Monday, 8 June 2020

கூடைப்பந்தாட்டம் உருவான வரலாறு

     டாக்டர் நெய்சுமித் எனும் அமெரிக்க உடற் கல்வி வல்லுநர், புதிய விளையாட்டு முறையினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் ஈடுபட்ட அனைத்து முயற்சியும் பெரும்பாலும், வெற்றியே பெற்றிருந்தது. ஒரு விளையாட்டுக்கு இலக்கும், பந்தும் மிக முக்கியம் என்ற முடிவுக்கு வந்த அவர், கால்பந்தாட்டத்தில் பயன்படுத்தும் பந்து ஒன்றை உபயோகிக்க தொடங்கினார்.

    விளையாட்டிற்கு இலக்கு ஓன்று வேண்டுமே, மற்ற எல்லா விளையாட்டிலும், இலக்கு தரையில் தான் அமைந்து இருந்தது. அந்த முறையில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும் வகையில்  இலக்கை அமைக்க விரும்பினார். இலக்கை உயரத்தில் வைத்தாட 1891-ம் ஆண்டு முடிவு செய்தார். அதுவோம் விளையாடுவோரின் கைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும் என்று, 10 அடி உயரம் என்பதையும் உறுதி செய்தார்.
   இலக்கின் இடமும், உயரமும், நிறுவும் வகையும் முடிவெடுக்கப்பட்டது இருந்தன. அதற்கான வகையில் இலக்குகளாக பயன்பட இரண்டு பெட்டிகள் தேவைப்பட்டன. டாக்டர் அவர்கள், ஒரு கட்டிட மேற்பார்வையாளர் ஒருவரிடம், வாயகலமுள்ள இரண்டு பெட்டிகளை கேட்டிருந்தார். அவரோ கடைசி நிமிடம் வரை எதுவும் தராமல், இறுதியாக பெட்டிகள் இல்லை என்று கூறிவிட்டு, பீச் பழங்கள் வைக்கின்ற கூடைகளை கொண்டு வந்து கொடுத்தார். 

     பெட்டிகள் இல்லாத நிலையில் பழக் கூடையாவது கிடைத்ததே என்ற திருப்தியில், பெட்டிகளை பொறுத்த வேண்டிய இடங்களில் பழக் கூடைகளை பொருத்திவிட்டார் டாக்டர். கூடைகளில் தான் பந்தினை எரிந்து போடவேண்டும். கூடைக்குள்ளே பந்தினை போடுவது தான் விளையாட்டின் நோக்கமாக அன்று இருந்தது. கூடைகளே விளையாட்டின் குறிக்கோளாக இருந்ததால், இதனை கூடைப்பந்தாட்டம் என்று அழைக்க தொடங்கினர். 
     கூடைக்குள் பந்து விழுந்து விட்டால், பத்தடி உயரத்தில் இருக்கும் பந்தை எடுக்க, உயரமான ஏணி ஒன்று தேவை பட்டது. அடிக்கடி பந்தை எடுப்பதற்காக ஏணியை மைதானத்திற்குள் கொண்டு வருவதை  சிரமமாக கருதினார். இதனால் பெட்டியின் அடிப்பாகத்தை திறந்து விட்டனர். இதனால் கூடைக்குள் விழுந்த பந்து தானாகவே கீழே வரத்தொடங்கியது.

    பெட்டிக்குள் அடிக்கடி பந்து விழுந்து விழுந்து விரைவில் சேதமடைய தொடங்கியது. அந்த அளவுக்கு திறம் வாய்ந்த ஒரு இலக்கு அமைப்பு தேவைப்பட்டது. அதனால், இரும்பு வளையம் ஒன்றை அந்த இடத்தில் இலக்காக பொருத்தினர். இரும்பு வளையம் இலக்காக இருந்த போதிலும், அக்காலத்தில் வைத்த பெயராலேயே, கூடைப்பந்தாட்டம் என்று, இன்றும் அழைக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment