து உயிரினங்களும் அனுபவிகின்றன. சராசரியாக 10ல் 9 பேர் மோசமான காற்றை சுவாசிகின்றனர். இவ்வாறு மோசமான காற்றை சுவாசிப்பதன் மூலம், வரும் பிரச்சனைகளால் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 70 லட்சம் மக்கள் இறந்து போகிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் பதிவேடுகள் கூறுகின்றது.
நகரத்தில் 80 சதவீதத்துக்கும் மேல் உள்ள மக்கள் தாங்கள் சுவாசிக்கும் காற்று தரமற்றது என்பதை அவர்களே உணர்கிறார்கள் என்கிறது மற்றொரு ஆய்வறிக்கை. காற்றை மாசுபடுத்தும் உலக நாடுகளின் தர வரிசை படி, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், பாகிஸ்தான், இந்தியா, மங்கோலியா, நைஜீரியா, சீனா என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் சீனாவில் 70 சதவீதம் காற்று, அங்குள்ள தொழிற்ச்சாலைகளால் மாசு அடைகிறது என்று சொல்லபடுகிறது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் அன்றாட நிலை பாதிக்கபட்டுள்ளது. ஆனால் மறுபுறம் இயற்கை பெருமூச்சு விட்டு நிம்மதி அடைகிறது என்றே சொல்லலாம். அதுவும் ஏறக்குறைய 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், ஊரடங்கு காரணமாக 90 சதவீதம் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. இதனால் நமது சுற்றுசூழல் முன்னேறியுள்ளதை நம்மால் காணமுடிகிறது. டெல்லி உள்பட 90 முக்கிய நகரங்களில் காற்று மாசு அடைவது முற்றிலும் குறைந்துள்ளது. அதிலும் அதிக வாகன போக்குவரத்து காரணமாக ஏற்படும் நைட்ரஜன் ஆக்ஸைடு பொலூசன், தற்பொழுது வாகனங்கள் ஓடாததால், அவற்றின் அளவு முன்பை காட்டிலும் குறைந்தே காணபடுகிறது.
உதாரணமாக புனேவில் 43 சதவீதம், மும்பையில் 38 சதவீதம், அஹமெதாபாத்தில் 50 சதவீதம் என தெரியபடுகிறது. Air Quality Index அதாவது காற்றின் தர அட்டவணைப்படி, டெல்லி மற்றும் 39 நகரங்கள், நல்ல முறையிலும், அடிக்கடி மாசு அடையக்கூடிய 51 நகரங்கள் தற்பொழுது திருப்தி அளிக்கும் வகையிலும் காணபடுகின்றது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 21ம் தேதி மற்றும் ஏப்ரல் 3 தேதி நிலவிய காற்று மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதிகம் மாசு அடையக்கூடிய நகரங்களின் பட்டியல்களை வெளியிட்டனர். அதில் தலைநகர் டெல்லியில் 189ல் இருந்து 79வும், ஹைதராபாத் 90ல் இருந்து 73வும், பெங்களூர் 105ல் இருந்து 69வும், சென்னை 70ல் இருந்து 56 குறைந்துள்ளதை அறிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஊரடங்கு நீடிக்கும் வகையில் இருந்தால், நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசு இன்னும் அதிக அளவு குறைய வாய்ப்புள்ளது. தேவையற்ற பயன்பாட்டினை குறைத்ததால், எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பதை அனைவரும் அறியமுடியும், நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு முன்பு, கவனிக்கவேண்டியவை ஓன்று மட்டும் தான். இந்த உலகம் நமகானது மட்டும் தானா, அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், கலை என விண்வெளியில் வீடு கட்டி வாழு முயற்சித்து கொண்டு இருக்கும் அசுர சக்தி கொண்ட மக்களை, அணுவை விட சிறிய ஒரு வைரஸ் திணறடித்து, உக்கிர தாண்டவம் ஆடுகிறது என்றால், நாம் பாலாக்கி கொண்டு இருக்கும் இந்த இயற்கை அசாத்தியமானது தானே.
நாம் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டவர்கள் என்பதை இனியாவது புரிய முயற்சிப்போம். எந்த நிலையிலும் நம்மை காத்த இந்த இயற்கையை இனியாவது வருத்தாமல் காப்போம்.
No comments:
Post a Comment