Wednesday, 17 June 2020

பேனாவின் அறியாத ரகசியங்கள்

    நாகரிகத்திற்கும் எழுத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்பார்கள். பேனாவின் வருகையால்தான் எழுத்து கலை வளர்ச்சி பெற்றது என்றால் அது மிகையில்லை. பென்என்ற சொல், ‘பென்னாஎன்ற லத்தின் சொல்லில் இருந்து வந்தது. பென்னா என்பது இறகை குறிக்கும்.

 ஆதிகாலத்தில் மனிதன் குகைகளில் வசித்தபோது குகைச்சுவர்களில் கூரான பொருட்களை கொண்டு நேர் கோடுகளையும் உருவங்களையும் வரைந்தார்கள். தாவரங்களின் சாரையோ மிருகங்களின் இரத்தத்தையோ விரலில் தேய்த்துக்கொண்டு எழுத்தினார்கள். பின்னர் களி மண்ணையும், சுண்ணாம்புக் கட்டியையும் பயன்படுத்தினார்கள். சீனர்கள் ஒட்டகத்தின் ரோமத்தினாலான பிரஷ்சை எழுத பயன்படுத்தினார்கள்.
   எகிப்தியர்கள் குச்சியின் முனையில் செம்பால் ஆனா நிப்பை பயன்படுத்தி எழுதினார்கள். கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் பேனாவை பயன்படுத்தி எழுதும் வழக்கம் ஏற்பட்டது. கிரேக்கர்கள் மெலுகுப்பட்டியின் மீது யானை தந்தத்தால் எழுதினார்கள். காகிதம் கண்டுபிடித்த பின்னர் இறகுகளை உபயோகித்து எழுதும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

   1780-ம் ஆண்டு இங்கிலாந்தில் தான் முதன் முதலில் எக்கு பேனா உருவாக்கப்பட்டது. ஆனால்40 ஆண்டுகள் வரை அது பிரபலமாகவில்லை. முதலில் மை ஊற்றி எழுதும் பேனாவை 1884-ல் எல்.இ.வாட்டர்மேன் என்பவர் கண்டுபிடித்தார். இந்த பேனாவின் நிப் 14 கேரட் தங்கத்தால் செய்யபட்டிருந்தது. அதன் முனை இரிடியம் என்ற உலோகத்தால் அமைக்கப்பட்டது.
   அதன்பின் மற்ற நாடுகளும் பேனா உற்பத்தியில் இறங்கின. 20-ம் நூற்றாண்டில் பல்பாயிண்ட் பேனா கண்டுபிடிக்கப்பட்டது. இன்று நாம் பல்வேறு வகையான பேனாக்களை பயன்படுத்துகிறோம். எழுத்துகலையின் வளர்ச்சிக்கு பேனா இன்றியமையாத ஓன்று. எழுதுவதற்கு இதுபோன்ற வசதியான சாதனம் வேறு ஓன்று இல்லை.

No comments:

Post a Comment