Wednesday, 22 July 2020

பெண்களிடம் அதிகரிக்கும் ஆண்மை

   பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தபிறகு அவர்கள் ஒரு ஆணாக மாற முயற்சி செய்கிறார்கள். அதாவது ஆண்களிடம் இருக்கும் எல்லா விதமான கேட்ட பழக்கங்களையும் நாமும் செய்யலாம் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இயற்கையும் கூட தன்னுடைய பங்கிற்கு ஆணாக மாற்ற முயற்சிகிறது.

    இன்றைய உலகில் இளம் பெண்களிடம் ஆண்மை தனம் அதிகம் இருப்பதாக மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 20 வயதில் இருந்து 25 வயது வரை உள்ள பெண்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கிறதாம். முகம் கை கால் மட்டும் இல்லாமல் உடல் முழுவதும் முடி வளர்வது, ஆண்களை போன்று உடல் பெருத்து தடித்து கருத்த சருமம் உருவாவது, முகத்தில் பரு தலையில் வழுக்கை என ஏரளாமான ஆண் தன்மையுடன் வளர்கிறார்கள். இவற்றை மறைப்பதற்காக அழகு நிலையங்களின் உதவியை தேடுகிறார்கள் பெண்கள். அங்கு இதற்கான சிகிச்சை இல்லை என்பது உண்மை.

    இந்த ஆண் தன்மைக்கு Polycystic Ovary என்ற சினைப்பை நீர் கட்டிகள் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்சியாளர்கள். இது தான் பெண்களின் உடலில் ரோமம் முளைக்க காரணமாக அமைவதில் இருந்து மலட்டு தன்மை வரை இழுத்து செல்கிறது. குழந்தை இல்லாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது என்றும் கூறுகின்றனர். அனைத்து பெண்களின் உடலிலும் FSH என்கிற பெண்மைக்கான ஹோர்மோணும் LH என்கிற ஆண்மைக்கான ஹார்மோனும் இருக்கும். இது சாதரணமாக 2:1 என்கிற விகிதத்தில் இருக்கும். அதாவது பெண் தன்மை இரண்டு பங்கும் ஆண் தன்மை ஒரு பங்கும் இருக்கும்.

    இதுவே சினைப்பை நீர் கட்டி உள்ள பெண்களுக்கு FSH ஹார்மோன்கள் குறைவாகம், LH ஹார்மோன்கள் அதிகமாவும் சுரக்கும். இதன் விளைவாக பெண்களின் முகத்திலும், புருவங்களிலும், மார்பகங்களிலும் ஆண்களை போல அடர்த்தியாக முடி வளரும். முடி வளரவேண்டிய தலை பகுதியில் வழுக்கை விழுக ஆரம்பிக்கும். இன்சுலின் எதிர்ப்பு அதிகமாகும். இதனால் வளர் சிதை மாற்றங்கள் உண்டாகும். ஆண்களை போல உடல் எடை அதிகமாகும். முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் தோன்றும்.

    இந்த மாற்றம் மேலும் அதிகமானால் சில பெண்களுக்கு குரல் கூட ஆண்களை போல ஆகிவிடும். மூலையில் Hypothalamus பகுதியை பாதிப்பதால் சினை முட்டை வளர்ச்சி இல்லாமல் போகும். மாதவிலக்கு தள்ளி போகும். கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படும். மேலும் கரு உண்டானால் குழந்தையின் முழு வளர்ச்சி பாதிக்கப்பட்டு குறை பிரசவம் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த சினைப்பை நீர்க்கட்டிகள் வர உடல் பருமனும் வாழ்க்கை முறை மாற்றமும் மிக முக்கிய காரணம். மாதவிலக்கு தள்ளி போக மாத்திரை எடுத்து கொள்ளும் பெண்களுக்கு, ஹோர்மோன் சமநிலை மாறுவதால், நீர் கட்டிகள் தோன்றலாம்.  

    மாதவிலக்கு சுழற்சி சரியில்லாத பெண்களுக்கும், மன உளைச்சல் ஆளான பெண்களுக்கும் இது வரலாம். மருத்துவர்களிடம் சென்று முறையான ஹார்மோன் சிகிச்சை செய்து கொண்டால், இந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment