Thursday, 14 May 2020

பாலியல் குற்றங்களுக்கு சங்ககாலத்தில் வழங்கப்பட்ட தண்டனை


    கல்லூர் எனும் ஊரில் அறம்குறவர் என்னும் மக்கள் மன்றம் ஓன்று இருந்தது. ஒருமுறை ஒரு கயவன், ஒரு பெண்ணை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளான். அந்த பெண் அவ்வூர் மக்கள் மன்றத்தில் முறையிட்டால். நீதிபதிகள் விசாரித்த போது, அந்த கயவன் "இவள் யார் என்று தெரியவில்லை" என்றும் "இவளை நான் பலத்காரம் செய்யவில்லை" என்றும் பொய்யுரைத்தான். நீதிபதிகள் பலரிடம் உண்மையை விசாரித்த பின் பொய்யுரைத்த அந்த கயவனுக்கு தண்டனை வழங்கினர்.
    அந்த கயவனின் உற்றார் உறவினரை அழைத்தனர். அவர்களின் கையாலேயே கயவனின் தலையில் கொதிக்கும் சுண்ணாம்பு நீரை கொட்டும்படி செய்து கயவனின் அழகை அளித்தனர். இவ்வாறு பெண்ணை ஏமாற்றியவனுக்கு, சங்ககாலத்தில் தீர்ப்பு வழங்கியதாக அகநானூறு பாடல் கூறுகிறது. இவ்வாறு பெண்ணிற்கு ஏற்படும் கொடுமைகளுக்கு, சங்ககாலத்தில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது. சங்க காலத்திலும் தற்காலத்திலும் ஒரு பெண்ணை கற்பழித்தல் என்பது குற்றமாகவே கருதப்பட்டு அதற்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. 
     ஆனால் அக்காலத்தில் பாலியல் வழக்கு என்றால் FIR இல்லை, வாய்தா இல்லை, ஜாமீன் இல்லை, வழக்கு நிலுவை இல்லை, விடுதலையும் இல்லை குற்றத்திற்கு உடனடி தண்டனை வழங்கப்பட்டது. சங்க காலத்தில் குற்றத்தை விசாரிக்கும் போது, பொய்யுரைக்கும் வழக்கம் இல்லை. அதையும் மீறி பொய்யுரைத்தால், அவர்கள் நரகத்திற்கு செல்வர் என்றும், அவர்கள் கால் மறத்து மரமாகும் என்றும் நம்பப்பட்டு வந்ததால், குற்றம் செய்தவர்கள் பெரும்பாலும் பொய்யுரைப்பது இல்லை. சங்க காலத்தில் அறத்தின் வழியில் குற்றத்திற்கு தண்டனை வழங்கப்பட்டது. தற்காலத்தில் சட்டப்படி குற்றத்திற்கு தண்டனை வழங்கபடுகிறது. 
     ஆனால் காலம் தாழ்ந்து தரப்படும் நீதியும், தண்டனையும் தர்மத்தை கொள்வதற்கு சமம் என்று எண்ணிய காலம் அது. விஞ்ஞான காலத்தில், சங்க காலம் போல் வாழ்வது கடினம். ஆனால் சங்க கால தண்டனை முறை என்பது விவாதிக்கபட வேண்டிய ஓன்று. குற்றத்திற்கு தண்டனை வேண்டும் அதுவும் உடனே வேண்டும்.

No comments:

Post a Comment