மக்கள் இந்த கீரையை ஒரு காய்கறியாக தான் பார்க்கின்றனர். அதற்கு ஏற்ப ஆண்டு முழுவதும் பசலைக் கீரை கிடைக்கிறது. மனத்திற்கு திருப்தி தரும் அறிய தரமுள்ள முதல் கீரை பசலைக் கீரைதான். அந்த அளவிற்குச் சாப்பிடச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும் கீரை இது. அதனால் தான் தினமும் இந்த கீரையைரை வாங்கி, மற்ற கீரைகளை போலவே சமைத்து சாப்பிடுகின்றனர்.
பசலை கீரையின் மருத்துவ குணங்கள்:
# பாக்டிரியாக்கள் உடலுக்குள் சென்றுவிடாமல் தடுகிறது.
# ஆண்ட்டி ஆக்சிடேன்ட்டாக செயல்படுகிறது.
# உடலில் வீக்கம் மற்றும் அழற்சி ஏற்படாமல் தடுக்கிறது.
# உடல் முதுமை அடைவதை தடுகிறது.
# புற்று நோயையை எதிர்கிறது, மற்றும் குணமாக்குகிறது.
# உடலில் உள்ள விஷபொருட்களை அகற்றுகிறது.
# ரத்தில் சக்கரை அளவை சரியாக நிர்வகிறது.
# உடலுக்கு அதிக சக்தியை உற்பத்தி செய்து தருகிறது.
# மூளையின் செயல் திறனை புதுப்பிக்கிறது.
# தலை முடி, நகம், பற்கள் ஆரோக்கியமாக திகழ உதவுகிறது.
# தோலுக்கு நன்மை செய்கிறது.
# பார்வை திறனை கூர்மை செய்கிறது.
# இதயத்துக்கு நல்லது.
# நோய் எதிர்ப்பு சக்தியை புதுபிக்கிறது.
# தசை மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.
# ஜீரண மண்டலத்துக்கு மிகவும் நல்லது.
# நாளமில்லா சுரப்பிகள் சிறப்பாக இயங்கி, தேவையான ஹார்மோன்கள் உரிய நேரத்தில் செரிக்க உதவுகிறது.
# பசலை கீரையின் ஆங்கிலப் பெயர் SPINACH.
100 கிராம் பசலை கீரையில் உள்ள சத்துகள்
புரதம் - 2.௦ கிராம்
கொழுப்பு - ௦.7 கிராம்
நார்ச் சத்து - ௦.9 கிராம்
மாவுப் பொருள்- 3 கிராம்
கால்சியம் - 73 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 21 மில்லி கிராம்
இரும்பு - 11 மில்லி கிராம்
மக்னிசியம் - 85 மில்லி கிராம்
பொட்டாசியம் - 205 மில்லி கிராம்
சோடியம் - 60 மில்லி கிராம்
கந்தகம் - 30 மில்லி கிராம்
குளோரின் - 55 மில்லி கிராம்
வைட்டமின் சி - 28 மில்லி கிராம்
போலிக் அமிலம் - 50 மைக்ரோ கிராம்
கரோட்டீன் - 6000 மைக்ரோ கிராம்.
பசலை கீரையை எப்படி சாப்பிடுவது
பசலை கீரை சற்று உரைப்பானது. அதே நேரத்தில் சற்று இனிப்பாகவும் எளிதில் செரிக்கக் கூடியாதாகவும் இருக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, வறண்ட உடலை பளபளப்பாகவும் மாற்றுகிறது.
கீரையை ஒருமுறை மட்டும் கழுவி சாறாக அருந்துவதே அதிக அளவு நன்மை பெற எளிய வழி. இரண்டாவதாக கீரையை சிறிது சிறிதாக நறுக்கி மென்று சாப்பிடுவதும் நல்லது. மூன்றவதாக சூப், போரியல், அவியல், பச்சடி என்றும் தயாரித்து சாபிடலாம்.
ஒரு முறைக்கு மேல் கீரையை கழுவினால், கீரையில் உள்ள வைட்டமின்கள் கரைந்து குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் அதிக நேரம் வேகவைத்தாலும், கீரையில் உள்ள சத்துகள் அழிந்துவிடும். சமைத்த கீரை என்றால், அரை கப்பும், சமைக்காமல் சாலட்டாக சாப்பிடுவது என்றால் ஒரு கப் கீரை சாப்பிடலாம்.
சமைக்காத கீரை என்றால் அதில் ஒரு எலுமிச்சை பழத்தை புளிந்து சாப்பிடலாம். இதற்கு அரை முடி எலுமிச்சை பழத்தை சாறாக புளியலாம், இதனால் கீரையில் உள்ள இரும்பு சத்து மிக எளிதாக கிடைக்கும். எலுமிச்சை பழத்தில் உள்ள வைட்டமின் C யால் உறுஞ்சி கொண்டுவிடும்.
சமைத்த கீரையில் பீட்டா கரோட்டின் சத்து அதிக அளவு பிரிந்து உடலுக்கு நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் கீரையில் உள்ள போலிக் அமிலமும், வைட்டமின் C யும் குறைவாகவே கிடைக்கும். எனவே, மதிய உணவில் கொண்ட கடலை, அல்லது மொச்சை பயறு என்று எதாவது சேர்த்துக் கொண்டால், போலிக் அமிலமும், வைட்டமின் C எளிதில் கிடைத்துவிடும். இல்லை என்றால் பாசிபருப்பு கூட்டும், நல்லெண்ணெய்யும் சாதத்தில் சேர்த்து சாப்பிட்டால் இதனால் மேற்கண்ட இரு வைட்டமின்களும் எளிதில் கிடைத்துவிடும்.
