உயிரின்
எடை 21 கிராம் என்ற தகவலை நாம் அதிகமான முறை மற்றவர் சொல்லி அறிந்திருப்போம்.
முதன் முதலாக எப்பொழுது மற்றும் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது
பற்றி சிலருக்கு தெரியாது.
19௦1 ம்
ஆண்டு, Dr. Duncan Macdougall என்பவர் ஒரு வித்தியாசமான ஒரு
ஆராய்ச்சியை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தார். அவருடைய ஆராய்ச்சியின் மூலமாக மனித
உயிருக்கு எடை இருக்கிறது என்றும்,
அதை தான்
நிருபிக்க இருப்பதாகவும் அறிவித்தார். இதற்காக இறக்கும் நிலையில் இருந்த 6
நோயாளிகளை தேர்ந்தெடுத்தார். அந்த 6 நோயாளிகளையும்,
weighing scale வைத்து
தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தார் Dr. Duncan Macdougall. இதற்காக ஒரு பெண் மற்றும் 5 ஆண்
நோயாளிகளை தேர்ந்தெடுத்தார். அந்த நோயாளிகள் அனைவரும் காச நோயால் பாதிக்கப்பட்டு
இருந்தனர்.
இந்த
ஆராய்ச்சியை Dr. Duncan Macdougall
மட்டும் தனியாக மேற்கொள்ளாமல்,
அவருடன் 4 மருத்துவர்களையும் இணைத்துக்
கொண்டார். தொடர்ந்து நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரு நோயாளி உயிரிளகிறார், அந்த சமயத்தில் ஒரு ஆச்சரியாமான
நிகழ்வு நடக்கிறது. அந்த நிகழ்வு என்னவென்றால்,
இறந்து போன நோயாளியின் உடலில் இருந்து கிட்டத்தட்ட 21 கிராமுக்கு சமமான அளவுக்கு
எடை குறைந்துள்ளதை Dr.Duncan Macdougall கவனித்துள்ளார். இதை மற்ற மருத்துவர்களும்
கவனித்துள்ளனர்.
இதன் பிறகு
நோயாளிகள் ஒருவர் பின் ஒருவராக இறக்க தொடங்கினர். ஆனால், அனைவரிடமும் இதே போன்ற எடை குறைந்ததா
என்றால் இல்லை என்று தான் கூறுகின்றனர். சிலருக்கு சில கிராம் குறைந்துள்ளது.
ஒருத்தருக்கு இறந்த பிறகு 1 நிமிடம் கழித்து தான் அவரின் உடல் எடையில் சில மாற்றம்
ஏற்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சின் மூலம் ஒரு மனிதன் இருக்கும் போது அவர்களின்
எடையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதாக அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், இந்த ஆராச்சியின் மூலமாக ஒரு
நிலையான முடிவுக்கு வரமுடியவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு Dr. Duncan
Macdougall இதே
ஆராய்ச்சியை நாய்களை கொண்டு மேற்கொண்டார். ஆனால் அது எந்த விதமான பலன்களையும்
கொடுக்கவில்லை.
இதே மாதிரியான
ஆராய்ச்சியை 1917 ம் ஆண்டு H.V.டிடிங் என்பவர் எலிகளை வைத்து
மேற்கொண்டார். ஆனால் எலிகளில் எந்த விதமான மாற்றங்களையும் கண்டுபிடிக்க
முடியவில்லை. Dr. Duncan Macdougall
மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய இருந்த நிலையில் 192௦ ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக
இறந்து விட்டார். அதன் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் இது ஒரு தவறான முடிவு என்றும், இதை ஏற்று கொள்ள முடியாது என்றும்
தெரிவித்தனர்.
ஆனால் இதை
நிரூபிக்க இதுவரை யாரும் முன் வரவில்லை,
இதன்
காரணமாக Dr. Duncan Macdougall
செய்த ஆராய்ச்சியின் முடிவுகளை தான் ஒரு வகையில் எடுத்துகொள்ள முடியும் என்று
சொல்லலாம். இது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது இது பொய் என்று
நிருபிக்க எதிர்காலத்தில் ஆராய்ச்சி கூட நடக்கலாம். ஆனால் அது எந்த அளவுக்கு
சாத்தியம் என்று தான் தெரியவில்லை.
No comments:
Post a Comment