ஆஸ்திரேலியா அருகில் அமைந்துள்ள பீகான் தீவில் இருந்து, ஆய்வாளர்கள் குவியல்
குவியலாக எலும்பு கூடுகளை கண்டெடுத்துள்ள சம்பவம் திகிலூட்டும் வகையில்
அமைந்துள்ளது. மேலும் இந்த தீவை கொலைகார தீவு என்று தான் அறியபடுகிறது.
கடந்த 1629 ம் ஆண்டு பட்டாபியா
என்ற கப்பல் விபத்து ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து மாலுமிகள் உள்ளிட 40 பேர் பீகான் தீவில் கரையேறினார்கள். ஆனால் அங்குள்ள பழங்குடியின
மக்களால், அனைவரும் படுகொலை
செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மூன்று மாதகால இடைவெளியில் ஆண்கள், பெண்கள் மற்றும்
சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 125 பேர் கொடூரமான
சித்ரவதைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்த
பட்டுள்ளது.
இதில் சில பெண்கள் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, சித்ரவதைக்கு
பின்னரே படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கின்றனர். கடந்த 1960 ம் ஆண்டு முதன் முறையாக இந்த பகுதிக்கு ஆய்வுக்காக சென்ற
ஆய்வாளர்களுக்கு குவியல் குவியலாக எலும்பு கூடுகள் சிக்கியது. அதன் பின்னர்
மேற்கொண்ட பல ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இப்படி இறந்திருக்கலாம்
என்ற திகிலூட்டும் உண்மைகளை வெளி உலகிற்கு பதிவு செய்தனர்.
2015
ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்பு கூடுகளில், சிறுவர் உள்ளிட்ட
ஒரு குடும்பமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இருப்பினும் இந்த படுகொலைகளை
நிகழ்த்தியது யார் என்று உண்மையை ஆய்வாலர்களால் ஒரு குறிப்பிட்ட முடிவு எடுக்க
முடியவில்லை. இதனால் ஆராய்ச்சி மேலும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தொல்பொருள்
ஆராச்சியாளர் குழு இந்த ஆய்வில் தீவிரம் காட்டி வருவது குறிபிடத்தக்கது.
No comments:
Post a Comment