கீரையை சமைக்கும் போது கீரையின் அளவை விட பருப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும். தேங்காய் துருவல் சேர்த்தால் கீரையில் மறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழிந்துவிடும். காரணம், தேங்காயில் உள்ள லாரிக் அமிலம், வைரஸ் கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் உடனே அளித்து வெளியேற்றி விடுகிறது. தேங்காய் பாலும் சேர்க்கலாம்.
பசலை கீரையை யாரெல்லாம் சாப்பிடகூடாது.
100 கிராம் கீரையில் சிறுநீரக கற்களை உண்டாக்கும் ஆக்ஸாலிக் அமிலம் 660 மில்லிகிராம் என்ற அளவில் இருக்கிறது. ஆக்ஸாலிக் அமிலம் ரத்தத்தை சுத்தபடுத்துகிறது. அதே நேரத்தில், இந்த அமிலம் ரத்தத்தில் அதிகம் சேர்ந்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் ஒரு கிண்ணம் அல்லது அரை கிண்ணம் என்ற அளவில் பயமின்றி சாபிடலாம். அதிகம் வேண்டாம்.
அதே நேரத்தில், சிறுநீரக கற்கள் தொடர்பாகவும், கல்லிரல் நோய் தொடர்பாகவும், சிகிச்சை பெறுகிறவர்கள் முற்றிலுமாக பசலை கீரையை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லையென்றால், உங்கள் மருத்துவர் அல்லது சத்துணவு நிபுணர் ஆகியோரின் ஆலோசனைப்படி சாபிடலாம்.
பற்சிதைவையும், பல் ஈறுகளில் உள்ள பிரச்சனைகளையும், முக்கியமாக பல் வலியை குணமாக்க தலா 5௦ கிராம் பசலை கீரை, கேரட் என இரண்டையும் சாறாக்கி, (கீரை சாரை வடிகட்ட வேண்டும்) ஒன்றாக கலந்து குடித்து வந்தால், பற்கள் விழுந்துவிடாமல் உறுதியாக நிற்கும். பற்களின் ஆரோக்கியத்திற்கு இந்த சாறு மிகவும் நல்லது.
மலசிக்கல் இருந்தால் கூட, 5௦ கிராம் கீரையை நல்ல சுத்தம் செஞ்சு, மிக்சி மூலமா சாறாக்கி வடிகட்டி அருந்தவும். இது குடலுக்கு சக்தியை கொடுத்து, கழிவுகளை எல்லாம் வெளியே கொண்டுவந்துடும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது இந்த பசலை கீரை.
சிறுநீர் நன்கு பிரிய பசலை கீரை சாரில் ஒரு இளநீரைக் கலந்து தினம் இரு வேலை அருந்தி வரவும். இரண்டிலும் உள்ள நைட்ரேட் உப்பும், பொட்டாசியம் உப்பும், சிறுநீர் நன்கு பிரிய உதவும். சிறுநீர் பைகளின் வீக்கம், சிறுநீரகங்களின் வீக்கம் என அனைத்தும் குணமாகும்.
அடிக்கடி காய்ச்சல் என்பவர்களும், நாள்பட்ட நோயினால் அவதிபடுபவர்களும், விரைந்து குணமாக இதில் தாராளமாக உள்ள காரச்சத்தும், பி குருப் வைட்டமீங்களும் நன்கு உதவுகின்றது. எனவே காய்ச்சலின் போது பசலை கீரை சாப்பிட மறக்காதீர்கள். இத்துடன் தயிர், பால், கேழ்வரகு ரொட்டி, என எதையாவது ஒன்றை சேர்த்து கொள்ளுங்கள். இதனால் ரத்தத்தில் பீட்டா கரோட்டீன் சத்து தாரளமாக உயர்ந்து காய்ச்சல் உடனே குணமாகிறது.
மேலும், காரச்சத்து அதிகம் உள்ள முதல் கீரை பசலை கீரை தான். இதனால், இக்கீரையை சாப்பிட்டதும், இதில் உள்ள காரசத்துகள் ரத்தத்தை சுத்தபடுத்தி விடுவதால் திசுக்களும் சுத்தமாகி நோய்க் கிருமிகளும் அழிகின்றன. இதனால் காய்ச்சலில் இருந்து மட்டும் அல்ல. நாள்பட்ட நோய்களில் இருந்தும் கூட விடுபட ஆரம்பிக்கிறோம். எனவே, தினம் சமைத்த பசலை கீரையை கிண்ணம் அளவு உணவில் சேர்த்து வாருங்கள். பச்சடியாகவும் சாப்பிடலாம்.
பசலைக் கீரையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு பிரச்சை உறுதியாக குணமாகும். காரணம், இந்த கீரையில், ஆர்ஜினைன் என்ற அமினோ அமிலம் தாரளமாக இருகின்றது. இது ஆண்மை குறைவை குணமாக்குகிறது. இத்துடன் உடல் பருமனையும் குறைகிறது. உடலில் கொழுப்பு தேங்கவிடாமல் ஆர்ஜினைன் கரைத்துவிடுகிறது. எனவே, உடல் 'சிக்' கென்று மாறுகிறது. மேலும் கொழுப்பை கரைக்கும் கால்சியமும் தாரளமாக இருப்பதால் உறுதியாக உடல் பருமன் குறையும். அழகான தோற்றத்தை பராமரிக்க பெண்களும் பசலை கீரையை பயன்படுத்தலாம்.
GOOD
ReplyDelete